Translate

Wednesday, July 18, 2012

ஸ்கின் க்ளோயிங் பீட்ரூட் ஜூஸ்

பீட்ரூட் - 1, 
புதினா - 1 கைப்பிடி, 
பனைவெல்லம் -  2 டேபிள்ஸ்பூன், 
உப்பு - தேவைக்கேற்ப, 
ஏலக்காய் - 1.


பீட்ரூட்டை தோல் சீவி, சிறிய துண்டுகளாக வெட்டி, சிறிது தண்ணீரில் போட்டு வைக்கவும். பீட்ரூட்டின் நிறமெல்லாம் அந்தத் தண்ணீரில் இறங்கும். அந்தத் தண்ணீரை அப்படியே வைத்துக் கொண்டு, பீட்ரூட்டை மட்டும் எடுத்து, புதினா, ஏலக்காய், உப்பு சேர்த்து மிக்சியில் அடித்து, வடிகட்டவும்.  

பனைவெல்லத்தைப் பொடித்துச் சேர்த்து, பீட்ரூட்டை ஊற வைத்த தண்ணீரையும் சேர்த்து, குளிர்ந்த தண்ணீர் அல்லது பால் விட்டுப் பரிமாறவும்.
டயட் செய்வோருக்கு ஸ்கின் க்ளோயிங் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்




No comments:

Post a Comment