நெயில் பாலிஷ் ரிமூவர் செய்ய சில டிப்ஸ்…
நெயில் பாலிஷை வைத்தே நெயில் பாலிஷை எடுக்கலாம். அதாவது ஏற்கனவே இருக்கிற நெயில் பாலிஷ் மேல ஒரு கோட்டிங் நெயில் பாலிஷ் போட்டு, உடனே பஞ்சால் துடைத்தால் அது போய்விடும்.
வினிகரில் பஞ்சை நனைத்து நகத்தில் துடைத்தால் நெயில் பாலிஷ் போய்விடும். மேலும் வினிகருடன் சிறிது எலுமிச்சை சாறு விட்டு, பஞ்சை அதில் நனைத்து நகத்தில் சிறிது நேரம் துடைத்தால் நெயில் பாலிஷ் அகன்றுவிடும்.
ஆல்கஹாலை வைத்து துடைப்பது இன்னொரு வகை. சிறிதளவு பஞ்சை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து நெயில் பாலிஷ் பூச்சு மீது சற்று நேரம் துடைக்க வேண்டும். இதனால் நகத்தில் இருக்கும் நெயில் பாலிஷ் முற்றிலும் எளிதாக போய்விடும்.
எலுமிச்சை ஒரு இயற்கையான நெயில் பாலிஷ் ரிமூவர். ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து நகத்தில் தேய்த்தால் நெயில் பாலிஷ் போய்விடும். இல்லையென்றால் சற்று சூடான சோப்புத் தண்ணீரில் கையை 3- 6 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் துண்டால் துடைத்தால் நெயில் பாலிஷ் போய்விடும்.
No comments:
Post a Comment