Translate

Tuesday, November 26, 2013

அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு
(நபியே! அவர்களிடம்) “வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்; அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்: “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள்.

Monday, November 18, 2013

காலமானார் (வபாத் அறிவிப்பு)


மர்ஹூம் வெள்ளப்பா சேகு அப்துல் காதர் அவர்களின் மருமகனும்,மர்ஹூம் கொந்த கருணை அவர்களின் மகனும்,
சீனி முஹம்மது,முஹைதீன் கருணை முக்தார் தகப்பனாரும்,

அட்வகேட் ஹசன் அலிகான்,அப்துல் மஜீத்,சீனி முஹம்மது காமில் ஆகியோருடைய மாமனாரும்,
செய்யது முஹம்மது அலிகான்,சாஹிப் இப்ராஹிம் இவர்களின் மச்சானுமாகிய

கீழக்கரை தெற்குதெரு ஜமாத்தை சேர்ந்த அல்ஹாஜ் முஹம்மது இப்ராஹிம் அவர்கள் இன்று காலை வபாத்தானார்கள்(காலமானார்). அன்னாரின் நல்லடக்கம் நாளை(19/11/2013) சேகு அப்பா மையவாடியில் நடைபெறுகிறது.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன்.

அன்னாரின் மஹ்பிரத்துக்கு அனைவரும் எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்யுமாறு அவ‌ர‌து குடும்பத்தினர் சார்பில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது

ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். மேலும் அறிய


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு.
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.4/34

சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு


 நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.

மேலும் அறிய


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும்38/29

தீ மிதிக்க முடியுமா? மேலும் அறிய


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு
தீ மிதிப்பதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கும் பக்திக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மனிதர்களின் உள்ளங்கைகளிலும், உள்ளங் கால்களிலும் மற்ற பகுதிகளை விட வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் அதிகமாக உள்ளது. விளக்கில் தீ எரியும் போது அதில் விரலை நீட்டித் தொட்டு தொட்டு வெளியே எடுக்கலாம். ஒன்றும் செய்யாது. வைத்துக் கொண்டே இருந்தால் தான் விரலைப் பொசுக்கும். ஒரு அடுப்பில் உள்ள தீக்கங்கை ஒரு கையால் எடுத்து மறு அடுப்பில் கிராமத்துப் பெண்கள் சர்வ சாதாரணமாகப் போடுவார்கள். உள்ளங்கைகளையும், உள்ளங்கால்களையும் நெருப்பில் தொடர்ந்து வைத்துக் கொண்டு இருந்தால் தான் பொசுக்குமே தவிர நெருப்பில் வைத்து வைத்து எடுத்தால் சில நிமிடங்கள் தாக்குப் பிடிக்க முடியும். இதன் காரணமாகத் தான் கடவுள் இல்லை எனக் கூறுவோரும் தீ மிதித்துக் காட்டுகின்றனர். முஸ்லிம்களில் அறிவீனர் சிலர் முஹர்ரம் பத்தாம் நாள் அன்று இது போன்ற தீ மிதித்தலை சில பகுதிகளில் செய்கின்றனர். எவராலும் செய்ய முடிகின்ற சாதாரணமான ஒரு காரியம் அறியாமை காரணமாக அசாதாரணமான காரியமாகக் கருதப்படுகின்றது. மாரியம்மன் அருளால் தான் தீ மிதிக்கிறோம் என்று கூறுவதில் அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் தீயில் நடக்காமல் ஒரு நிமிடம் நின்று காட்டச் சொல்லுங்கள்! அல்லது உள்ளங்காலை வைக்காமல் இருப்பிடத்தை தீக்கங்கில் வைத்து பத்து விநாடி உட்காரச் சொல்லுங்கள்! மாரியம்மன் அருள் தான் காரணம் என்றால் அதையும் செய்து காட்டத் தான் வேண்டும். இதற்கு யாரும் முன் வர மாட்டார்கள். நெருப்பில் வைத்து விட்டு உடனே எடுத்து விடும் நிகழ்ச்சி தான் தீமிதிப்பதில் உள்ள சூட்சுமம். நீங்கள் தீ மிதிக்கத் தயாரா? என்று அவர் அறை கூவல் விடுத்தால் அதையும் செய்து காட்ட நாம் தயாராக இருக்கிறோம். ஆனால் அதன் பின்னர் அவர் தமது கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவரிடம் கேட்டு எழுதுங்கள்! அல்லது நாம் கூறியவாறு தீயில் ஒரு நிமிடம் உட்கார்ந்து விட்டு எந்தப் பாதிப்பும் இல்லாமல் எழுந்து காட்டட்டும். நாம் நமது கருத்தை மாற்றிக் கொள்வோம். சரி தான

Wednesday, November 13, 2013

மேலும் அறிய

சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு


அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடிபணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.3/83

கடவுளின் பெயரால் வரம்பு மீறுதல் மேலும் அறிய

சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு


யாருக்குச் செய்ய வேண்டிய கடமையாக இருந்தாலும் அதில் சரியாக நடந்து கொள்ள வேண்டும். கடவுளுக்கு வழிபாடு செய்கிறேன் என்ற பெயரில் மனைவி மக்களுக்குச் செய்யும் கடமைகளில் இருந்து கூட ஒருவன் விலகக் கூடாதென்று சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம். கடவுளை நான் வழிபடுகிறேன். பள்ளிவாயிலில் 24 மணி நேரமும் இருக்கின்றேன் என்று கூறிக் கொண்டு மனைவியைத் தெருவில் விட்டுவிட்டுச் சென்றால் அவன் கூட இஸ்லாமியப் பார்வையில் ஒரு குற்றவாளியே. உன்னுடைய கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். கண்ணுக்குச் செய்ய வேண்டிய கடமையை மனிதன் செய்ய வேண்டும். கடவுளை வழிபடுகிறேன் என்று கூறிக் கொண்டு 24 மணி நேரமும் தூங்காமல் விழித்திருக்கக் கூடாது. உன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை இருக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். இதுவும் கூட அல்லாஹ்வுக்காகச் செய்யும் மார்க்கக் கடமை தான். தொழுகை, நோன்பு போல் இதையெல்லாம் நீ செய்ய வேண்டும். செய்யாவிட்டால் அல்லாஹ் விசாரிப்பான் எனக் கூறும் மார்க்கம் இஸ்லாம். ஏனைய மதங்களில் இது போல் பார்க்க முடியாது. மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லை என்றால் அது அவனுக்கும் அவன் மனைவிக்கும் உள்ள விஷயம் என்று ஏனைய மதங்கள் கூறும். ஆனால் இஸ்லாம் என்ன கூறுகின்றது தெரியுமா? மனைவியை ஒழுங்காகக் கவனிக்கவில்லையென்றால் அதற்கும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும். ஒழுங்காக நடந்தால் பரிசும் ஒழுங்காக நடக்கவில்லையென்றால் தண்டனையும் தருகின்ற மார்க்கம் இஸ்லாம். நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். வாகனத்தில் ஏறியிருக்கும் ஒரு மனிதன் தனது சாட்டையைக் கீழே போட்டு விடுகிறான். அதை இன்னொருவன் எடுத்துக் கொடுக்கிறான். இதுவும் ஒரு நல்லறம். உன் மனைவியின் வாயில் ஊட்டும் ஒரு கவள உணவு இருக்கின்றதே அதற்குக் கூட நன்மை இருக்கின்றது. மனைவியை ஒழுங்காகக் கவனித்துக் கொண்டால் அதுவும் தொழுகை போல இறைவனிடம் பரிசு வாங்கித் தரும். ஒழுங்காக மனைவியைக் கவனிக்கவில்லையென்றால் தண்டனையைப் பெற்றுத் தருகின்றது. இப்படி ஒரு சித்தாந்தம் இந்த உலகில் இருந்தால், இதை மக்கள் எல்லோரும் பின்பற்ற ஆரம்பித்தால் எல்லாத் துறையும் சீராகுமா? ஆகாதா? கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை. உனக்கு ஒரு ஆண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்த ஆண்மையை அனுபவி! உனக்குப் பெண்மை என்ற பாக்கியத்தைத் தந்திருந்தால் அந்தப் பெண்மையை அனுபவி! மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது. ஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூன்று நபர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நான் இனி மேல் இரவில் தூங்க மாட்டேன்; விழித்திருந்து வணங்கிக் கொண்டிருப்பேன் என்றார். மற்றொருவர் நான் திருமணம் செய்யாமலே என் வாழ்க்கையைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர் நான் எப்போதும் நோன்பு நோற்றுக் கொண்டு இருக்கப் போகின்றேன் என்றார். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர்களிடம் 'நான் தொழவும் செய்கிறேன். தூங்கவும் செய்கிறேன். நோன்பும் நோற்கிறேன். நோன்பு நோற்காமலும் இருக்கிறேன். திருமணமும் செய்திருக்கின்றேன். எவன் ஒருவன் என்னுடைய இந்த வழிமுறையைப் புறக்கணிக்கிறாரோ அவன் என்னைச் சார்ந்தவன் அல்ல! என்று கூறினார்கள். கடவுளைத் திருப்திப்படுத்துகிறோம் என்ற பெயரில் நெருப்புக் குண்டத்தில் இறங்குவதும், உடம்பைக் காயப்படுத்திக் கொள்வதும், தன்னைத் தானே பல விதங்களில் வேதனைப்படுத்திக் கொள்வதும் இஸ்லாத்தில் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

Monday, November 11, 2013

சூனியம் என்பது கற்பனையே ? மேலும் அறிய


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு
இவ்வசனங்களில் (7:116, 20:66, 20:69) சூனியம் என்பது ஏமாற்றக் கூடிய தந்திரவித்தை என்ற கருத்து அடங்கியுள்ளது. சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர். இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ, ஒன்றை வேறொன்றாக மாற்றவோ எந்த வித்தையும் கிடையாது. தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துப் பின்னர் எடுத்துக் காட்ட முடியும். 7:116 வசனத்தில் "சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான். 20:66 வசனத்தில் "பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள்'' என்று அல்லாஹ் கூறுகிறான். "கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள்'' என்று அல்லாஹ் கூறவில்லை. 20:69 வசனத்தில் "சூனியம் என்பது ஒரு சூழ்ச்சி, தந்திரம்'' என்று அல்லாஹ் கூறுகிறான். மேஜிக்கில் ஒருவகை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்று புளுகுவோர், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும். இதிலிருந்தே சூனியம் என்பது வெறும் பித்தலாட்டம் என அறிய முடியும். சூனியம் குறித்து முழுவிபரங்களை அறிய 28, 285, 357, 395, ஆகிய குறிப்புக்களையும் பார்க்கவும்.

இறந்தவருக்கு ஆற்றல் உள்ளதா மேலும் அறிய


இவ்வசனத்தில் (2:259) நல்லடியார் ஒருவரின் அற்புத வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகிறது. நல்லடியார் ஒருவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்கிறான். அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே அவரது உடல் கிடந்தது. ஆயினும் தாம் எத்தனை ஆண்டுகள் இவ்வாறு இருந்தோம் என்பதை அவரால் அறிய இயலவில்லை. ஒரு நாள் தூங்கியதாகவே அவர் நினைக்கிறார். பூமிக்குள் அடக்கம் செய்யப்படாமல் பூமியின் மேற்பரப்பிலேயே இந்த நல்லடியாரின் உடல் இருந்தும் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை என்றால் பூமிக்குள் அடக்கம் செய்யப்பட்டவர்கள், எவ்வாறு இவ்வுலகில் மற்றவர்களின் நிலைகளை அறிவார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும். இறந்து போன நல்லடியார்களிடம் சில முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்கின்றனர். அவர்கள் இறந்து அடக்கம் செய்யப்பட்டுப் பல ஆண்டுகள் உருண்டோடிய பின்பும் இவ்வாறு பிரார்த்தனை செய்வது சரியானதல்ல என்பதை இந்த நிகழ்ச்சியில் இருந்து அறிந்து கொள்ளலாம். மேலும் இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் இவர் நல்லடியார் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால் தர்காக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் அனைவரும் நல்லடியார்களாகத்தான் இருப்பார்கள் என்று எந்த உறுதியும் கூற முடியாது. மறுமையில் தான் அது பற்றிய விபரம் தெரியும். எனவே சமாதிகளில் வழிபாடுகள் நடத்துவோருக்கு எதிராக இந்த ஒரு வசனமே போதுமானதாகும். தர்கா வழிபாட்டை நியாயப்படுத்துவோரின் இதர வாதங்கள் எப்படி தவறானவை என்பதை அறிந்து கொள்ள 17, 41, 49, 83, 100, 104, 121, 122, 140, 141, 193, 213, 215, 245, 269, 298, 327, 397, 427, 471 ஆகிய குறிப்புகளைக் காண்க!

பாங்கு சொல்லும் போது பேசினால் கலிமா


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு
பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்லமுடியாமல் போகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக கூறுகிறார்கள். இது ஆதாரபூர்வமான ஹதிதா?
பாங்கு சொல்லும் போது பேசினால் மரணத்தருவாயில் கலிமா சொல்ல முடியாமல் போகும் என்ற கருத்தில் எந்த ஆதாரப்பூர்வமான ஹதீசும் இல்லை. இது அடிப்படை ஆதாரமற்றதும், மக்களால் புனைந்து சொல்லப்பட்டதுமாகும். பாங்கு சொல்லப்படும் போது அதற்குப் பதில் சொல்வது நபிவழியாகும். ஒருவர் பாங்கிற்கு பதிலளிக்காமல் பேசினால் அவர் பாங்கிற்கு பதிலளிக்கவில்லை என்ற அடிப்படையில் நபிவழியைக் கடைபிடிக்கவில்லை என்று ஆகும். இச்செயலைச் செய்ததால் அவரின் மரணத்தருவாயில் கலிமா வராது என்றெல்லாம் நபிகள் நாயகம் சொல்லவில்லை. மேலும் இதை விட பெரும் பெரும் பாவங்களைப் பற்றி நபிகளார் எச்சரித்துள்ளார்கள். அது போன்ற பெரும்பாவங்களை செய்தவருக்குக் கூட மரணத்தருவாயில் கலிமா வராது என்ற நிலையை நபிகளார் சொல்லவில்லை. எனவே இது நபியின் பெயரில் மக்களால் அவிழ்த்து விடப்பட்ட கட்டுக்கதையாகும்.


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு

ஒருவன் நெருப்பை மூட்டுகிறான். அந்த நெருப்பு அவனைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கிய போது அவர்களின் ஒளியைப் போக்கி, பார்க்க முடியாமல் இருள்களில்429 அவர்களை அல்லாஹ் விட்டு விட்டான். இவனது தன்மை போன்றே (வழிகேட்டை வாங்கிய) இவர்களது தன்மையும் உள்ளது.2/17

சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு

"பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது "நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர். . கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.2/11.12

Sunday, November 10, 2013


சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன்(ரலி) அவர்கள், 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா?' என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), 'துல்யதைன் கூறுவது உண்மையா?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, 'அல்லாஹு அக்பர்' என்று சொல்லித் தம் (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தாச் செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள் 

ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்

சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு
நபி(ஸல்) அவர்கள் இரவில் படுக்கைக்கு உறங்கச் சென்ற பின்னால் தம் (வலக்) கையைத் தம் (வலக்) கன்னத்திற்குக் கீழே வைத்துக் கொள்வார்கள். பிறகு, 'அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா' (இறைவா! உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள். உறக்கத்திலிருந்து எழும்போது 'அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வஇலைஹிந் நுஷூர்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்

சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
உங்களில் ஒருவர் வறண்ட பாலைநிலத்தில் தொலைத்துவிட்ட தன்னுடைய ஒட்டகத்தை (எதிர்பாராதவிதமாக)க் கண்டுபிடிக்கும்போது, அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சியைவிடத் தன் அடியான் தவ்பா - பாவமன்னிப்புப் கோரி தன்னிடம் திரும்புவதில் அல்லாஹ் அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்

சகோதர, சகோதரிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி பரக்காத்தஹு.


எனது உம்மத்தில் ஒரு பிரிவினர் இறைவனின் கட்டளைகள் மீது நின்று கொண்டே இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவன் அவர்களுக்கு எந்தத் தீங்கும் செய்திட இயலாதுஎன நபி (ஸல்) கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னுமாஜா