அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.
நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். சூரியன் மறைந்ததும் ஒருவரிடம். 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! மாலைநேரம் (முழுமையாக) முடிவடையட்டுமே!" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அதற்கவர், 'பகல் (வெளிச்சம்) இன்னும் எஞ்சியிருக்கிறதே!" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி நமக்காக மாவு கரைப்பீராக!" என்றார்கள். அவர் இறங்கி மாவு கரைத்தார். பின்னர், 'நீங்கள் இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதைக் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்!" என்று தம் விரலால் கிழக்கே சுட்டிக் காட்டிக் கூறினார்கள்.
No comments:
Post a Comment