Translate

Friday, March 22, 2013

உங்கள் பதில்

பிஸ்மில்லா ஹிர் ரஹ்மானிர் ரஹீம்
அஸ்ஸலாமு அழைக்கும் 
ஒருவர்க்கு தண்ணிர் இருத்தும் மாதகாணக்கில்
தயம்மும் செய்லம்மா   தண்ணிர் குளிரகா இருத்தல் 
குடா இடர் இருக்கிறது அப்பாடி இருத்தும் வயது 30து 
இவர் தயம்மும் செய்லம்மா  கேள்வி
உங்கள் பதில் அனுப்பஉம் 

Thursday, March 21, 2013

ஜும்ஆத் தொழுகை


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"ஏழு நாள்களுக்கு ஒரு முறை தலையையும் மேனியையும் கழுவிக் குளிப்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"ஏழு நாள்களுக்கு ஒரு முறை குளிப்பது அல்லாஹ்வுக்காக ஒவ்வொரு முஸ்லிமும் செய்ய வேண்டிய கடமையாகும்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
யஹ்யா இப்னு ஸயீத் அறிவித்தார். 
ஜும்ஆ நாளில் குளிப்பது பற்றி நான் அம்ர்hவிடம் கேட்டேன். அதற்கு அம்ர்h 'அன்றைய மக்கள் உழைப்பாளர்களாக இருந்தனர். அவர்கள் ஜும்ஆவுக்கு வரும்போது அதே கோலத்துடனேயே வந்து விடுவார்கள். இதனால்தான் நீங்கள் குளித்துக் கொள்ளலாமே என்று கூறப்பட்டது' என ஆயிஷா(ரலி) கூறினார் என விடையளித்தார். 
அபாயா இப்னு ரிஃபாஆ அறிவித்தார். 
நான் ஜும்ஆவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தபோது அபூ அபஸ்(ரலி) என்னைச் சந்தித்தார்கள். அப்போது 'இறைவழியில் எவருடைய பாதங்களில் புழுதி படிகிறதோ அவரை நரகைவிட்டும் இறைவன் விலக்குகிறான்" என்று நபி(ஸல்) அவர்கள் கூற செவியுற்றுள்ளேன் என்று கூறினார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் ஓடி வராதீர்கள். நடந்தே வாருங்கள். நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். கிடைத்ததைத் தொழுங்கள். தவறியதைப் பூர்த்தி செய்யுங்கள்." 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"ஜும்ஆ நாளில் ஒருவர் குளித்து, இயன்றவரை தூய்மையாகிப் பிறகு எண்ணெய் தேய்த்து நறுமணம் பூசி, (ஜும்ஆவுக்குப்) புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் அவருக்கு விதிக்கப் பட்டதைத் தொழுது, பிறகு இமாம் வந்ததும் மவுனம் காத்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடைப் பட்ட குற்றங்கள் மன்னிக்கப்படும்." 
என ஸல்மான் அல் ஃபார்ஸி(ரலி) அறிவித்தார்.

Wednesday, March 20, 2013

குர்ஆனில் முரண்பாடுகளா?

குர்ஆனில் முரண்பாடுகளா?


நம் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தி நிலவட்டுமாக!

இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உலகில் தோன்றிய மதங்கள், கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களில் பெரும்பாலானவை தன் மீது ஏவப்பட்ட கேள்விக் கணைகளுக்கு விடை இல்லாமல் காலத்தால் நிலைபெறாமல் போனதையும், பல மதங்கள் மனிதவாழ்க்கை தத்துவங்களையும் அறிவியல் கோட்பாடுகளையும் வென்றெடுக்க முடியாமல் தவிப்பதையும், இன்னும் அதன் கொள்கைகள் மனிதக் கரங்களால் மாசுபடுத்தப் பட்டுள்ளதையும் நாம் அறிவோம். ஆனால் இத்தகைய அவலங்கள் அனைத்தையும் வென்றுநிற்கும் ஒரே மார்க்கமாக என்றும் திகழ்கிறது இஸ்லாம். ஏனெனில் இஸ்லாம் - ஒட்டுமொத்த மனித சமூகத்திற்கும் இசைவானதாக இவ்வுலகைப் படைத்த இறைவனால் அமைக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்க்கை நெறியாகும். அத்தகையை நெறிமுறைகளின் தொகுப்பே திருக்குர்ஆன். 14 நூற்றாண்டுகளாக திருமறை குர்ஆன்; தன்மீது ஏவப்படும் சவால்களுக்கு ஆணித்தரமான விடைகளை இவ்வுலகிற்கு அளித்துக் கொண்டிருக்கிறது. அத்தகைய சவால்களில் ஒன்று 'குர்ஆன் வசனங்களில் முரண்பாடுகள்' என்ற சொத்தைவாதமும் ஆகும்.

திருமறை குர்ஆனின் ஒரேயொரு வசனம்கூட மனிதவாழ்க்கைக்கு பொருத்தமானதாக இல்லை என்றோ அல்லது அதில் ஒன்றோடொன்று முரண்படுகிறது என்றோ எக்காலத்திலும் நிரூபித்திட இயலாது. ஏனெனில் திருக்குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்பட்டது. அல்லாஹ் தான் அருளிய திருமறையைப் பற்றி திருக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகிறான்

அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (திருக்குர்ஆன் 4 : 82)

இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள். (திருக்குர்ஆன் 2 : 23)

எனவே ஒருவர் திருக்குர்ஆனின் வசனங்கள் ஒன்றோடொன்று முரண்படுகிறது என்று கூறுவதும், திருக்குர்ஆன் இறைவேதமா என்று சந்தேகிப்பதும் அவரது அறியாமையைத்தான் காட்டுகிறது.
2;:253 VS 2:285 – முரண்பாடு எங்கே இருக்கிறது?
திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயமாகிய சூரத்துல் பகராவின் 253 மற்றும் 285 வது வசனங்கள் ஒன்டோடொன்று மோதுவதாக கிருத்துவ ஊடகங்கள் முதல் மேற்கத்திய சிந்தனைவாதிகள் (?), நாத்திகம் பேசுபவர்கள் உட்பட தான் எந்த மதத்தில் உள்ளோம் என்பதைக்கூட அறியாதவர்கள், தங்கள் கொள்கையை வெளியே சொல்ல முடியாதவர்கள் வரை தவறாக சித்தரிக்கப்படுகிறது. அந்த இருவசனங்களும் பின்வருமாறு

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான
்.(திருக்குர்ஆன் 2 : 253)

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள். (திருக்குர்ஆன் 2 : 285)

இவ்விரு வசனங்களும் முரண்படுகிறது என்பவர்கள் அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்று 2:253ல் கூறியிருக்க 2:285 வது வசனமோ ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்றல்லவா கூறுகிறது என்று விவாதம் செய்கிறார்கள்.

முதலில் வசனம் 2:253 ன் அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்பதின் பொருள் என்ன என்பதை முதலில் கவனிக்கவேண்டும். அதன் பிறகு அதில் நாம் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதையும் ஆய்வு செய்யவேண்டும்.

அதுபோல வசனம் 2:285 ன் ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதின் பொருள் என்ன என்பதை அறிந்து விட்டு பிறகு அதில் நாம் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதையும் ஆய்வு செய்யதாலே இரு வசனங்களிலும் எந்த முரண்பாடும் இல்லை என்பதை மிகத் தௌ;ளத் தெளிவாக விளங்கலாம்.

திருமறையின் வசனம் 2:253 கூறும் மேன்மை, பதவி என்றால் என்ன?

ஒவ்வொரு நபிமார்களுக்கும்; அல்லாஹ் சில மேன்மைகளைக் கொடுத்திருந்தான். அதாவது சில நபிமார்களுக்கு பிறர் ஆச்சரியப்படும் வகையில் பற்பல அற்புதங்களைக் கொடுத்தும், சில நபிமார்களுக்கு பிரமாண்டமான ஆட்சி அதிகாரங்களைக் கொடுத்தும், சில நபிமார்களுக்கு அவர்களைப் பின்பற்றியோரின் எண்ணிக்கையாலும், சில நபிமார்களை அதிசய பிறப்பு மூலமும், சில நபிமார்களுக்கு நீண்ட ஆயுட்காலத்தைக் கொடுத்தும் மேன்மையாக்கினான்.

உதாரணமாக நபி மூஸா (அலை) அவர்களுக்கு இறைவனளித்த அற்புதங்களைக் கவனியுங்கள்.

அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
 (திருக்குர்ஆன் 7 : 107)

மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
 (திருக்குர்ஆன் 7:108)

அப்பொழுது நாம் ''மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்'' என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
 (திருக்குர்ஆன் 7:117)

மூஸாவின் கூட்டத்தாரைத் (தனித்தனியாகப்) பன்னிரண்டு கூட்டங்களாக பிரித்தோம்; மூஸாவிடம் அவர்கள் குடி தண்ணீர் கேட்டபோது, நாம் அவருக்கு ''உம்முடைய கைத்தடியால் அக்கல்லை அடிப்பீராக!'' என்று வஹீ அறிவித்தோம், (அவர் அவ்வாறு அடித்ததும்) அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் பொங்கி வந்தன..
 (திருக்குர்ஆன் 7:180)

''உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்'' என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். அவ்வாறு அடித்ததும் கடல் பிளந்தது (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.
 (திருக்குர்ஆன் 26:63)

இவ்வாறு பற்பல அற்புதங்களை அல்லாஹ் பல்வேறு நபிமார்களுக்கும் பல விதத்திலும் வழங்கியிருந்தான். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் அனுமதியின் படி சந்திரனை பிளந்தார்கள், நபி ஈஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளை மற்றும் அனுமதியின் படி பிறவிக்குருடையும், வெண்குஷ்ட நோயையும் குணப்படுத்தினார்கள் என்றெல்லாம் திருமறை குர்ஆன் கூறுகிறது
–(பார்க்க திருக்குர்ஆன் 3:49)

ஆட்சி அதிகாரத்தைப் பொருத்த வரையில் நபி ஸூலைமான் (அலை) அவர்களைப் போன்று இறைவன் வேறு எவருக்கும் வழங்கியதில்லை என்பதற்கு உதாரணமாக

(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்).
(திருக்குர்ஆன் 34:12)

அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், (தடாகங்கள் போன்ற) பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன. ''தாவூதின் சந்ததியினரே! நன்றி செய்யுங்கள். மேலும் என் அடியார்களில் நின்றும் நன்றி செலுத்துவோர் சொற்பமானவர்களே'' (என்று கூறினோம்).
 (திருக்குர்ஆன் 34 : 13)

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது; இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். இன்னும், ஷைத்தான்களிலிருந்தும் அவருக்காகக் (கடலில்) மூழ்கி வரக் கூடியவர்களை (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்;.
(திருக்குர்ஆன் 21 : 81,82)

நபி ஆதம் (அலை) அவர்களையும் நபி நூஹ் (அலை) அவர்களையும் அல்லாஹ் 900 வருடங்களுக்கும் மேல் இவ்வுலகில் வாழச்செய்தான். அத்தகைய நீண்டதொரு வாழ்வை பிற நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுக்கவில்லை. நபி ஈஸா (அலை) அவர்களை எந்த தந்தையும் இல்லாமல் அல்லாஹ் அதிசயமாகப் பிறக்கவைத்தான். அவர்களை தொட்டில் பருவத்திலேயே பேசவும் வைத்தான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கோ தாயும் இல்லை தந்தையும் இல்லை. இத்தகைய அதிசயமான பிறப்பை மற்ற நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கவில்லை.

ஒருநபிக்குக் கொடுத்த அற்புதத்தைப் போல் மற்றொரு நபிக்கு அல்லாஹ் ஏன் கொடுக்கவில்லை? என்று சிந்திப்பது அறிவுடமையாகாது. ஏனெனில் ஒருவருக்கு அற்புதங்களை கொடுப்பதும் அவரை மேன்மை படுத்துவதும் இறைவனின் விருப்பமாகும். இறைவனின் சுய விருப்பத்தில் அவனால் படைக்கப்பட்ட மற்றவர்கள் எதிர் கேள்வி கேட்கும் அளவுக்கு இறைவன் பலஹுனமானவன் அல்ல.

நபி மூஸா (அலை) அவர்கள் மாயாஜால மந்திரதந்திரங்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். அந்த மக்கள் அவ்வாறான நம்பிக்கையை மிகப் பிரம்மாண்டமாக நம்பியிருந்தார்கள். அக்கால மக்கள் அவ்வாறு மந்திரங்கள் புரிபவர்களை கடவுள் அளவிற்கு போற்றினார்கள். அம்மக்கள் எவற்றை பிரம்மாண்டம் என நம்பினார்களோ அவற்றை ஒன்றுமில்லை என்று உடைத்தெரிவதற்கு இத்தகைய அற்புதங்களை நபி மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியதாயிற்று. இருப்பினும் இவ்வுலகைப் படைத்த அல்லாஹ்தான் வணங்குவதற்கு தகுதியுள்ளவன் என்பதை நபி மூஸா (அலை) அவர்கள் உட்பட மற்ற அனைத்து நபிமார்களும் மக்கள்முன் தங்களின் சத்தியப் பிரச்சாரத்தினால்தான் நிரூபித்தார்கள்.

நபி ஈஸா (அலை) அவர்கள் 'நாங்கள் தான் இவ்வுலகில் சிறந்த மருத்துவ வல்லுனர்கள்' என்று மார்தட்டிய மருத்துவர்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். அம்மருத்துவர்களுக்கு கண்சிகிச்சையும், குஷ்டநோயைக் குணப்படுத்துவதும் பெரும் சவாலாக இருந்தது. எனவே அல்லாஹ் மருத்துவ ரீதியான அற்புதத்தை நபி ஈஸா (அலை) அவர்களுக்கு வழங்கினான்.

நபி முஹம்மது (ஸல்) அவர்களோ 'நாங்கள் தான் இவ்வுலகில் தலைசிறந்த கவிஞர்கள்' என்று பெருமை பாரட்டிக்கொண்ட கவிஞர்கள் நிறைந்த காலத்தில் வாழ்ந்தவர்கள். எனவே அல்லாஹ் தன் கட்டளைகளை தலைசிறந்த கவிஞர்கள் அனைவரையும் திக்குமுக்காடச் செய்து, உலகின் அனைத்து கவிநடைகளையும் விஞ்சும் அளவுக்கு, அரபி மொழியில் மிகவும் தரம்வாய்ந்த உயர்ந்த நடையில் எழுதப் படிக்கத் தெரியாத நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கினான். பிறகு திருக்குர்ஆன் 17:88 வது வசனத்தின் மூலம் ''இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது'' என்று (நபியே) நீர் கூறும் என்று சவால் விடுகிறான்.

நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்த காலஅளவு 63 ஆண்டுகள் மட்டுமே. இந்த 63 ஆண்டுகளில் தமது 40 வது வயதில்தான் அல்லாஹ்வினால் இறைதூதராக அறிவிக்கப்படுகிறார்கள். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளாகத்தான் இவ்வுலகில் பிரச்சாரம் செய்தார்கள். அவர்கள் பிரச்சாரம் செய்த அன்று முதல் இவ்வுலகம் முடியும் நாள்வரை நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களை பின்பற்றியோரைக் கணக்கிட்டால் 900 வருடங்கள் இவ்வுலகில் வாழ்ந்த நபி ஆதம் (அலை) அவர்களையும், நபி நூஹ் (அலை) அவர்களையும் பின்பற்றியவர்களைவிட எண்ணிக்கையால் பல்லாயிரக்கணக்கான மடங்குகள் அதிகமாகும். இவ்வாறு நபிமார்களில் அதிகமான மக்களால் பின்பற்றபட்டவர் என்ற சிறப்பையும் அல்லாஹ் நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களுக்குக் கொடுத்துள்ளான்.

எனவே இவ்வகையான அற்புதங்களை வைத்தும், பிரமாண்டமான ஆட்சி அதிகாரங்களைக் கொண்டும், அவர்களைப் பின்பற்றியோரின் எண்ணிக்கையாலும், சில நபிமார்களை அதிசய பிறப்பு மூலமும் வேறுபடுகிறார்களே தவிர அல்லாஹ் நபிமார்களில் குறிப்பிட்ட ஒருவரை தாழ்ந்தவர் என்றோ அல்லது மற்றவரை உயர்ந்தவர் என்றோ பாகுபாடாகக் கூறிடவில்லை. நபி மூஸா (அலை) அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அற்புதங்களைப் போன்று மற்ற நபிமார்களுக்கு அல்லாஹ் வழங்கவில்லை. அவ்வாறு ஏன் வழங்கவில்லை என்று முரண்டுபிடிப்பவர்களை நோக்கி அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்.

எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய மார்க்கம் அவர்களிடம் வந்த போது, ''மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை'' என்று கேட்கிறார்கள்; இதற்கு முன்னர், மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டதையும் அவர்களின் மூதாதையர்கள் நிராகரிக்க வில்லையா?
 (திருக்குர்ஆன் 28:48)
இப்போது 2:253 வது வசனத்தை படியுங்கள்
அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;.....

அத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம் என்பதில் நாம் என்ற வார்த்தை அல்லாஹ்வைக் குறிக்கிறது. அல்லாஹ்தான் நபிமார்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் பலவகையான மேன்மைகளைக் கொடுத்து அவர்களில் சிலரைவிட சிலரை மேன்மையாக்கி இருக்கின்றான் என்பது தெளிவாகிறது. அவ்வாறான மேன்மைகளைக் கொடுத்தது மனிதர்களாகிய நாம் அவர்களை பிரித்து வேற்றுமை பாராட்டுவதற்காக அல்ல மாறாக அதிலிருந்து படிப்பினை பெருவதற்காகத்தான் என்பதையும் விளங்கமுடிகிறது.

இதே வசனத்தின் (2:253) பிந்திய பகுதியில், ''அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்'' என்றும் கூறுகிறான்.
திருமறையின் வசனம் 2:285 கூறுவது என்ன?
(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள். (திருக்குர்ஆன் 2 : 285)

1. இதன் விளக்கமாவது, இறைதூதராகிய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனிடமிருந்து அவர்களுக்கு அருளப்பெற்ற திருக்குர்ஆனை இறைவனின் வார்த்தைகள் என்றும் அவைகள் அனைத்தும் உண்மையென்றும் நம்புகிறார்கள்.

2. மேலும் அல்லாஹ்வை மட்டும் கடவுளாகவும் நபி முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் இறுதித்தூதராகவும் ஏற்றுக்கொண்டு அல்லாஹ்வின் கட்டளையாகிய குர்ஆனையும் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறைகளைப் பின்பற்றும் (முஃமின்கள் எனப்படும்) இறைநம்பிக்கையாளர்களும் திருமறைக் குர்ஆனையும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் உண்மையென்று நம்புகிறார்கள்.

3. ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்'' என்று கூறுகிறார்கள் என்று அல்லாஹ் நபி முஹம்மது (ஸல்) அவர்களைப்பற்றியும் இறை நம்பிக்கையாளர்களைப் பற்றியும் இவ்வசனத்தில் சான்றிதழ் அளிக்கிறான்.

ஆகவே வசனம் 2:285 ன் ''நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை என்பதில் நாம் என்ற வார்த்தை முஸ்லிம்களைக் குறிக்கிறது. என்று கூறுகிறார்கள் என்ற வார்த்தையும் முஸ்லிம்கள் இவ்வாறு கூறுவதாகக் தெளிவுபடுத்துகிறது. 


''அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்'' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
 (திருக்குர்ஆன் 3:84) என்று மற்றொரு வசனத்தின் வாயிலாக அல்லாஹ் இவ்வாறு முஸ்லிம்களுக்கு கட்டளையும் இடுகிறான்.

எனவே மனிதர்களுக்குள் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று வழியுருத்தும் இஸ்லாமிய மார்க்கத்தில், இறைதூதர்களில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற வேற்றுமை இல்லை என்று முஸ்லிம்கள் கூறுவதை இறைவன் தெளிவுபடுத்தும் விஷயத்தில், இறைதூதர்களை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று பிரித்து வேறுபடுத்திடக்கூடாது என்ற இறைவன் கட்டளை இருக்கும்பொழுது மேற்கண்ட இருவசனங்கள் (2:253 – 2:285) முரண்படுவதாகக் கருதுவதுதான் முரண்பாடே தவிர திருக்குர்ஆனில் முரண்பாடுகள் இல்லை.

அதிமேதாவித் தனத்தின் உச்சகட்டம்.
இவ்வுலகின் ஒட்டுமொத்த பகுத்தறிவையும் முழுகுத்தகைக்கு எடுத்துள்ளதுபோல் தங்களை பகுத்தறிவாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துச் சொல்பவர்களை நோக்கி 'நம்பிக்கைகள் எல்லாம் உண்மையாகாது' என்றும் 'எதையும் கண்களால் பார்த்து அதை தொட்டு, அறிந்து, பிறகு நம்புவதே உண்மை' என்று கூறுவதையும் பார்க்கிறோம்.

இவ்வாறு கூறுபவர்களை நோக்கி பலவகையான கேள்விகள் நமக்கு எழுகின்றன. உதாரணமாக நாம் நம் பெற்றோர்களை நம்முடைய பெற்றோர்கள் என நம்பிக்கையின் அடிப்படையில்தான் நம்புகிறோம். இவ்விஷயத்தில் நாம் நம்மைத்தவிர்த்து பிறரை நம்பவேண்டும் அல்லது பிற யதார்த்த முடிவுகளை நம்பவேண்டும். நாம் இந்த உண்மையை அவர்களிடம் கூறினால் நாங்கள் டி.என்.ஏ (னுNயு) பரிசோதனைமூலம் அறிந்து கொள்வோம் என்ற பதில் வருகிறது.

நாங்கள் டி.என்.ஏ (DNA)  பரிசோதனைமூலம் அறிந்து கொள்வோம் என்று வாதிப்பது அவர்களின் அறியாமையைத்தான்; காட்டுகிறது. இவ்வாறு கூறுபவர்கள் தங்கள் பெற்றோர்களை டி.என்.ஏ (DNA)  பரிசோதனை மூலம்தான் அறிந்துகொண்டார்களா?. அப்படி டி.என்.ஏ (DNA) பரிசோதனைமூலம் அறிந்துகொள்ளவதாக இருந்தாலும் பரிசோதனையின் முடிவுகளை யதார்த்தமாக உண்மை என்று நம்பித்தான் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். இதைத்தான் நாம் நம்மைத்தவிர்த்து பிறரை நம்பவேண்டும் அல்லது பிற யதார்த்த முடிவுகளை நம்பவேண்டும் என்று கூறுகிறோம்.

'எதையும் கண்களால் பார்த்து அதை தொட்டு அறிந்து பிறகு நம்புவதே உண்மை' என்று கூறுபவர்களிடம், நீங்கள் சுவாசிக்கும் காற்றை எங்களுக்கு காட்டுங்கள், உங்களுக்கு அறிவு இருப்பதாக நம்பும் நீங்கள் அந்த அறிவை எங்களுக்கும் கொஞ்சம் காட்டுங்கள், உங்களுக்கு மூளை இருப்பதாகக் கருதும் நீங்கள் உங்களுக்கு மூளை இருக்கிறது என்பதை இவ்வுலகிற்கு நிரூபிக்கும் வண்ணம் எங்களின் கைகளுக்குத் தாருங்கள் இம்மூன்றை மட்டும் முதலில் எங்களிடம் கொண்டு வாருங்கள். அவைகளை நாங்கள் எங்கள் கண்களால் பார்த்து அவைகளை தொட்டு அறிந்து பிறகு நீங்கள் சுவாசிக்கின்றீர்கள், உங்களுக்கு அறிவு இருக்கிறது, உங்களுக்கு மூளையும் கூட இருக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம் என்று நாமும் விவாதித்தால் இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா?.

எனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பெருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான். எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்
. (திருக்குர்ஆன் 3:89,90,91)

எனவே 'நாங்கள் பகுத்திவாளர்கள்' எனக் கூறிக்கொள்பவர்களே இத்தகைய நிலையை விட்டுவிட்டு நீங்கள் திருக்குர்ஆனை திறந்த மனதுடன் ஆய்வு செய்யுங்கள். இஸ்லாம் எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பச் சொல்லவில்லை. [உதாரணத்திற்கு அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட அறிவியல் உண்மைகளில் 80 சதவீதம் உண்மைகள் 100 சதவீதம் சரியானதுதான் என்று கண்டறியப் பட்டுள்ளதாக வைத்துக்கொண்டால், எஞ்சியிருப்பது 20 சதவீத உண்மைகள்தான். அறிவியலில் ஒரு குறிப்பிட்ட உண்மையை பற்றிய விபரம் உடனடியாக கண்டறியப் படுவதில்லை. ஏனெனில் ஒரு உண்மையை உடனடியாக அது உண்மை என்று ஒப்புக் கொள்ளும் அளவிற்கோ அல்லது உடனடியாக அது பொய் என்று ஒதுக்கித் தள்ளும் அளவிற்கோ அறிவியல் இன்னும் வளர்ச்சியடையவில்லை.

இவ்வாறு மனித குலம் கொண்டிருக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு அறிவைக் கொண்டு - அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் இதுவரை அறிவியல் ரீதியாக சரி காணப்படாத 20 சதவீத வசனங்களில் - ஒரு சதவீத வசனம் கூட சரியானது அல்ல என்பதை திட்டவட்டமாக வரையறுத்துக் கூற முடியாது. அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் என்பது சதவீதம் உண்மைகள் - 100 சதவீதம் சரியானதுதான் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இதுவரை அருள்மறை குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மைகளில் - எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் சரியானது அல்ல என்று அறிவியல் ரீதியாக இன்றுவரை நிரூபிக்கப்படவில்லை. எனவே தர்க்க ரீதி விதியின்படி குர்ஆன் சொன்ன அறிவியல் உண்மைகளில் எஞ்சியுள்ள 20 சதவீத உண்மைகளும் - சரியானதாகவே இருக்க வேண்டும். மறுமை வாழ்க்கைப் பற்றி அருள்மறை சொல்லும் வசனங்கள் யாவும் அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்படாத 20 சதவீத உண்மைகளுக்குள் அடங்கியுள்ளது. எனவே தர்க்க ரீதியாக இம்மை மறுமை வாழ்க்கை பற்றிய முஸ்லிம்களின் நம்பிக்கை சரியானதுதான் என்ற முடிவிற்கு வருவீர்கள்.
Quote By Dr. Zakir Naik]
முஸ்லிம்களின் கவனத்திற்கு...
திருமறை குர்ஆனின் அறைகூவலின் அடைப்படையில் திருக்குர்ஆன் வசனங்கள் முரண்படுவதாக எவராலும் நிரூபித்திட இயலாது என்பதை திட்டவட்டமாக அறிந்துள்ள நாம் அவ்வாறு திருக்குர்ஆன் வசனங்கள் முரண்படுவதாகக் கூறுபவர்களின் விவாதங்களை மிகக் கவனமாக ஆய்வு செய்யவும் கடமைப்பட்டுள்ளோம். யூத கிருத்துவ ஊடகங்கள் இஸ்லாத்திந்கு எதிரான போக்கில் தங்களை முழுமூச்சுடன் ஈடுபடுத்தி செயல்படுகின்றன. இன்றைய இன்டெர்நெட் உலகில் இஸ்லாத்திற்கு எதிராக இணையதளங்கள் மூலம் முழுஅளவிலான தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இஸ்லாத்தைப்பற்றிய தவறான தகவல்களை அதில் பிரசுரிப்பதோடு மட்டுமல்லாது குர்ஆன் நபிமொழிகளில் அடித்தல் திருத்தல்களையும் இடைச்சொருகள்களையும் ஏற்படுத்தி இஸ்லாம் தவறானவற்றை போதிப்பதாக அறிவிக்கின்றனர். அதற்கோர் சிறந்த உதாரணம்தான் திருக்குர்ஆனின் சூரத்துல் பகராவின் 253 மற்றும் 285 வது வசனங்கள் ஒன்டோடொன்று மோதுகிறது என்ற பிரச்சாரம். இந்த இருவசனங்களைப் பற்றி இஸ்லாமிய உலகால் அங்கீகரிக்கப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்புகள் பின்வருமாறு...
From YUSUFALI Translation (2:253):  Those messengers We endowed with gifts, some above others: To one of them Allah spoke; others He raised to degrees (of honour); to Jesus the son of Mary We gave clear (Signs), and strengthened him with the holy spirit. If Allah had so willed, succeeding generations would not have fought among each other, after clear (Signs) had come to them, but they (chose) to wrangle, some believing and others rejecting. If Allah had so willed, they would not have fought each other; but Allah Fulfilleth His plan.
From PICKTHAL Translation (2:253): Of those messengers, some of whom We have caused to excel others, and of whom there are some unto whom Allah spake, while some of them He exalted (above others) in degree; and We gave Jesus, son of Mary, clear proofs (of Allah's Sovereignty) and We supported him with the holy Spirit. And if Allah had so wiled it, those who followed after them would not have fought one with another after the clear proofs had come unto them. But they differed, some of them believing and some disbelieving. And if Allah had so willed it, they would not have fought one with another; but Allah doeth what He will.
From YUSUFALI Translation (2:285): The Messenger believeth in what hath been revealed to him from his Lord, as do the men of faith. Each one (of them) believeth in Allah, His angels, His books, and His messengers. "We make no distinction (they say) between one and another of His messengers." And they say: "We hear, and we obey: (We seek) Thy forgiveness, our Lord, and to Thee is the end of all journeys."
From PICKTHAL Translation (2:285): The messenger believeth in that which hath been revealed unto him from his Lord and (so do) believers. Each one believeth in Allah and His angels and His scriptures and His messengers - We make no distinction between any of His messengers - and they say: We hear, and we obey. (Grant us) Thy forgiveness, our Lord. Unto Thee is the journeying.
மேலே கோடிட்டுக் காட்டியுள்ளபடி 285 வது வசனத்தை புரிந்து படிப்பவர்களுக்கு 253 வசனம் முரண்பாடாகத் தெரியாது. இவ்வசனத்தை முரண்பாடாகக் கூறவேண்டும் என்ற சிந்தனையில் We make no distinction between any of His messengers என்பதை குழப்பவாதிகளால் பிரித்துக்காட்டி எவ்வாறு பிரச்சாரம் செய்யப்படுகிறது என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
Mislead Translation from Anti-Islamic Websites: The messenger believeth in that which hath been revealed unto him from his Lord and (so do) believers. Each one believeth in Allah and His angels and His scriptures and His messengers We make no distinction between any of His messengers - and they say: We hear, and we obey. (Grant us) Thy forgiveness, our Lord. Unto Thee is the journeying.
அற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
 (திருக்குர்ஆன் 2:79,168,169)

எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.
 (திருக்குர்ஆன் 3:139)

கேள்வி பதில்7

இஸ்லாம் சிலை வணக்கத்தை தடை செய்திருக்கும்போது - இஸ்லாமியர்கள் கஃபாவை வழிபடுவதும் - கஃபாவுக்கு தலைவணங்குவதும் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?.

கஃபா என்பது முஸ்லிம்கள் தொழுகையின் போது நோக்கி நிற்கும் திசையாகும். முஸ்லிம்கள் கஃபாவின் திசையை நோக்கி தொழுதாலும் - கஃபாவை தொழுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இஸ்லாமியர்கள் அல்லாஹ்வைத்தவிர வேறு எவருக்கும் அல்லது வேறு எதற்கும் தலைவணங்குவதும் இல்லை. அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் அல்லது வேறு எதனையும் தொழுவதுமில்லை.

அருள்மறை குர்ஆன் இரண்டாவது அத்தியாயத்தின் 144 வது வசனம் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:
'(நபியே!.) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாகத் திருப்பி விடுகிறோம். ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள்.'


1. இஸ்லாமிய மார்க்கம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது:
உதாரணத்திற்கு இஸ்லாமியர்கள் இறைவனைத் தொழ விரும்பினால் - ஒரு சாரார் வடக்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். மற்றொரு சாரார் தெற்கு நோக்கித் தொழுவதை விரும்பலாம். ஆனால் அந்த ஏக இறைவனாம் அல்லாஹ்வைத் தொழுவதில் கூட இஸ்லாமியர்கள் ஒற்றுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்; இறைவனைத் தொழும்போது இஸ்லாமியர்கள் அனைவரும் கஃபாவை முன்னோக்க வேண்டும் என பணிக்கப்பட்டிருக்கிறார்கள். கஃபாவிற்கு மேற்குப்புறத்தில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு கிழக்குத் திசையில் கஃபா இருப்பதால்) கிழக்குத்திசை நோக்கியும் கஃபாவிற்கு - கிழக்;குத் திசையில் வாழும் இஸ்லாமியர்கள் (அவர்கள் இருக்கும் இடத்திற்கு மேற்குத் திசையில் கஃபா இருப்பதால்) மேற்குத் திசை நோக்கியும் தொழுவார்கள்.

2. உலக வரை படத்தின் மத்தியில் கஃபா அமைந்துள்ளது.
இஸ்லாமியர்கள்தான் உலக வரைபடத்தை முதன் முதலாக வடிவமைத்தார்கள். உலக வரைபடத்தை வடிவமைத்த இஸ்லாமியர்கள் உலக உருண்டையின் தெற்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - வடக்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். அப்படி வடிவமைத்தபோது இஸ்லாமியர்கள் நோக்கித் தொழும் திசையான கஃபா - உலக வரைபடத்தின் மத்தியில் அமைந்திருந்தது. பின்னர் - மேற்கத்திய உலகின் வரைபடவல்லுனர்கள் உலக வரைபடத்தை வடிவமைத்தபோது - உலக உருண்டையின் வடக்குத் திசை வரைபடத்தின் மேல் பக்கம் இருப்பது போலவும் - தெற்குத் திசை வரைபடத்தின் கீழ்புறம் இருப்பது போலவும் வடிவமைத்தார்கள். மேற்கத்தியர்கள் உலக வரைபடத்தை மாற்றி வடிவமைத்தாலும் - கஃபா அமைந்தது உலக வரைபடத்தின் மத்தியில்தான்.

3. கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறையைச் சுட்டிக்காட்டவே!
இஸ்லாமியர்கள் மக்காவிற்கு செல்லும் பொழுது மஸ்ஜிதே ஹரத்தில் உள்ள கஃபாவை சுற்றி வலம் வருவார்கள். அவ்வாறு கஃபாவை சுற்றி வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைச் சுட்டிக் காட்டவும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்திற்குரிய இறைவனும் அல்லாஹ் ஒருவனே என்பதை உணர்த்த வேண்டியும் ஆகும்.

4. உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்று:
ஹஜ்ர் அல் - அஹ்வத் என்னும் கருப்புக் கல்லைப்பற்றி அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஒன்றில் கீழக்கண்டவாறு அறிவிக்கிறார்கள்:
'நல்லதோ அல்லது கெட்டதோ செய்ய முடியாத கல் என்பதை நான் அறிவேன். அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உன்னைத் தொட்டு - முத்தமிடுவதை நான் பார்த்திருக்காவிட்டால் நானும் உன்னைத் தொட்டு முத்தமிட்டிருக்க மாட்டேன்'.
மேற்படி செய்தி ஸஹீஹுல் புஹாரி என்னும் செய்தி புத்தகத்தில் 56வது அத்தியாயத்தில் 675வது செய்திகாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

5. கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்தல்:
அண்ணல் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் - நபித் தோழர்கள் கஃபாவின் மேல் ஏறி நின்று தொழுகைக்காக அழைப்பு விடுத்துள்ளனர். கஃபாவை வணங்குவதாக இஸ்லாமியர்களை நோக்கிக் குற்றம் சுமத்துபவரை பார்த்து கேட்கிறேன் - எந்தச் சிலை வணங்கி அவர் வணங்கக் கூடிய சிலையின் மீது ஏறி நிற்பார்?.


நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா

நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாஇஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம். அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியதன் அவசியம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா – சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்: -
இந்த நாளைக் கொண்டாடுவதன் மூலம் நாங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை
மதிக்கின்றோம்!
பல நாடுகளில் பெரும்பாண்மையான மக்கள் செய்கின்றனரே!
மீலாது விழாக்கள் மூலம் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில் இருத்திக்கொள்கிறோம்.
இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய பயபக்தியுடைய மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.
இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது அன்பு செலுத்துகிறோம்.
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம் மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்.
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!
கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?
1) இஸ்லாம் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கம்:
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், திருத்தூதருமாவார்கள்: அவர்கள் நபி மார்களுக்கு எல்லாம் இறுதி முத்திரையாக இருக்கிறார்கள்: மொத்த சமுதாயத்திற்கும் தலைவராக இருக்கிறார்கள் என்று நான் சாட்சி கூறுகிறேன். அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் முஹம்மது (ஸல்)
அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தினர் மீதும், அவர்களுடைய தோழர்கள் மற்றும் அவர்களை இறுதி தீர்ப்பு நாள் வரை பின்பற்றக் கூடியவர்கள் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.
அல்லாஹ் ஸுப்ஹானஹுவத்தஆலா, அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை, நேர்வழிகாட்டியுடனும், மனித குலத்திற்கு ஓர் அருளான சத்திய இஸ்லாமிய மார்க்கத்துடனும், நன்மைகளைப் புரிவோருக்கு ஓர் முன்மாதிரியாகவும் அனுப்பி வைத்தான். அல்லாஹ் மனித குலம் அனைத்திற்கும், அவர்கள் தங்களைச் சீர்திருத்திக் கொள்வதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும், அதாவது மார்க்கம் மற்றும் அன்றாட அலுவல்களை இறை நம்பிக்கையுடன் நடத்திச் செல்வதற்கும், நல்ல நடத்தைகளையும், அழகிய முன்மாதிரிகளையும், போற்றத்தக்க நற்குணங்களையும், நம்முடைய நபி முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகவும், அவர்களுக்கு அருளிய குர்ஆன் மற்றும் அவர்களுடைய சுன்னத்தான வழிமுறைகளின் மூலமாகவும் காட்டிவிட்டான்.
நபி (ஸல்) அவர்கள்
கூறியதாக ஒரு ஸஹீஹான ஹதீஸ் கூறுகிறது :
“நான் உங்களிடம் ஒரு ஒளிமயமான பாதையை விட்டுச் செல்கிறேன். அதில் இரவு கூட பகலின் ஒளியைப் போல் இருக்கிறது”
அன்பான சகோதர சகோதரிகளே,இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மதமும் அதனுடைய ஆன்மீக நெறி என்பதைப் பற்றி மட்டும் போதித்துக்கொண்டிருக்கும் வேளையில் இஸ்லாம் மட்டுமே ஒருவருடைய பிறப்பு முதல் இறப்பு வரை நிகழக்கூடிய அனைத்து விஷயங்களில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் அந்தந்த சூழ்நிலைகளில் ஒரு முஸ்லிம் தான் என்ன செய்ய வேண்டும் எனவும் எதை செய்யக் கூடாது எனவும் போதிக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ஒரு மனிதருடைய குடும்ப வாழ்க்கை, கொடுக்கல் வாங்கல், வணக்க வழிபாடுகள், அரசியல், சந்தோசம், துக்கம் போன்ற எல்லாத் துறைகளிலும் அவனுக்கு தேவையான அறிவுரைகளையும் விழிமுறைகளையும் காட்டி முழுமையான மார்க்கமாகத் திகழ்கிறது. இதையே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தன்னுடைய மார்க்கத்தை தான் முழுமைப் படுத்தி விட்டதாகக் கூறுகிறான்.
“இன்றைய தினம்
உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது
என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம்
மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்” (அல-குர்ஆன்
5:3)
2) அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் வழிமுறைகளையும்
பின்பற்ற வேண்டியதன் அவசியம்: -
முஸ்லிமான ஒவ்வொருவரும்
அல்லாஹ்வின் வேதத்தையும் அவனுடைய தூதரின் விழிமுறைகளையும் தம்முடைய வாழ்க்கையின்
ஒவ்வொரு விஷயத்திலும் பின்பற்றி வாழ வேண்டும் எனவும் அல்லாஹ் மற்றும் நபி (ஸல்)
அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கத்தில் எவ்வித கூடுதல் அல்லது குறைவோ
செய்யக் கூடாது எனவும் அல்குர்ஆன் நமக்கு வலியுறுத்துகிறது.
அல்லாஹ்
கூறுகிறான்: -
(நபியே!) நீர் கூறும்; “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால்,
என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக
மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும்
இருக்கின்றான். (அல்-குர்ஆன் 3:31)
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து,
உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்)
பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே
நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்-குர்ஆன் 7:3)
நிச்சயமாக இதுவே என்னுடைய
நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் – இதர வழிகளை நீங்கள் பின்பற்ற
வேண்டாம் – அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர்
வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு
போதிக்கிறான். . (அல்-குர்ஆன் 6:153)
நபி (ஸல்) அவர்கள் ஓரு சொற்பொழிவில்
கண்கள் சிவக்க குரலை உயர்த்தி கூறினார்கள்:
“…செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின்
வேதமாகும். நேர்வழியில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களின் நேர்வழியாகும்.
விஷயங்களில் கெட்டது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது (பித்அத்) ஆகும்.
ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும்.” அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதாரம் :
முஸ்லிம்
இறைத்தூதர் (ஸல்) அவர்கள்
கூறினார்கள்:-
நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில்
இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை
நிராகரிக்கப்பட்டதாகும். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), ஆதாரம் : புகாரி
எனவே
சகோதர, சகோதரிகளே மேற்கூறிய வசனங்கள் மற்றும் நபிமொழிகள் அனைத்தும் அல்லாஹ்வின்
வேதத்தையும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களையுமே நாம் பின்பற்றி வாழ
வலியுறுத்துவதை அறிகிறோம்.
3) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்
விழா இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒரு புதுமையான விஷயமே!
நபி (ஸல்)
அவர்களின் மறைவிற்குப் பிறகு இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட பல வழிகேடுகளில்,
புதுமைகளில் மீலாது விழா என்றழைக்கபடக் கூடிய நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்
கொண்டாட்டங்களாகும். இந்த தினத்தை பல்வேறு பிரிவினர் பல்வேறு விதமாகக்
கொண்டாடுகின்றனர்.
இன்றைய காலக்கட்டத்தில் தமிழகத்தில் பரவலாக காணப்படும்
இந்த மீலாது விழாக்கொண்டாங்களும் அவற்றின் போதும் நடைபெறும் அனாச்சாரங்களும்:
-
ரபியுல் அவ்வல் பிறை 12 அல்லது அந்த மாதம் முழுவதும் விழா
நடத்துகின்றனர்.
தஞ்சை, நாகை, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் வீடுகளையும்,
தெருக்களையும் அலங்கரித்து கிறிஸ்தவர்கள் தங்களின் பண்டிகைகளின் போது தொங்கவிடும்
நட்சத்திர விளக்குகளைப் போல் தொங்கவிடுகின்றனர்.
நபி (ஸல்) அவர்களைப்
புகழ்வதாகக் கூறிக்கொண்டு கூலிக்கு ஆட்களை அமர்த்தி ஷிர்க் நிறைந்த மவ்லிது
பாடல்களை பாடவிட்டு அவர்களுக்கும் அங்கு வந்திருக்கின்ற அனைவருக்கும் சீரணி மற்றும்
நெய் சோறு வழங்குகின்றனர்.
மார்க்கம் அனுமதிக்காத வகையில் கூச்சலும்
மேளதாளமும் முழங்க பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில்
போக்குவரத்துக்களை வேற்றுப்பாதைகளில் திருப்பிவிட்டு சாலைகளை அடைத்துக்கொண்டு
ஊர்வலம் செல்கின்றனர்.
அவ்வாறு உர்வலம் செல்லும் போது சில சமூக விரோதிகள்
அதன் மூலம் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி முஸ்லிம்களின் உயிர் மற்றும் பொருட்களுக்கு
சேதத்தை ஏற்படுத்துவது.
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா மேடைகளையும்
பந்தல்களையும் அமைத்து இறை நிராகரிப்பாளர்களை அழைத்து அந்த மேடையில் அமரவைத்து
அவர்களை கவுரவித்து அவர்களை முஸ்லிம்களுக்கு உரையாற்ற வைப்பது.
சிலர் அந்த
நாட்களில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறி புகழ்ந்து அவர்களிடம் நேரடியாக உதவி
கோருவது.
இவ்வாறு இந்த அனாச்சாரங்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.
எந்த வகையில் இந்த நாட்களை; கொண்டாடினாலும் எந்த நோக்கத்திற்காக கொண்டாடினாலும்
இவைகள் அனைத்தும் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன செயல்களேயாகும். இவற்றிற்கும்
இஸ்லாத்திற்கும் எவ்வித தொடர்புமில்லாதது மட்டுமல்லாமல் இவைகள் அனைத்துமே
நிராகரிக்கப்படவேண்டியவைகளாகும்.
4) நபி (ஸல்) அவர்களின் பிறந்த
நாள் விழா – சிறிய வரலாற்றுக் கண்ணோட்டம்: -
நபி (ஸல்) அவர்களின்
காலத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களால் சிறந்த சமுதாயம் என போற்றப்பட்ட சஹாபாக்கள்,
தாயீன்கள் மற்றும் தபஅ தாயீன்களின் காலத்திலோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாட்கள்
கொண்டாடப்பட வில்லை. இஸ்லாத்தின் உண்மையான கொள்கைகளைச் சிதைப்பதற்காக முதன் முதலில்
‘ஷியாக்களின் பாத்திமிட்’ ஆட்சிக்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டது தான் இந்த மீலாது
விழாக்கள். உண்மையான முஃமின்களுக்கும் ஷியாக்களின் இந்த நூதன கண்டுபிடிப்புக்கும்
எவ்வித சம்பந்தமும் இல்லை.
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்கான்
என்பவர் கூறுகிறார்: -

ஃபாத்திமிட் ஆட்சியாளர்களுக்குப் பிறகு இதை
விமர்சையாக முதன் முதலில் கொண்டாடியவர் ஈராக்கில் இர்பில் என்ற பகுதியை கி.பி.
ஆறாம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் அல்லது ஏழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஆட்சி
செய்த மன்னர் அல்-முஜஃப்பார் அபூ சயீத் கவ்கபூரி என்பவராவார்.
மற்றொரு
ஆய்வாளர் அபூ ஷாமா என்பவர் கூறுகிறார்: -
ஈராக்கின் மோசுல் நகரில் ஷெய்ஹூ
உமர் இப்னு முஹம்மது அல்-மலா என்பவர் தான் முதன் முதலில் நபி (ஸல்) அவர்களின்
பிறந்த தினத்தைக் கொண்டாடினர். பின்னர் இர்பில் நகரின் ஆட்சியாளர்களும்
மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.
அல்-ஹாபிஸ் இப்னு கதீர் அவர்கள் தன்னுடைய
‘அல்-பிதாயா வல் நிகாயா’ என்ற நூலில் மன்னர் அபூ சயீத் கவ்கபூரி அவர்களின்
சரிதையைப் பற்றிக் குறிப்பிடும் போது பின்வருமாறு கூறுகிறார்கள்: -
அவர்
ரபியுல் அவ்வல் மாதத்தில் மிகப்பெரிய விழாவை ஏற்பாடு செய்வார், முஜஃப்பரின்
விருந்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் கூறினர், ‘அவர் அந்த விழாவில் கலந்துக்
கொண்டவர்களுக்கு தீயில் சுடப்பட்ட ஐந்தாயிரம் ஆடுகளின் தலைகளையும் , பத்தாயிரம்
கோழிகளையும், ஆயிரம் பெரிய பாத்திரங்களில் உணவுகளையும், முப்பது தட்டுகளில் இனிப்பு
வகைகளையும் வழங்கியதாக கூறினர். மேலும் அந்த விழாக்களில் கலந்துக் கொண்ட
சூஃபியாக்கள் லுகர் முதல் மறுநாள் விடியற்காலை பஜ்ர் வரையிலும் ஆடிக்கொண்டும்
பாடிக்கொண்டும் இருந்ததாகவும் மன்னரும் அந்த ஆட்டம் பாட்டத்தில் கலந்துக்
கொண்டதாகவும் கூறினர்’
வரலாற்று ஆசிரியர் இப்னு கல்தான் தன்னுடைய நூல்
‘வாஃபியாத் அல்-அய்யான்’ என்னும் நூலில் கூறுகிறார்: -
‘ஸபர் மாதத்தின்
ஆரம்பத்திலேயே அவர்கள் கோபுரங்களின் உச்சிகளை அலங்கரிக்கத் துவங்கிவிடுவர்.
கோபுரங்களின் உச்சியில் பாடகர்களும், இசையமைப்பவர்களும் மற்றும் நடனமாடுபவர்களும்
அமர்ந்து ஆட்டம்பாட்டத்திலிருப்பர். ஒரு போபுரத்தைக் கூட இவ்வாறு அலங்கரிக்காமல்
விடுவதில்லை. மக்கள் அந்த நாட்களில் வேலைக்குச் செல்லாமல் அந்த வேடிக்கைகளைக் கண்டு
களித்துக் கொண்டிருப்பார்கள்’
இவ்வாறு தான் நபி
(ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா ஷியாக்களால் அறிமுகப்படுத்தப்பட்டு இஸ்லாத்தில்
ஊடுருவ ஆரம்பித்தது. மார்க்கம் அறியா பாமர மக்களும் இவ்வாறு கொண்டாடுவது புனிதம்
என்று கருதலாயினர். இதற்கு அல்லாஹ்வின் வேதத்திலோ அல்லது நபி (ஸல்) அவர்களின்
வழிமுறைகளிலோ எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. எனவே இது இஸ்லாத்தில்
தோற்றுவிக்கப்பட்ட பித்அத் என்னும் நூதன செயலேயாகும்.
ஒவ்வொரு உண்மையான
முஸ்லிமும் இதிலிருந்து தவிர்ந்துக் கொள்வதோடு அல்லாமல் இத்தகைய தீய செயல்களை
களைவதற்கு பாடுபட வேண்டும்.
5) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்
விழாக்களை ஏன் கொண்டாடக் கூடாது?
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்
கொண்டாடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. இதற்குப் பல்வேறு காரணங்கள்
இருக்கின்றது.
a) நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்தொடர்ந்த நேர்வழி
பெற்ற கலிபாக்களோ அல்லது சஹாபாக்களோ அல்லது அவர்களுக்குப் பின் வந்த இரண்டு சிறந்த
சமுதாயங்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களைக் கொண்டாடவில்லை:
-
ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
“என்னுடைய வழிமுறைகளையும்
நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழிமுறைகளையும் வலுவாகப் பற்றிப்
பிடித்துக்கொள்ளுங்கள். இவைகளை உங்களின் முன்பற்களுக்கு இடையில் பற்றிப்பிடித்துக்
கொள்ளுங்கள். (இஸ்லாத்தில்) நுழைக்கப்படும் புதிய அமல்களைப்பற்றி எச்சரிக்கையாக
இருங்கள். ஒவ்வொரு புதிய அமலும் பித்அத் ஆகும். ஓவ்வொரு பித்அத்தும் வழிகேடு ஆகும்.
ஓவ்வொரு வழிகேடும் நரகத்திற்குரியவை” என்று கூறினார்கள். (ஸஹீஹ் அல்-ஜாமிஅஸ் ஸகீர்.
ஹதீஸ் எண். 2549)
b) நாம் முன்னர் கூறியது போன்று இவ்வகையான விழாக்கள்
ஷியாக்களான ‘பாத்திமிட்’ வம்ச மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டு இஸ்லாத்தில்
நுழைக்கப்பட்டது: -
யாரேனும் ஒருவர் நான் அல்லாஹ்விடம் நெருக்கமாகுவதற்காக
நபி (ஸல்) அவர்களோ அல்லது அவர்களைப் பின்பற்றிய நபித்தோழர்களோ செய்யாத
இச்செயல்களைச் செய்கிறேன் என்று கூறினால் அவர் அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும்
மார்க்கத்தை முழுமையாக எங்களுக்குப் போதிக்க வில்லை, அதனால் மிகச்சிறந்த இந்தச்
செயலை நான் செய்கிறேன் என்று கூறி அல்லாஹ் இறக்கியருளிய
‘இன்றைய தினம்
உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது
என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்கா நான் இஸ்லாம்
மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்’ (அல் குர்ஆன் 5:3)
என்ற
வசனத்தை நிராகரித்தது போலாகும். (இவ்வாறு எண்ணம் கொள்வதிலிருந்தும் அல்லாஹ் நம்மைக்
காப்பாற்றுவானாகவும்.) ஏனென்றால் இவர் அல்லாஹ்வோ அல்லது நபி (ஸல்) அவர்களோ
போதிக்காத ஒன்றை, பிறர் மூலம் இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட ஒன்றை மார்க்கம் என்றும்
அதை செய்வதால் நன்மை கிடைக்கும் என்று கருதி செயல்படுகிறார்
c) நபி (ஸல்)
அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுவது கிறிஸதவர்களின் செயல்களைப் பின்பற்றுவது
போலாகும்: -
கிறிஸ்தவர்கள் ஈஸா (அலை) அவர்களின் பிறந்த நாள் என்று கருதி ஒரு
தினத்தைக் கொண்டாடுகின்றனர். கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவது என்பது மார்க்கத்தில்
முழுவதுமாக தடுக்கப்பட்ட (ஹராம்) ஒன்றாகும். ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் இறை
நிராகரிப்பாளர்களைப் பின்பற்றக் கூடாது என்றும் நாம் அவர்களிலிருந்து வேறுபட்டு
இருக்க வேண்டும் எனவும் நமக்குத் வலியுறுத்துகிறது.
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: -
‘யார் பிறருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே!
ஆதாரம் அபூதாவுத்.
மேலும் கூறினார்கள்
‘இறை
நிராகரிப்பாளர்களிலிருந்து வேறுபட்டு இருங்கள்’ ஆதாரம் முஸ்லிம்.
எனவே நாம்
இறைநிராகரிப்பாளர்களின் செயல்களைக் குறிப்பாக வணக்க வழிபாடுகளைப் பின்பற்றி நடக்கக்
கூடாது.
d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாக்களில் இஸ்லாம்
அனுமதிக்காத வீண் ஆடம்பரச் செலவுகளும் கேளிக்கைகளும் நடைபெறுகிறது: -
மீலாது
விழாக்கள் என்ற பெயரில் தமிழகத்தில் நடைபெறும் கூட்டங்களில் வீண் ஆடம்பரத்திற்காக
பெரும் பொருட்செலவில் பிரமாண்டமான விழா பந்தல் அமைத்து அதில் தோரணம் கட்டி அழகு
படுத்துகின்றனர். மேலும் தஞ்சை,திருவாரூர், நாகை போன்ற மாவட்டங்களில் இவ்வகை
விழாக்கள் நடைபெறும் போது கோயில் திருவிழாக்கள் தோற்றுவிடும் அளவிற்கு கடைகள்
அமைக்கப்பட்டு ஆண் பெண்கள் குழுமுகின்றனர். அது பல்வேறு அனாச்சாரங்களுக்கு வழி
வகுப்பதோடல்லாமல் இஸ்லாத்திற்கு முரணாகவும் உள்ளது.
e) இவ்வகை விழாக்களில்
ஷிர்க் நிறைந்த மவ்லிது மற்றும் புர்தா போன்ற அரபி பாடல்களை பாடுகின்றனர்:
-
இவ்விழாக்களில் கஸீதத்துல் புர்தா, சுப்ஹான மவ்லிது போன்ற அரபிப் பாடல்களை
இன்றைய கால சினிமாப்பாடல்களின் இராகத்திற்கேற்ப மெட்டு அமைத்து பாடுகின்றனர்.
இவ்வகை பாடல்களில் மூலம் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழ்ந்து அவர்களை
அழைத்து உதவியும் தேடுகின்றனர். இன்னும் சில ஊர்களில் ஒரு படி மேலே சென்று
விழாவிற்கு வந்திருக்கும் அனைவரும் எழுந்து நின்று சுப்ஹான மவ்லிதில் வரும் ‘யா
நபி’ பாடலை பாடுகின்றனர். இவ்வாறு பாடும்போது நபி (ஸல்) அவர்கள் அங்கே ஆஜர்
ஆகிறார்கள் என்றும் நம்பிக்கைக் கொள்கின்றனர். இது வெளிப்படையான ஷிர்க் என்னும்
இணைவைத்தவலாகும். நபி (ஸல்) அவர்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வது குறித்து
எச்சரித்திருக்கிறார்கள்.
‘கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸா (அலை) அவர்களை
வரம்பு மீறிப் புகழ்ந்ததைப் போல் (என்னைப்) புகழாதீர்கள். நான் அவனுடைய அடிமையே.
எனவே அல்லாஹ்வின் அடிமையும் அவனது தூதரும் ஆவார்கள் என்று கூறுங்கள்” ஆதாரம் :
புகாரி
இவ்வாறாக பல்வேறு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். விரிவுக்கு
அஞ்சி இங்கே அனைத்தையும் குறிப்பிடவில்லை.
6) நபி (ஸல்) அவர்களின் பிறந்த
நாளை கொண்டாடுபவர்களின் வாதங்கள்: -இந்த பித்அத்களைப் புரிவோர் தங்களுக்கு ஆதாரமாக
பலவகையான வாதங்களை முன் வைக்கின்றனர். இவைகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்ற மிக பல
வீனமானவைகளாகும். அவைகளை சற்று ஆராய்வோம்.: -
6a) நாங்கள் நபி (ஸல்)
அவர்களுக்கு மரியாதை செலுத்தி அவர்களை மதிக்கின்றோம் என கூறுகின்றனர்: -
நபி
(ஸல்) அவர்களை மதிப்பது என்பது,
அவர்கள் கட்டளையிட்டவற்றை ஏற்று அதன்படி
நடப்பதும்,
அவர்கள் தடுத்தவற்றிலிருந்தும் விலகி இருப்பதும்
மற்றும்
அவர்கள் மீது அன்பு செலுத்துவதும் ஆகும்.
ஆனால் ஒருவர் நபி
(ஸல்) அவர்கள் ஏவிய கட்டளைகளைப் பின்பற்றாதது மட்டுமல்லாமல் அவர்கள் தடுத்தவற்றைச்
செய்து கொண்டே நான் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறேன் என்று கூறுவது எந்த வகையில்
அறிவீனமானது என்று நாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இதற்கு
அனைவருக்கும் தெரிந்த தந்தை மகன் உதாரணம் ஒன்றைக் கூறலாம்: -
ஒருவர்
தம்முடைய தந்தையை மிகவும் மதிப்பதாகக் கூறுகிறார். ஆனால் அவர் செய்வதெல்லாம் அந்த
தந்தையின் கட்டளைக்கு நேர்மாற்றம். தந்தை எதையெல்லாம் செய்யக் கூடாது என கூறினாரே
அதை மகன் விரும்பிச் செய்கின்றார். தந்தை எதைச் செய்ய வேண்டும் என சொன்னாரோ அதை
மகன் கண்டுக்கொள்வதே இல்லை. மகனின் இந்தச் செயல் தந்தைக்கு மரியதை செலுத்தி
கண்ணியப் படுத்தியக் கருதப்படுமா அல்லது தந்தையின் பேச்சைக் கேட்காதது மூலம் அவரை
இழிவு படுத்தியதாக் கருதப்படுமா? சிந்தியுங்கள் எனதருமை சகோதர
சகோதரிகளே!
மேலும் நபி (ஸல்) அவர்களை சஹாபாக்கள் மதித்தது போல் வேறு யாரும்
மதிக்க முடியாது. ஆனால் சஹாபாக்களோ நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தைக்
கொண்டாடவில்லை. இவ்வாறு பிறந்த தினங்களைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாத்தில்
வலியுறுத்தப்பட்டிருந்தால் சஹாபாக்கள் தான் முதலில் செய்திருப்பார்கள். அந்த
அளவிற்கு நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளையையும் பின்பற்றி நடப்பவர்களாகவும் நபி
(ஸல்) அவர்களுடைய சுன்னத்தைப் பேணி நடப்பவர்களாகவும் சஹாபாக்கள் வாழ்ந்தனர். ஆனால்
யாரும் நபி (ஸல்) அவர்களின் பிறந்த தினத்தை விழாவாக கொண்டாடியதாக ஒரு சிறு ஆதாரம்
கூட கிடையாது.
இவர்கள் சஹாபாக்களை விட அதிகமாக நபி (ஸல்) அவர்களை
மதிக்கிறார்களா? அல்லது இத்தகைய நல்ல அமல்கள் சஹாபாக்களுக்குத் தெரியாமல்
போய்விட்டதா? எனவே இவர்களின் நாங்கள் நபி (ஸல்) அவர்களை இந்த விழாவின் மூலம்
மதிக்கிறோம் என்ற வாதம் அர்த்தமற்றதும் அவர்களுக்கே எதிரானதும் ஆகும்.
6b)
பெரும்பாண்மையான மக்கள் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனரே!
அதனால் நாங்களும் கொண்டாடுகிறோம்: -
நபி (ஸல்) அவர்களின் ‘(அமலில்) ஒவ்வொரு
புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை’ என்ற
கூற்றுப்படி பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பித்அத் என்றும் வழிகேடு என்று
உறுதியான பிறகு எத்தனை நபர்கள் எத்தனை நாடுகளில் பின்பற்றினால் என்ன?
உலகில்
உள்ள பெரும்பாண்மையான மக்கள் வழிகேட்டில் இருக்கிறார்கள் என்றும் அவர்களைப்
பின்பற்றினால் வழி கெடுத்து விடுவார்கள் என்றும் அல்லாஹ்
கூறுகிறானே!
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால்
அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற)
வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் – இன்னும் அவர்கள் (பொய்யான)
கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள். (அல்-குர்ஆன் 6:116)
இன்னும் அநேக
வசனங்களில் பெரும்பாலோரைப் பின்பற்றக் கூடாது என்றும் அதற்குரிய காரணத்தையும்
அல்லாஹ் விளக்குகிறான்:-
பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.
(2:100)
பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை. (2:243)
பெரும்பாலோர்
பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.(5:32)
பெரும்பாலோர்
பாவிகளாகவே இருக்கின்றனர்.(5:49)
பெரும்பாலோர் ஃபாஸிக்கு (பாவி)களாக
இருக்கின்றீர்கள் (5:59)
பெரும்பாலோர் பாவத்திலும், அக்கிரமத்திலும்
விலக்கப்பட்ட பொருள்களை உண்பதிலும் விரைந்து செயல்படுவதை (நபியே!) நீர்
காண்பீர்.(5:62)
பெரும்பாலோர் செய்யும் காரியங்கள் மிகக் கெட்டவையாகும
(5:66)
பெரும்பாலோர் நல்லறிவு பெறாதவர்களாகவே இருக்கின்றனர்
(5:103)
பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.
(6:111)
பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின்
பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (6:116)
பெரும்பாலோர், அறியாமையின்
காரணமாகத் தங்களுடைய மன இச்சைகளின் பிரகாரம் (மனிதர்களை) வழி கெடுக்கிறார்கள்
(6:119)
பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்)
பின்பற்றவில்லை (10:36)
பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.(7:117,
10:60)
பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்’
(10:92)
பெரும்பாலோர் நம்பிக்கை கொள்வதில்லை (11:17)
பெரும்பாலோர்
காஃபிர் (நன்றி கெட்டவர்)களாகவே இருக்கின்றனர். (16:83)
பெரும்பாலோர்
சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை; ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.
(21:24)
பெரும்பாலோர் அந்த உண்மையையே வெறுக்கிறார்கள்.
(23:70)
பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.(29:63)
எனவே
பெரும்பாலானோரைப் பின்பற்றுவது என்பது மேற்கூறப்பட்ட வசனங்களுக்கு
எதிரானதாகும்.
6c) மீலாது விழாக்கள் நபி (ஸல்) அவர்களை எப்போதும் நினைவில்
இருத்திக்கொள்ள உதவும்: -
நபி (ஸல்) அவர்களை மீலாது விழாக்களில்
மட்டும்தான் நினைவுபடுத்த வேண்டுமா? மற்ற நாட்களில் நினைவு படுத்தக்கூடாதா?
முஃமின்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருப்பதாக அல்லாஹ்
கூறுகிறானே (அல்-குர்ஆன் 33:21)! அப்படியென்றால் வருடத்தில் ஒருமுறை நினைவுபடுத்தி
அந்த அழகிய முன்மாதிரியைப் பின்பற்றி விட்டு மற்ற நாட்களில் நினைவு படுத்தத்
தேவையில்லையா? இல்லை சகோதர சகோதரிகளே! இது முற்றிலும் தவறு.
உண்மையான
முஸ்லிம்கள் எல்லாக் காலங்களிலும், எல்லா நேரங்களிலும் நபி (ஸல்) அவர்களை நினைவில்
இருத்திக் கொண்டே இருப்பார். அதாவது,
நபி (ஸல்) அவர்களின் பெயர் கூறப்படும்
போது அவர்கள் மீது சலவாத்து கூறுவார்கள்
நபி (ஸல்) அவர்களின் பெயர் பாங்கு,
இகாமத், குத்பா உரை மற்றும் தொழுகையின் போதும் நினைவு கூர்ந்து சலவாத்து
கூறுவார்
ஒவ்வொரு முறையும் நபி (ஸல்) அவர்கள் ஏவிய வாஜிபான, முஸதஹப்பான
கடமைகளைச் செய்யும் போதும் நினைவு கூறுவார்
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த
அன்றாடம் ஓத வேண்டிய துஆக்களை ஓதும் போதும் நினைவு கூறுவார்
இவ்வாறாக ஒரு
முஃமின் இரவு பகல் என பாராது, மீலாது விழா நாட்கள் என்றும் பாராமல் எந்நேரமும் நபி
(ஸல்) அவர்கள் ஏவிய நன்மையான செயல்களைச் செய்வதன் மூலமும் நபி (ஸல்) அவர்கள் தடுத்த
தீமையான காரியங்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் மூலமும் எந்நேரமும் நபி
(ஸல்)அவர்களை நினைவில் இருத்திக்கொண்டேயிருப்பார்.
ஆனால் நபி (ஸல்)
அவர்களின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவோர் நபி (ஸல்) அவர்கள் தடுத்த தீமையான
செயலான பித்அத் என்னும் நூதன செயலைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து
விலகி தூரமாகச் செல்கின்றனர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இந்த
வகையான பித்அத்தான விழாக்கள் தேவையில்லை. ஏனென்றால் ஏற்கனவே அல்லாஹ் நபி (ஸல்)
அவர்களை கண்ணியப்படுத்தி அவர்களின் அந்தஸ்தை உயர்த்தி விட்டான்.
அல்லாஹ்
கூறுகிறான்: -
மேலும், நாம் உமக்காக உம்முடைய புகழை மேலோங்கச் செய்தோம்.
(அல்-குர்ஆன் 94:4)
மேலும் தினமும் ஐவேளை கூறக்கூடிய பாங்கு மற்றும் இகாமத்
போன்றவற்றிலும், குத்பா பேருரைகளிலும், தொழுகையிலும் நபி (ஸல்) அவர்களின் பெயரும்
குறிப்பிடப்படுகிறது. மேலும் திருமறையை ஓதும் ஒவ்வொரு முறையும் நபி (ஸல்)அவர்களை
நினைவு கூராமலிருப்பதில்லை! இதுவே நபி (ஸல்) அவர்களைக் கண்ணியத்திற்கும், அவர்களின்
மீது அன்பு செலுத்தி அவர்களைப் பற்றிய நினைவை புதுப்பித்துக் கொள்வதற்கும்
அவர்களைப் பின்பற்றி வாழ்வதற்கான ஊக்கத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்கும்
போதுமானதாகும்.
உண்மையான முஃமின் அனு தினமும் இஸ்லாத்தின் காரியங்களைச்
செய்து வருவாராயின் அதன் மூலம் நபி (ஸல்) அவர்களை நிணைவு படுத்திக்
கண்ணிப்படுத்தியவராகக் கருதப்படுவார். மாறாக பிறந்த நாள் விழா போன்ற பித்அத்தான
செயல்களைச் செய்வதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாறு செய்பவர்கள்
எவ்வாறு நபி (ஸல்) அவர்களை நினைபடுத்தி கண்ணியப்படுத்தியவராவார்? சிந்தியுங்கள்
சகோதர சகோதரிகளே!
6d) நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
இறைவனை நெருங்குவதற்காக கல்வியறிவுடைய சிறந்த மன்னரால் அறிமுகப்படுத்தப்பட்டது:
-
பித்அத் அனைத்தும் வழிகேடுகள், அவைகள் நிராகரிக்கப்படவேண்டியவைகள்
என்றிருக்கும் போது எவ்வளவு பெரிய அறிஞரால் கல்விமான்களால்
அறிமுகப்படுத்தப்பட்டால் தான் என்ன?
6e)நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்
கொண்டாட்டம் என்பது பித்அத்துல் ஹஸனா ஆகும்.
பித்அத்துகளில் நல்லவை கெட்டவை
என்ற பாகுபாடே கிடையாது. அனைத்து பித்அத்துகளும் வழிகேடு என்று தான் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -
‘நமது
அனுமதியில்லாமல் ஓர் அமலை எவரேனும் செய்தால் அது நிராகரிக்கப்படும’ அறிவிப்பவர்:
ஆயிஷா (ரலி), ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
மேலும் கூறினார்கள்: -
‘(அமலில்)
ஒவ்வொரு புதுமைப் பழக்கமும் வழிகேடு தான்: வழிகேடுகள் அனைத்தும் நரகத்திற்கு உரியவை
தான் என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள்’ ஆதாரம்: அஹ்மத்
எனவே
அனைத்து பித்அத்களும் நரகத்திற்குரிய வழிகேடுகளேயன்றி வேறில்லை.
நபி (ஸல்)
அவர்களின் வார்த்தையான ‘அனைத்து பித்அத்களும் வழிகேடுகள்’ என்பது சுருக்கமான அதே
நேரத்தில் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய கட்டளையாகும். இது இஸ்லாத்தின் மிக
முக்கியமான கொள்கையாகும்.
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
-
‘நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது (இறைவனால்)
நிராகரிக்கப்படும்’ என்று நபி (ஸல்) கூறியதாக அன்னை ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்.
(புகாரி, முஸ்லிம் அஹ்மத்)
எனவே மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், ஒருவர்
எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இஸ்லாத்தில் புதிதாக ஒன்றை உருவாக்கினால்
நிச்சயமாக அது வழிகேடே ஆகும், எனவே அவைகள் நிராகரிக்கடவேண்டிய ஒன்றாகும். இந்த
வகையில் நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழாவும் சேரும்.
நபி (ஸல்)
அவர்களுடைய பிறந்த தினங்களை கொண்டாடுவோருக்கு நம்முடைய கேள்விகள்: -
நபி
(ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அதன் மூலம் அவர்களைக் கண்ணியப்படுத்துவதாக
இருந்தால் இத்தகைய நல்லா செயல்களை ஏன் நபித்தோழர்களும், அவர்களுக்குப் பின் வந்த
மூன்று தலைமுறையினரும் செய்யவில்லை. அவர்களுக்கு இத்தகைய நல்ல செயல்கள் தெரியவில்லை
என்று பின் இந்த சஹாபாக்களுக்குப் பின்னர் வந்த சமுதாயத்தினர் கண்டுபிடித்தார்களா?
இந்த புதுமையைக் கண்டு பிடித்தவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த
நேர்வழி பெற்ற கலீபாக்கள், சஹாபாக்கள் மற்றும் அடுத்து வந்த இரண்டு
சமுதாயத்தவர்களான தாபியீன்கள் மற்றும் தபஅ தாபயீன்களை விடச் சிறந்தவர்களா?
நிச்சயமாக இல்லை. பின்னர் அவர்களே செய்யாத புதுமையான ஒன்றை நாம் செய்ய
வேண்டும்?
6f) இஸ்லாம் நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்த வேண்டும் என
வலியுறுத்துகிறது. எனவே நாங்கள் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடி அவர்கள் மீது
அன்பு செலுத்துகிறோம்: -
நபி (ஸல்) அவர்களின் மீது அன்பு செலுத்துவது
முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமையாகும். ஒருவர் தம்முடைய உயிர், பொருள்,
குடும்பம் மற்றும் பெற்றோர்கள் இவர்கள் அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களை அதிகம்
நேசிக்காதவரை அவர் உண்மையான முஃமினாக மாட்டார். ஆனால் அதற்காக நபி (ஸல்) அவர்கள்
ஏவிய நற்செயல்களைச் செய்வதை விட்டு விட்டு அவர்கள் தடுத்த பித்அத்தான செயல்களைச்
செய்வது என்பது எவ்வாறு அறிவுப்பூர்வமானதாகும். ஒருவர் மீது அன்பு செலுத்துவது
என்பது அவர் சொன்னதையெல்லாம் செய்வதும் அவர் தடுத்ததிலிருந்து விலகி கொள்வது தானே
அவர் மீது மரியாதை செலுத்தி அன்பு செலுத்துவது ஆகும்?
நபி (ஸல்) அவர்கள்
மீது அன்பு செலுத்துவது என்பது அவர்களின் சுன்னத்தான வழிமுறைகளை பின்பற்றி அவற்றை
உறுதியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களின் சுன்னத்திற்கு மாற்றமான
செயல்களைச் செய்வதிலிருந்தும் விலகியிருத்தல் ஆகும். நிச்சயமாக நபி (ஸல்) அவர்களின்
சுன்னத்திற்கு மாற்றமான அனைத்தும் பித்அத் ஆவதோடல்லாமல் நபி (ஸல்) அவர்களுக்குக்
கீழ் படிய மறுப்பதாகும். நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவதும் இதில்
அடங்கும். ஒருவரின் நல்ல எண்ணம் அவருக்கு இஸ்லாத்தில் பித்அத்தை செய்வதற்குரிய
அனுமதி ஆகாது.
இஸ்லாம் என்பது இரண்டு முக்கியமான விஷயங்களில்
அமைந்துள்ளது.
இக்லாஸ் என்னும் மனத்தூய்மை
நபி (ஸல்) அவர்களின் வழி
முறையைப் பின்பற்றுவது.
எனவே நபி (ஸல்) அவர்கள் மீது அன்பு செலுத்துவது
என்பது நபி (ஸல்) அவர்களுடைய மற்றும் குர்ஆனுடைய கட்டளைகளை மீறி செயல்படுவது அல்ல!
மாறாக நபி (ஸல்) அவர்களுடைய சொல் செயல் அங்கீகாரம் ஆகியவைகளை ப்பின்பற்றுவதன் மூலம்
அவர்களை கண்ணியப்படுத்தி அன்பு செலுத்துவதாகும்.
6g) நபி (ஸல்) அவர்களின்
பிறந்த நாள் கொண்டாட்டத்தின் மூலம் நாம் அவர்களின் வரலாற்றைப் படித்து அதன் மூலம்
மற்றவர்களை நபி (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்ற ஊக்கப்படுத்துகிறோம்:
-
நாம் இது வரை விளக்கியவைகளே இந்தக் இவர்களின் இந்தக் கேள்விக்கும் பதிலாக
அமைகிறது. நபி (ஸல்) அவர்களின் வரலாற்றைப் படித்து அவர்கள் வாழ்ந்து காட்டிய
வழிமுறையைப் எல்லா நாட்களிலும், எல்லா நேரங்களிலும், வருடம் முழுவதும் ஏன் தாம்
மரணமடையும் வரையிலும் பின்பற்றி வாழ்வது ஒவ்வொரு முஸ்லிமுடைய கடமையாகும். ஒரு
குறிப்பிட்ட நாளில் மட்டும் அவ்வாறு செய்வது என்பது பித்அத் ஆகும். ஒவ்வொரு
பித்அத்தும் வழிகேடு ஆகும். மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் அவர் நபி (ஸல்)
அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகிச் செல்கிறார்.
7) நபி (ஸல்) அவர்களின்
பிறந்த நாளைக் கொண்டாடுவது குற்றத்திற்குரிய பித்அத்தே!: -
எந்த வகையில்
பார்த்தாலும் நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவது என்பது
குற்றத்திற்குரிய பித்அத் என்ற இஸ்லாத்தில் நுழைக்கப்பட்ட நூதன
செயலாகும்.
ஒவ்வொரு முஸ்லிமும் இந்தச் செயல்களை தடுத்து நிறுத்த
முடியுமானவரை முயற்சி எடுத்து நபி (ஸல்) அவர்களின் சுன்னாவை மேலோங்கச் செய்யப்
பாடுபடவேண்டும்.
இந்த நூதன செயல்களைச் செய்பவர்களிடமிருந்து
ஒதுங்கியிருக்கவேண்டும். ஏனென்றால் இத்தகையவர்கள் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவைப்
பின்பற்றுவதற்குப் பதிலாக புதிய அனாச்சாரங்களையும் பித்அத்களையுமே மார்க்கம் என்று
கருதி செயல்படுவர்.
எத்தனை நபர்கள் இந்த நூதன செயல்களைச் செய்தாலும் ஒரு
உண்மையான முஃமின் அவர்களைப் பின்பற்றக்கூடாது. மாறாக அல்லாஹ்வின் தூதரின்
வழிமுறையை, அதை பின்பற்றுபவர்கள் வெகு சொற்பமாயினும் சரியே அதை மட்டுமே பின்பற்ற
வேண்டும்.
சத்தியத்தின் அளவுகோல் எத்தனை நபர்கள் அதை செய்கிறார்கள் அல்லது
பேசுகிறார்கள் என்பது அல்ல! மாறாக சத்தியத்தின் அளவு கோல் உண்மையே!
8)
கருத்து வேறுபாடு ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்: -
‘உங்களில் யாரேனும் (நீண்ட நாள்) வசிப்பீர்களானால் பல
வேறுபாடுகளைக் காண்பீர்கள். என்னுடைய வழிமுறையையும் எனக்குப் பின்னால் வரக்கூடிய
நேர்வழிபெற்ற கலிபாக்களின் வழிமுறைகளையும் பின்பற்றி நடக்க நான் உங்களை
வலியுறுத்துகிறேன். அவைகளை வலுவாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்.
(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படுவதை விட்டும் எச்சரிக்கையாக இருங்கள்;
ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்’ (ஆதாரம் அஹ்மத் மற்றும் திர்மிதி)
இந்த
ஹதீஸில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடிய காலக்கட்டங்களில் நாம் எவ்வாறு
நடந்துக் கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கிவிட்டுச்
சென்றிருக்கிறார்கள். புதிதாக தோன்றக் கூடியவைகள் அனைத்தும் வழிகேடுகள் என்றும்
அவைகளை விட்டும் எச்சரிக்கையாக இருக்குமாறும் நமக்கு
வலியுறுத்திக்கிறார்கள்.
எனவே நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாளை
கொண்டாடுவதற்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளிலோ அல்லது நேர்வழிபெற்ற
கலிபாக்களின் வழிமுறைகளிலோ அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாததால் இது வழிகேட்டின்
பால் இழுத்துச் செல்லும் ஒரு பித்ஆத் ஆகும். இதுவே மேற்கூறப்பட்ட ஹதீஸின்
கருத்துப்படி உள்ள பொருளாகும். மேலும் அல்லாஹ் கூறுகிறான்: -
நம்பிக்கை
கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும்,
உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது
ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் – மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி
நாளையும் நம்புபவர்களாக இருப்பின் – அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும்
ஒப்படைத்துவிடுங்கள் – இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக
இருக்கும். (அல்குர்ஆன் 4:59)
இந்த வசனத்தில் அல்லாஹ்வுக்குக் கீழ்
படியுங்கள் என்று கூறப்பட்டிருப்பதன் விளக்கமாவது அல்லாஹ்வின் கூற்றாகிய
அல்-குர்ஆனுக்கு கீழ்படிவதாகும்.
அல்லாஹ்வின்தூதருக்கு கீழ்படியுங்கள்
என்றால் அவர்களது மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய சுன்னாவைப் பின்பற்றுதல்
என்பதாகும்.
ஏதேனும் பிணக்கு அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால்
அல்லாஹ்வுடைய வேதத்திலும் அவனுடைய தூதரின் சுன்னாவிலும் தான் தீர்வு காணவேண்டும் என
அல்லாஹ் கூறுகிறான்.
எனவே குர்ஆனிலோ அல்லது சுன்னாவிலோ நபி (ஸல்)
அவர்களின் பிறந்த நானைக் கொண்டாடுமாறு எங்கே கூறப்பட்டிருக்கிறது?
யாரேனும்
இந்தச் செயலைச் செய்தால் அல்லது நல்லது எனக் கருதினால் இதிலிருந்து அவர் உடனடியாக
மீண்டு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கேட்கவேண்டும். இதுவே உண்மையைத் தேடும் ஒரு
முஃமினின் பண்பாகும். ஆனால் இந்த உண்மை தெள்ளத் தெளிவாக விளங்கிய பின்னரும்
யாரேனும் பிடிவாதமாகவும் ஆணவமாகவும் இருந்தால் அவருடைய கணக்கு அல்லாஹ்விடமே
உள்ளது.
அல்லாஹ்வின் வேதமாகிய அல்-குர்ஆனையும் அவனுடைய இறுதி தூதர் முஹம்மது
(ஸல்) அவர்களின் தெளிவான சீரிய வழிகாட்டுதல்களையும் நாம் அல்லாஹ்வை சந்திக்கும்
வரையிலும் உறுதியாகப் பற்றிப் பிடித்துக் கொண்டு அவற்றைப் பின்பற்றி வாழ வல்ல
அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிவோம்.