Translate

Saturday, July 28, 2012

அழகான சருமத்தை தரும் வாழை இலை


முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் உடலுக்கு எவ்வாறு சிறந்ததோ, அவ்வாறே அதன் இலைகளும் மிகவும் சிறப்பான மருத்துவ குணம் வாய்ந்தது. வாழைப்பழத்தை நாம் சாப்பிட்டால் உடலின் உட்பகுதிக்கு சிறந்தது. ஆனால் அதன் இலைகளை உடலின் வெளிப்புறத்திற்கு, அதாவது சருமத்தில் ஏற்படும் பல காயங்கள் மற்றும் சருமத்திற்கு மெருகேற்ற, இது ஒரு சிறந்த அழகுப்பொருளும் கூட. இப்போது அந்த வாழை இலையை எப்படி பயன்படுத்தினால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்.
வாழை இலையின் நன்மைகள்…
* அழகை கெடுக்கும் வகையில், சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகளான பொடுகுத் தொல்லை, சொறி, சிரங்கு மற்றும் தீப்புண் போன்றவற்றிற்கு மிகவும் சிறந்தது. இதன் புதிய இலைகளில் இருந்து கிடைக்கும் ஜூஸை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவினால், அந்த பிரச்சனையானது முற்றிலும் சரியாகிவிடும். மேலும் இதன் இலையை தீக்காயங்கள் ஏற்பட்ட இடத்தின் மேல் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும்.
* வாழை இலையில் பல மருத்துவ பொருட்கள் இருப்பதால், இவை விஷமிக்க பூச்சிக்கடித்தல், தேனீக்கடி, சருமத்தில் அரிப்புகள் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. சொல்லப்போனால், இத்தகைய சிறப்பால் இதனை ஒரு இயற்கை அளிப்பான் என்றும் சொல்வார்கள்.
* அழகுப் பொருட்களான கிரீம் மற்றும் லோசனில் இருக்கும் அலன்டாயின் (Allantoin) என்னும் பொருள், இந்த சிறப்புமிக்க வாழை இலையில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த பொருள் கிருமிகளை அழிப்பதோடு, விரைவில் எந்த ஒரு பிரச்சனையையும் சரிசெய்யும். மேலும் இது புதிய செல்கள் வளரவும் வழிவகுக்கும்.
* குழந்தைகளுக்கு டயாஃபர் அணிவதால் வரும் அரிப்பு, கொசு கடி போன்றவற்றில் இருந்து காப்பாற்ற, வீட்டிலேயே இயற்கையாக மருந்துகளை வாழை இலைகளைப் பயன்படுத்தி தயாரிக்கலாம். அதற்கு வாழை இலைச்சாற்றுடன், சிறித ஆலிவ் ஆயில், சிறிது தேன் மெழுகு கலந்து, அதனை பயன்படுத்த வேண்டும்.
* மன அழுத்தம் போவதற்கும் மற்றும் மென்மையான சருமத்தை பெறுவதற்கும், வாழை இலையில் ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறெல்லாம் செய்தால், சருமமானது மென்மையடைவதோடு, எந்த ஒரு நோயும் சருமத்தில் அண்டாமல் பார்த்துக் கொள்ளலாம்.

உலர் திராட்சையின் (பிளம்ஸ்) மருத்துவக் குணங்கள்.


திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.

குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.

கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.

இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.

குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.

இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.

சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.

உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

இதோ உங்கள் முன் கடந்த நூற்றாண்டின் காட்சிகளின் சாட்சிகள் நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள் இங்கு யார் தீவிரவாதிகள் என்று..! பயங்கரவாதம்! இந்த சொல் உருவாக்கப்பட காரணமாக இருந்த நிகழ்ச்சியும் நபரும்... 1790 ம் ஆண்டு ஏற்பட்ட பிரஞ்சுப்புரட்சியின் போது உருவாக்கப்பட்ட சொல் இது. 1793 மற்றும் 1794 ஆண்டுகளில் ஆட்சிச்செய்த மேக்ஸிமிலின் ரோப்ஸியர் ஆட்சியை பயங்கரவாத ஆட்சியாக இவ்வுலகம் வர்ணித்தது. அவர் சுமார் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் தலையை துண்டித்தார். வராலற்றுக்குறிப்பில் இன்னும் விளக்கமாக பார்த்தால்... சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களை கைது செய்த அவர் அதில் சுமார் 40000 பேருக்கு மரண தண்டனை வழங்கினார். இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான நபர்களை நாடு கடத்தினார். மீதமுள்ள இரண்டு இலட்ச பேர்களை சித்ரவதை செய்து பசி, பட்டினி போட்டு சிறையிலேயே இறக்க செய்தார். 1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன். 1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள். 1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார். 1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள். 1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள். முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்! இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள். 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி! 1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார். முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது. இது எத்தனை பேருக்கு தெரியும்..? 1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார். 1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார். 1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது. அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு. நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.! 1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது. அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது நாமறிந்த ஒன்று தான் ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள். 1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது. பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள் 1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது. 1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள். 1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர். 1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான். மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..! # இலண்டனில் நூறு வருடங்களுக்கு மேலாக தீவிரவாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது I R A அமைப்பு # ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் E T A தீவிரவாத அமைப்பு # உகாண்டாவில் LORD'S சேல்வேஷன் ஆர்மி # மற்ற அனைத்தையும் விட இலங்கையின் L T T E உலகறிந்த தீவிர வாத அமைப்பு #அகிம்சையைப் பின்பற்றுவதாகக் கூறும் பெளத்தர்கள் மியான்மரில் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களை இனப்படுகொலை புரிந்துள்ளனர்... இந்தியாவில்... # பஞ்சாப்பில் பிரிந்தன் வாலா - சீக்கிய தீவிரவாத அமைப்பு பொற்கோவில் சம்பவத்திற்கு பதிலடி பெயரில் பல தாக்குதலை நடத்தியுள்ளது. # திரிபுராவில் A T T F மற்றும் N L F T போன்ற பலம் வாய்ந்த தீவிர வாத அமைப்புகள் பல தாக்குதலை நடத்தி வருகிறது. # அஸ்ஸாமில் 1900- 2006 வரை உல்பா தீவிரவாதிகள் 749 பயங்கரவாத தாக்குதலை நடத்தியுள்ளது. # நக்ஸலைட் அல்லது மாவோயிஸ்ட்கள் - 2000 முதல் 2006 வரை நேபாளில் மட்டும் 99 தீவிரவாத தாக்குதல் நடத்தியுள்ளார்கள் 2009 ஆம் ஆண்டின் படி, இந்தியா முழுவதுமுள்ள 21 மாநிலங்களில் உள்ள 220 மாவட்டங்களில், அதாவது இந்தியாவின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 40 சதவீதப் பகுதிகளில் நக்சலைட்டுகள் இயங்கி வருகின்றனர் அத்தோடு இந்திய நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அவர்களின் தாக்குதலுக்கும் இரையாகி உள்ளது. (காஷ்மீர் தீவிரவாத தாக்குதலை விட இது மிக அதிகம்) எனவே தான் மாவோயிஸ்ட் அல்லது நக்சலைட் பிரிவினையாளர்கள் ஏற்படுத்தும் வன்முறையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். இப்படி வரலாற்றில் முஸ்லிம்களால் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களை விட அஃதில்லாதவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்களே அதிகம். இன்று காஷ்மீரையும் தாலிபான்களை மட்டுமே தீவிரவாதிகளாக பார்க்கும் நபர்களுக்கு மேற்கண்ட சம்பவங்கள் வெறும் வரலாற்று செய்திகளாக தான் நினைவில் இருக்கும். இறுதியாக... 60 இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்களை கொன்ற ஹிட்லர் இந்திய பிரதமர் இந்திரகாந்தியை கொன்ற அவர் பாதுகாப்பு படை வீரர்கள் தேச தந்தை காந்தியை கொன்ற கோட்சே... யாரும் முஸ்லிம்கள் இல்லை இக்னோவை யூத தீவிரவாதிகள் என்றோ, I R A வை கத்தோலிக்க தீவிரவாதிகள் என்றோ, மாவேயிஸ்ட்டுகளை கம்யூனிஷ தீவிரவாதிகள் என்றோ, உல்பாவை -இந்து தீவிரவாதிகள் என்றோ, பிரிந்தன் வாலா வை - சீக்கிய தீவிரவாதிகள் என்றோ, L T T E ஐ - தமிழ் தீவிரவாதிகள் என்றோ, ஓம் சின்ரிக்கோவை, மியான்மரிலும் - புத்த தீவிரவாதிகள் என்றோ, A T T F ஐ- கிறித்துவ தீவிரவாதிகள் என்றோ, # அறிவியலை துணையாகக்கொண்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தான் ஹிட்லர், # FBI தகவல்படி, அமெரிக்காவில் 94% தீவிரவாத தாக்குதலை நடத்தியது முஸ்லிம் பெயர் தாங்கிகள் அல்லாதவர்களே. # போர் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொன்று குவித்த இலங்கை அரசாங்கமும், புலிகளும், # நார்வே நாட்டில் சமீபத்தில் நடந்த தாக்குதலில், இனவெறியின் உச்சத்தில் பல மக்களை கொன்றுக்குவித்த Anders Behring Breivik...etc etc.. # இன்னும் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்று கூறிக் கொண்டு அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும், இஸ்ரேலும்... இப்படி சொல்லிகொண்டே போகலாம். ஆனால் இவற்றிற்கு அவர்கள் சார்ந்த கொள்கையை நோக்கி யாரும் கை நீட்டுவதில்லை. யாரும் அவர்கள் சார்ந்த மதம் அல்லது கொள்கைகளை முன்வைத்து அழைப்பதில்லை. ஆனால் முஸ்லிம்கள் செய்யும் செயல்களுக்கு மட்டும் இஸ்லாமிய பெயர் இணைத்து முன்மொழியப்படுவது எந்த விதத்தில் நியாயம்..? முஸ்லிம்கள் தவறுகள் செய்தால் அது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று தான். அச்செயல் உண்மையென இருந்தால் அவர்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் ஏனெனில் இஸ்லாம் இதைப்போன்ற தீவிரவாத செயல்களை ஆதாரிக்கவும் இல்லை -அங்கீகரிக்கவும் இல்லை. ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் கொடுக்கும் செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு தொப்பியையும்- தாடியையும் தீவிரவாதத்தின் அடையாளமாக்க வேண்டாம்! அல்லாஹ் மிக்க அறிந்தவன்..

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களுக்குத் தொழ வருவதற்குத் தடை விதிக்கும் இந்த ஆலிம்கள் தர்ஹாக்களுக்குப் பெண்கள் வருவதற்குத் தாராளமாக வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றனர். அதனால் இந்த தர்ஹாக்கள் விபச்சாரத்திற்கு வலை விரிக்கும் வலைத் தளங்களாக, விடுதிகளாக மாறியிருக்கின்றன. இப்படி தீமைகளின் ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடும் திராவக அருவிகளாக தர்ஹாக்கள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடங்களைச் சபிக்கின்றார்கள். சாபத்திற்குரிய சன்னிதானங்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, "யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1244 உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822 இன்று தர்ஹாக்களில் உழைக்காமல் ஊது பத்திகளைக் கொளுத்திக் கொண்டு, உண்டியலை மட்டும் நம்பிக் கொண்டு, தர்ஹாக்களின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டு பரம்பரை ஹக்தார்கள், டிரஸ்டிகள் என்று வயிறு வளர்க்கும் பண்டார சன்னிதானங்களையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பணக்கார சுகவாசிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பினத்திலேயே கெட்டவர்கள் என்று கூறுகின்றார்கள். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சமுதாய மக்கள் எரி நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்ற தூய கரிசனத்துடன், தூர நோக்குடன், தீர்க்க தரிசனத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள். "தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801 மக்கள் வரிசையாகக் கந்தூரிகள் கொண்டாடி நரகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக விளங்குவது இந்த தர்ஹாக்கள் தான். இந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பள்ளிவாசல்களில் ஆலிம்கள் சொல்வது கிடையாது. ஆலிம்கள் இந்த சத்தியத்தை மறைப்பதுடன், தர்ஹாக்களில் போய் அதிலும் குறிப்பாக கந்தூரி தினத்தன்றே போய் பயான் செய்கின்றார்கள். பாழாய் போன இந்த இடங்களில் பயான் வேறு வாழ்கின்றது. என்ன தான் இவர்கள் சத்தியத்தை மறைத்தாலும் இன்று ஏகத்துவத்தை விளங்கிய ஓர் இளம் தலைமுறை தோன்றியிருக்கின்றது. அவர்கள் எதிர்காலத்தில் சமுதாய மக்களின் சம்மதத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்கி விட்டு, அவற்றை பாடசாலைகளாக, தொழிற்பயிற்சிக் கூடங்களாக அல்லது வீடின்றி தவிக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களாக மாற்றும் அந்த நாள் தூரத்தில் இல்லை, இன்ஷா அல்லாஹ்! —

உடல் எடையை குறைக்க சுலபமான சில வழிகள் உங்கள் வீட்டிலேயே இருக்கு.


இந்த காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து, அதற்காக பல டயட்களை மேற்கொண்டு இருப்போர் நிறைய பேர் இருக்கின்றனர். அதிலும் சிலர் ஒரு நாளில் பாதியை ஜிம்மிலேயே செலவழிக்கின்றனர். அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, எனர்ஜி மற்றும் நேரத்தை வீணடிக்காமல், உடல் எடையை குறைப்பதை விட, வீட்டிலேயே ஈஸியாக ஒரு சில பானங்களை செய்து தினமும் குடித்து வந்தால், உடல் எடையானது எளிதில் குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய எளிமையான வீட்டு பானங்கள் என்னென்னவென்றும், எப்படி சாப்பிட வேண்டும் மற்றும் என்ன பலன் அதில் இருக்கிறதென்றும் மருத்துவர்கள் பட்டியலிட்டு கூறியுள்ளனர்.
கிரீன் டீ: அனைவருக்கும் கிரீன் டீ-யை பற்றி தெரிந்திருக்கும். இது உடலுக்கு, சருமத்திற்கு மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியத்தை தரும். அத்தகைய கிரீன் டீ-யை, அதன் இலைகளால் அல்லது கடைகளில் விற்கும் டீ பைகளை வாங்கி, வீட்டில் தயாரிப்போம். கிரீன் டீ சாப்பிட்டால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, எளிதில் எடையானது குறைந்துவிடும். அதிலும் அந்த கிரீன் டீ-யின் இலையை இரவில் படுக்கும் முன் நீரில் போட்டு, சிறிது எலுமிச்சை பழச்சாற்றை விட்டு ஊற வைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். ஏனெனில் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி மற்றும் கிரீன் டீ இலையில் இருக்கும் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட் நீரில் இறங்கி, அதனை நாம் பருகினால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, எடையும் குறைந்துவிடும். மேலும் அந்த கிரீன் டீ உடலில் இருக்கும் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, அந்த நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். அதிலும் கிரீன் டீ குடித்தால், 2-4 மணிநேரம் பசியானது ஏற்படாமல் நன்கு கட்டுப்படும்.
சிட்ரஸ் ஜூஸ்: ஜூஸ் என்றால் பிடிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். அத்தகைய ஜூஸில் சிட்ரஸ் இருக்கும் ஜூஸ்களை பருகினால், உடல் எடையானது குறைந்துவிடும். ஏனெனில் சிட்ரஸ் பழங்களில் இருக்கும் அமிலங்கள், உடல் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். அத்தகைய சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு, பெர்ரி போன்றவை மிகவும் சிறந்தது. திராட்சை பழங்களிலும் ஜூஸ் செய்து குடித்தால் உடல் எடையானது குறைவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் திராட்சை பழங்களில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட் போன்றவை அதிகமாக உள்ளது. மேலும் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் குறைவாக உள்ளது. ஆகவே அதன் தினமும் ஒரு டம்ளர் பருகினால் உடல் எடை விரைவில் குறைந்துவிடும். முக்கியமாக எலுமிச்சை பழ ஜூஸ் சாப்பிடும் போது, அதில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். ஏனெனில் சர்க்கரையே உடலில் கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. ஆகவே அப்போது அந்த ஜூஸ் உடன் உப்பை சேர்த்து குடிக்கலாம். வேண்டுமென்றால் சுடு தண்ணீரில் கூட கலந்து குடிக்கலாம்.
ஆப்பிள் வினிகர் : குளிர்ந்த தண்ணீரில் தேன் மற்றும் ஆப்பிள் வினிகரை கலந்து குடித்தால், எடை விரைவில் குறையும். மேலும் இது செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றுகிறது. ஆகவே எப்போதும் உணவு உண்ணும் முன் ஒரு டம்ளர் இந்த ஆப்பிள் வினிகரை நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதனால் அளவுக்கு அதிகமாக உணவை உண்ணாமல் அது தடுக்கும். அதிலும் இதனை தினமும் இருமுறை குடித்தால் நல்லது.
காபி: இது மற்றொரு எடையை குறைக்கும் பானம். காப்ஃபைன் ஒரு ஆல்கலாய்டு. ஆகவே காப்ஃபைன் கலந்திருக்கும் காபியை அளவோடு குடித்தால், உடல் எடையை குறைப்பதற்கு சிறந்த பானமாக இருக்கும். மேலும் கொக்கோ, காபி மற்றும் டீ போன்றவையும் காப்ஃபைன் இருக்கும் பொருட்களே. அதிலும் இந்த பொருட்களை ஒரு நாளைக்கு ஒரு கப் குடித்தால் உடல் எடை குறையும், அதற்கு அதிகமாக குடித்தால் தூக்கமின்மை, உடலில் வெப்பம் அதிகமாதல் போன்றவை ஏற்படக்கூடும்.
எனவே, மேற்கூறிய பானங்களை குடித்து உடல் எடையை ஈஸியாக குறைத்து, அழகாக, பிட்டாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.

கொய்யாக் கனியின் மருத்துவ குணங்கள்

கொய்யாக் கனியின் சுவையை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. கொய்யா வீட்டுத் தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்க்கப்படும் மரவகையாகும். இது இந்தியா, இலங்கை, மியான்மர் நாடுகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. இதற்கு ஜாம்பலா, கோவா, பலாம்பர் என்ற பெயர்களும் உண்டு. கொய்யாக்கனி அதிக மருத்துவக் குணம் கொண்டது. கொய்யா முக்கனியான மா, பலா, வாழை இவற்றிற்கு இணையாக வர்ணிக்கப்படும் பழமாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்ட பழம் இது.
கொய்யாப்பழம் கோடைக்காலங்களில் தான் அபரிமிதமாக விளையும். தற்போது உயிரி தொழில்நுட்ப முறையில் வருடம் முழுவதும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வருகிறது. இதில் அதிகளவு வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக நெல்லிக் கனிக்கு அடுத்த நிலையில் வைட்டமின் சி சத்து கொண்ட பழம் கொய்யா தான்.
வயிற்றுப்புண் ஆற:
இன்றைய உணவுகளில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதால் அவை அஜீரணத்தை உண்டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்படுத்துகிறது. இதனைப் போக்க உணவுக்குப்பின் கொய்யாப்பழம் சாப்பிடுவது நல்லது. மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூலநோயிலிருந்து விடுபடலாம்.
கல்லீரல் பலப்பட:
உடலின் சேமிப்புக் கிடங்கான கல்லீரல் பாதிக்கப்பட்டால் உடலின் பித்தத்தின் தன்மை மாறுபடும். இதனால் உடல் பல பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். இதைத் தவிர்த்து கல்லீரலைப் பலப்படுத்த கொய்யாப்பழத்தை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு: நீரிழிவு நோயின் தாக்கம் கண்டாலே அதைச் சாப்பிடக் கூடாது இதைச் சாப்பிடக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் பாடாய்படுத்தும். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கு உண்டாகும் பாதிப்புகளைக் குறைக்க கொய்யாப்பழம் உகந்தது. மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் தன்மையும் இதற்குண்டு.

இரத்தச்சோகை மாற:
இரத்தத்தில் இரும்புச் சத்துக் குறைவதால் இரத்தச்சோகை உண்டாகிறது. இன்று இந்தியக் குழந்தைகளில் அதுவும் பெண் குழந்தைகளில் 63.8 சதவீதம் குழந்தைகள் இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இக்குறையை பழங்களும் கீரைகளும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்பாக கொய்யாப்பழம் இரத்தச் சோகையை மாற்றும் தன்மை கொண்டது.
இதயப் படபடப்பு நீங்க:
ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயப் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப்பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
குழந்தைகளின் வளர்ச்சிக்கு:
குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் சி சத்து கொய்யாப்பழத்தில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு அளவோடு கொய்யாப் பழத்தைக் கொடுத்து வந்தால் குழந்தைகளின் எலும்புகள் பலப்படும். பற்கள் பலமடையும். நல்ல வளர்ச்சியைக் கொடுக்கும்.
குழந்தைகளுக்கு அறிவுத்திறன் அதிகரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்களைக் குணப்படுத்தும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. நரம்புகளைப் பலப்படுத்தும். உடலின் உஷ்ணத்தைக் குறைக்கும்.
கொழுப்பைக் குறைக்க:
அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பைக் குறைக்கும் தன்மை கொய்யாவுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்யாப்பழம் உண்டு வந்தால் கொலஸ்டிரால் குறையும் என இந்திய இருதய ஆராய்ச்சி நிறுவனம்(Heart researd Laboratary of India) ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சூத்தைகளைத் தடுக்க சில வழிகள் .

குழந்தைகளை நாளாந்தம் எழுந்தவுடனும் படுக்கப்போகும் முன்னரும் பற்சுத்தம் செய்தபோதும் அவர்களுக்குப் பற்சூத்தைகள் வருகின்றனவே என்றுதான் பல பெற்றோர்கள் சலித்துக்கொள்வார்கள்.

எனினும் இவற்றிற்கு xylitol (மதுசார இனிப்பாக்கி) என்ற கனிமம் அடங்கிய chewing gum இனை உணவு உட்கொண்டபின்னர் கொடுத்தால் அது பக்ரீரியாக்களைக் குறைத்து அமிலங்களை வாய்க்குள் சமநிலைப்படுத்தி அரிப்பைத் தடுக்கின்றது என்கின்றார் ஓர் பல்வைத்தியர். அத்துடன் நீங்கள் சாப்பிடும் அனைத்தும் இதன்மூலம் சப்பித்துப்பப்படுவதால் அகற்றப்பட்டுவிடும். இதனால் பற்சூத்தைகளும் குறைக்கப்படலாம் என்கின்றார் பல்வைத்தியரான திரு.ஸ்வான்.
எனினும் ஓசோன் என்ற 60-80 டொலர்வரையான பெறுமதியைக் கொண்ட சிகிச்சை முறையை பரவலாக வெளிநாடுகளில் செய்யப்படுகின்றதெனினும் அதனைச் சரியெனச் சொல்லமுடியாதென்றும் அச்சிகிச்சையின் பலன் கேள்விக்குறியானதேயென்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் இதனால் பற்சூத்தையின் ஆரம்ப கட்டத்தினைக் குறைத்துக் குறிப்பிடத்தக்களவு பலன் கிடைத்ததாகவும் இன்னொரு வைத்தியர் கூறினார். இந்த முறைமூலம் ஓசோன் வாயுவினைப் பல்லினூடாகப் பல மாதங்களுக்கொருமுறை செய்யும்போது பற்சூத்தையின் ஆரம்ப கட்டத்தினை இது குறைக்குமென்கின்றார். ஆனால் ஒரு துவாரம் வந்தபின்னர் இதனைப் பயன்படுத்துவதில் பயனில்லையென்றார் இன்னொரு பல் வைத்தியர்.
ஆரம்பகட்டத்திலேயே பற்களின் பாதிப்பைக் கண்டுபிடித்தால் தம்மால் எவ்வளவோ செய்யமுடியுமென்கின்றனர் வைத்தியர்கள்.
ஒரு குழந்தைக்குப் பற்சூத்தை வருவதற்கான காரணங்கள்.
1. நல்ல புளுரைட் அற்ற நீருள்ள பகுதியில் வாழ்வது
2. உணவுகளுக்கிடையே சீனித்தன்மையுள்ள உணவுகளையும் நீரில்லாத வேறு உறிஞ்சிக்குடிக்கும் திரவ உணவுகளை உண்பது.
3. நாளொன்று ஒருமுறையும் சுத்தப்படுத்தாமல் இருப்பது.
4. பெற்றோர் தமது பிள்ளைகளின் பற்களைச் சுத்தஞ்செய்யமுடியாத சுகாதார மற்றும் பழக்கவழக்கப் பிரச்சினைகளைக் கொண்டிருப்பது.
5. பெற்றோரில் அல்லது பராமரிப்பவரில் பற்சூத்தை காணப்படுவது (குழந்தைகளுக்கு இது வாய் பக்ரீரியாவால் பரவும்)
6. பல்லில் வெண்மை அல்லது மஞ்சள் நிறங்கள் காணப்படுதல்.
7. குழந்தையின் முன்புறப் பற்களில் தெரியக்கூடிய பாதிப்பு, துவாரம், வெட்டு அல்லது மிகவும் வெண்மையான பகுதி காணப்படுவது.
8. காலத்திற்கு முந்திய பிறப்பு. 1500 கிராமிற்கும் (3 இறாத்தல்) குறைவாகக் காணப்படுதல்.
இவ்வாறான விடயங்களைத் தவிர்த்துக் கவனமாயிருந்தால் உங்களது பிள்ளைகளையும் நீங்கள் பற்சூத்தைகளிலிருந்து காப்பாற்றலாம்.

ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை

சாப்பிடுவதன் மூலம் எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்த முடியும்.- ஆய்வில் தகவல்
ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிடுவதன் மூலம் எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்பதை அமெரிக்க ஆய்வின் முடிவுகள் உறுதிசெய்வதாக லான்செட் சஞ்சிகை தெரிவித்திருக்கிறது.
எச் ஐ வி தொற்றுக்குள்ளானவர்களின் நோய் முற்றி, எயிட்ஸ் நோயாக மாறாமல் தடுப்பதற்கு தற்போது ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகள் மாத்திரை வடிவில் அளிக்கப்படுகின்றன.
இந்த மருந்துகள் எயிட்ஸ் நோயை உருவாக்கும் எச் ஐ வி தொற்றை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், பாதிக்கப்பட்டவர்கள் சராசரி வாழ்க்கை வாழ்வதற்கு பெரிதும் துணை புரிகின்றன. இந்த ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகளை தொடர்ந்து உட்கொண்டால், பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் உயிர்வாழ முடியும்.
ஆனால் இந்த ஆண்டிரெட்ரோவைரல் மருந்துகள் ஒன்றுக்கும் மேற்பட்ட மாத்திரைகளாக இருப்பதால், ஒருவர் ஒருவேளைக்கு மூன்று முதல் ஐந்து மாத்திரைகள் வரை விழுங்கவேண்டியிருக்கிறது. இந்த மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்கு சாப்பிடத் தவறினால் எச் ஐ வி வைரஸ் மேலும் வலிமைந்து பாதிக்கப்பட்டவரை தாக்கும் வாய்ப்புக்கள் அதிகம் இருக்கிறது.
இதற்கு மாற்றாக ஒரு நாளைக்கு ஒரே ஒரு மாத்திரை மட்டும் சாப்பிட்டாலே எச் ஐ வி நோயை கட்டுப்படுத்தலாம் என்கிற நிலையை தோற்றுவிப்பதற்காக குவாட் பில் என்று பரவலாக அறியப்படும் மாத்திரை ஒன்று உருவாக்கப்பட்டது.

இதன் பயன்பாடு வழமையான ஆண்டிரெட்ரோவைரல் மாத்திரைகள் அளவுக்கு எச் ஐ வி தொற்றை கட்டுப்படுத்துகிறதா என்பதற்கான ஆய்வுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்டன.
இதுவரை மூன்று கட்டங்களை எட்டியுள்ள இந்த ஆய்வின் முடிவில், ஒரு நாளைக்கு ஒருமாத்திரை மூலம் எச் ஐ வி தொற்றை பாதுகாப்பாகவும், வலிமையாகவும் கட்டுப்படுத்த முடியும் என்று தெரியவந்திருக்கிறது. இந்த மாத்திரை எளிமையானது, பாதுகாப்பானது பயனுள்ளது என்கிறார் இந்த ஆய்வில் பங்கேற்ற ஹார்வர்ட் மருத்துவ பள்ளியின் துணைப்பேராசிரியர் பால் சாக்ஸ்

பல் வலி நீக்கும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களையும் கொண்டுள்ளது.

அலங்கார தாவரமாக தோட்டங்களிலும், வேலியோரமாகவும் வளர்க்கப்படும் நந்தியா வட்டை பல்வேறு மருத்துவபயன்களை கொண்டுள்ளது. இலை, மலர், வேர், வேர்பட்டை, கட்டை, போன்றவை மருத்துவ பயன் கொண்டவை. கண்நோய், பல்நோய் போக்க ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:
அமினோ அமிலங்கள், கரிம அமிலங்கள், அதிக அளவில் காணப்படுகின்றன. சிட்ரிக், ஒலியிக் அமிலங்கள், டேபர்னோடோன்டைன், பாக்டீரியா எதிர்ப்பு அமிலம்.
பார்வை கோளாறு குணமடையும்:
இலைகளின் பால் சாறு காயங்களின் மேல் பூசப்படுவதால் வீக்கம் குறையும். கண்நோய்களிலும் உதவுகிறது.
நந்தியாவட்டப் பூ வானது நேந்திரகாசம், படலம் லிங்க நாச தோஷங்கள், சிரஸ்தாப ரோகம், ஆகியவற்றைக் கெடுக்கும். இதில் ஒற்றைப் பூ இரட்டைப் பூ என்கின்ற இரண்டு இனமுண்டு. இரண்டும் ஒரே குணமுடையவை. கண்களில் உண்டான கொதிப்புக்கு இதை கண்களை மூடிக்கொண்டு மிருதுவாக ஒற்றடம் கொடுக்கக் கண் எரிச்சல் நீங்கி குளிர்ச்சியாகும்.

நந்தியா வட்டைப்பூவும் தேள் கொடுக்கிலையும் ஓர் நிறையாகக் கசக்கிக் கண்களில் இரண்டொரு துளி விட்டுக் கொண்டு வர சில தினத்தில் கண்களில் காணும் பூ எடுபடும்.
மலர்களின் சாறு எண்ணெய் கலந்து பயன்படுத்தும் போது எரிச்சல் உணர்வை மட்டுப்படுத்தும். இதன் பூக்கள் வாசனையூட்டும் பொருளாகப் பயன்படுகின்றது. இது நிறத்திற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து அழியாத மை தயார் செய்கிறார்கள்.
நந்தியா வட்டப் பூ 50 கிராம், களாப் பூ 50 கிராம் 1 பாட்டிலில் போட்டு நல்லெண்ணெயில் ஊறவைத்து 20 நாள்கள் வெயிலில் வைத்து வடிகட்டி ஓரிரு துளி காலை மாலை கண்ணில் விட்டுவர பூ, சதைவளர்ச்சி, பல வித கண் படலங்கள், பார்வை மந்தம் நீங்கும்.
பல் வலி நீக்கும்:
நந்தியா வட்டை வேரை கசாயமிட்டுக் குடிக்க வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு நீங்கும். கண் நோய் மற்றும் தோல் நோய்களை குணப்படுத்தும். வேர்ப்பட்டை வயிற்றுப் பூச்சிகளுக்கு எதிரானது. வேர் கசப்பானது. பல்வலி போக்கும். வலிநீக்குவி, கட்டை குளுமை தருவது. வேரை வாயிலிட்டு மென்று துப்பி விட பல் வலி நீங்கும்.

இதயத்தை பலப்படுத்தும் வெள்ளைக் காய்கறிகள்

வெள்ளை காய் மற்றும் பழ வகைகளில் தொடர்ந்து உண்பவர்கள் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள் உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது. காலிபிளவரில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வருவதைத் தடுக்கிறது. பூண்டு, காளான்கள், இஞ்சி, வெள்ளை உருளை, முள்ளங்கி ஆகியவற்றிலும் புற்றுநோயைத் தடுக்கும் சக்தி இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
♣♣ பொது காளான்கள் காய்கறியாகவே கருதப்படுகிறது. இது உண்பதற்கு ஏற்ற உணவு. காளான்களில் பல்லாயிரக்கணக்கான வகைகளும் நிறங்களும் உள்ளன. உணவிற்கு உகந்தவை வெள்ளை நிற காளான்கள் மட்டுமே. பளுப்பு நிறமோ அல்லது கறும் புள்ளிகளோ கொண்டவை வயதில் முதிர்ந்த இனப்பெருக்கத்தில் ஈடுப்பட்டுள்ள காளான்கள் என்பதனை குறிக்கும். காளான்களில் அதிக புரதம்

காணப்படுகின்றது. உலகம் முழுவதும் சுமார் 200 வகையான உண்பதற்கு உகந்த காளான்கள் உள்ளன, பெரும்பாலும் அனைத்து நாடுகளிலும் இதனை உணவாக பயன்படுத்துகின்றனர். இதற்குக் காரணம் அவற்றில் அடங்கியுள்ள சுவை, மணம் மற்றும் ஊட்டச்சத்துக்களே ஆகும். இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள பொட்டாசியம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
♣♣ வெள்ளைப்பூண்டு நோய் எதிர்ப்பு திறன் கொண்டது. இது ஆன்டிபாக்டீரியல், ஆன்டிபங்கல், மேலும் ரத்த நாளங்களில் படிந்துள்ள கொழுப்புகளை அகற்ற உதவுகிறது. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வெள்ளைப் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது.
♣♣உருளைக்கிழங்கும், வாழைப்பழமும் ஒரே மாதிரியான ஊட்டச்சத்தினை கொண்டுள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைடிரேட், பொட்டாசியம் போன்றவை காணப்படுகின்றன. இது மனிதர்களுக்குத் தேவையான சக்தியை அளிக்க வல்லது.
♣♣காலிஃப்ளவர் விட்டமின் சத்து நிறைந்தது. இதில் உள்ள வெள்ளை அணுக்கள் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இதில் குறைந்த அளவு கலோரிகளே காணப்படுகின்றன. பீட்ரூட், காரட் போல டர்னிப் வேரில் கிடைக்கும். இந்த வெள்ளைநிற காய்கறியில் விட்டமின் C சத்து அதிகம் காணப்படுகிறது. இதை பச்சையாக சலாட்போல சாப்பிடலாம். இந்த வெள்ளை நிற காய்கறிகளை தினசரி உணவுகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

Monday, July 23, 2012

உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பும் அதற்க்கான தீர்வும்.

இன்றைக்கு உள்ள இளைய தலைமுறயினர் பத்தில் ஒருவருக்கு ஹைபர் டென்சன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படுகிறது. இந்த உயர் ரத்த அழுத்த நோயானது மெள‌னமாக இருந்து ஆளை கொள்ளும் ஆபத்தான நோய் என்று மருத்துவ உலகினர் எச்சரிக்கின்றனர். உயர் ரத்த அழுத்தத்தினால் பக்கவாதம், இதயபாதிப்பு, சிறுநீராக கோளாறுகளும் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர் ரத்த அழுத்தம்.
இன்றைக்கு பெரும்பாலோனோர் சத்தான உணவுகளைத் தவிர்த்து அதிக கொழுப்பு, பல்வேறு ரசாயனங்கள் உள்ள பாஸ்ட் புட் வகைகளை உட்கொள்வதால் உடலில் அதிக கொழுப்பு கூடுகிறது. இதனால் உடல் பருமன் நோய்க்கு ஆளாகின்றனர். மேலும் பெண்களுக்கு ஹார்மோன்கள் மாற்றத்தினால் சோர்வு, நினைவாற்றல் குறைவு, படபடப்பு ஏற்படுகிறது. அதிகமான மன அழுத்தம், மன உளைச்சல் ஏற்பட்டாலும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே உடலானது நோய்களின் கூடாரமாக மாறுவதோடு இளம்வயதில் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பல நோய்கள் அழையா விருந்தாளியாக உள்ளே நுழைகின்றன.
பாரம்பரிய உணவுகள்.
உடலில் பிரச்சனைகள் இருக்கும் போது அது மனதையும் பாதித்து ஹார்மோன்களையும் பாதிக்க செய்கிறது. இதனால் டென்ஷன் அதிகரித்து மன அழுத்தத்தில் கொண்டுபோய் விடுகிறது. சிறு வயது முதல் நமது பாரம்பரிய உணவுகளுக்கு முதலிடம் தர வேண்டும். ஆவியில் வேக வைத்த உணவுகள் மற்றும் பருப்பு வகைகள், தானியங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சத்தான கீரை, காய்கறிகள், பழங்கள் சாப்பிடும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். பச்சைப்பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் உள்ளிட்ட பயறு வகைகளை கலவையாக முளைக் கட்டி சாலட்டாக சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு தேவையான புரோட்டீன் கிடைக்கிறது. சத்தான உணவுகள் உடலையும், மனதையும் உற்சாகமாக வைத்திருக்கும். இட்லி, கம்பு, ராகிக் களி, சோள மாவு தோசை, கீரை கலந்து செய்யப்படும் அடை வகைகள் என மூன்று வேளை உணவிலும் பாரம்பரிய உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
குழந்தைகள் பர்கர், பீட்ஸா மற்றும் ஜங்க் புட் வகைகள் அடிக்கடி சாப்பிடுவதற்கு தடை விதிக்கவும். அதே கார்பனேட் அடங்கிய குளிர்பான வகைகளை தொடர்ந்து குடிக்க கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக இளநீர், பழரசங்கள் சாப்பிட பழக்கப் படுத்தலாம்.
நெல்லிக்கனி ஜூஸ்.
ஹைபர் டென்சன் ஏற்பட்டவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்தாக உள்ளது. வெறும் வயிற்றில் பூண்டு ஜூஸ் பருகலாம். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைக்கிறது. இதன் மூலம் உயர்ரத்த அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. தினசரி காலையில் நெல்லிக்கனி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து ஜூஸாக கலந்து பருகலாம். இதனால் உயர்ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
உயர் ரத்த அழுத்த நோய்க்கு தர்பூசணி சிறந்த மருந்தாக உள்ளது. தினசரி தர்பூசணி பழத்தை சாப்பிடலாம் அல்லது தர்பூசணி பழச் சாறுடன் கசகசா சேர்த்து அரைத்து தினசரி வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும்.
துளசி, வேப்பிலை.
துளசி 5 இலைகள் வேப்பிலை 5 சேர்த்து அரைத்து தண்ணீரில் கலந்து பருகவேண்டும். ஒருவாரத்திற்கு தொடர்ந்து இதனை குடித்து வர உயர்ரத்த அழுத்தம் குணமாகும்.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சூரிய ஒளியின் பங்கு.

சூரிய ஒளி புகாத வீட்டில் வைத்தியர் அடிக்கடி நுழைய நேரிடும்’ என்ற அனுபவ மொழியே சூரியனுக்கும் மனித ஆரோக்கியத்துக்குமான நெருக்கத்தைப் பளிச் எனப் புரியவைக்கும். உண்மைதான்... பைசா செலவு இல்லாமல், நம் உடல் நலனைப் பாதுகாக்கவும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றவும் சூரிய ஒளியின் பங்கு முக்கியம். 
ஆரோக்கிய வாழ்க்கைக்கு சூரிய ஒளியின் பங்கு எவ்வளவு முக்கியம் என்று ஆயுர்வேத மருத்துவர் முருகப்பன் மற்றும் சித்த மருத்துவர் சிவராமன் இருவரும் ஒருமித்துப் பேசினார்கள்.
ஆயுள் பெருகும்: ஆயுளை அதிகரிக்கச் செய்யும் சத்துக்களில் முதன்மையானது வைட்டமின் டி. நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் டி சத்தில் 90 சதவிகிதம் வரை சூரிய ஒளியில் இருந்தே கிடைக்கிறது. பால், மீன் உள்ளிட்ட உணவுப் பொருட்களிலும் இந்தச் சத்து அதிக அளவில் உள்ளது. பொதுவாக ரத்தத்தில் ஒரு மி.லி-க்கு 30 நானோ கிராம் வைட்டமின் டி இருக்க வேண்டும். இந்த அளவு குறையும்பட்சத்தில் தசைகள் வலு இழந்து, எலும்புகளும் பாதிக்கப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தியும் உடல் பலமும் குறைகிறது.

சூரிய ஒளியில் உள்ள புற ஊதா பி கதிர்கள் உடலின் மீது படும்போது, தோலில் உள்ள கொழுப்பு உருகி ரசாயன மாற்றம் ஏற்பட்டு வைட்டமின் டி ஆக மாறி உடலுக்குள் செல்லும். சித்த மருத்துவத்தில் 'காந்தி சுட்டிகை’ என அழைக்கப்படும் சூரியக் குளியலால் உடலின் ரத்த வெள்ளை அணுக்கள் அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும், உணவு செரிமானத் தன்மையை அதிகரித்து வளர்சிதை மாற்றத்துக்கும் துணை புரியும்.
டெஸ்டோஸ்டிரான் அதிகரிக்கும்: ஆண் தன்மையைத் தூண்டும் டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் அளவு அதிகரிக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது. காலை, மாலை இரு வேளைகளும் குறைந்தது அரை மணி நேரம் சூரிய ஒளியில் நின்றாலே, உடலுக்குத் தேவையான 69 சதவிகித டெஸ்டோஸ்டிரான் இயற்கையாகவே கிடைத்துவிடும்.
விழிப்பு உணர்வு கூடும்: சூரிய உதயத்துக்குப் பிறகு பெரும்பாலான ஹார்மோன் சுரப்புகள் அதிகரிப்பதும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின் ஹார்மோன் சுரப்புகள் குறைவதும் இயல்பு. இந்தச்சுழற்சிமுறையைத்தான் 'சிர்காடியன் ரிதம்’ என்கிறோம். பெரும்பாலான சித்த மருந்துகளை அந்திசந்திகளில் சாப்பிட சொல்வது இந்தச் சுழற்சியை ஒட்டித்தான். சூரிய உதயத்துக்குப் பிறகு அதிகம் சுரக்கும் 'செரோடனின்’ என்கிற ஹார்மோன்தான் நம்மை எப்போதும் விழிப்பு நிலையில் இருக்கச் செய்கிறது. உடல்மீது வெயில்படுவதால் செரோடனின் அதிகம் சுரந்து, நமது நரம்பு மண்டலம் விழிப்புடன் இருக்கவும் துணை செய்கிறது.
புற்றுநோயைத் தடுக்கும்: சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக் கதிர்கள் சருமத்தில் உள்ள மெலனின் என்ற நிறமியுடன் இணைந்து புற்றுநோய்க்கு எதிராகச் செயல்படுகின்றன. எனவே, தினமும் பத்து நிமிடம் உடலில் சூரிய ஒளி படும்படி நின்றாலே, சருமப் புற்றுநோயைத் தவிர்த்துவிட முடியும். மேலும் நுண்ணுயிர்க் கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளையும் சூரிய ஒளிக்கதிர்கள் அழித்துவிடுகின்றன.
எலும்புகள் உறுதியாகும்: குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும் பெரியவர்களின் எலும்பு வலுவடைவதற்கும் கால்சியம் தேவை. நாம் சாப்பிடும் உணவில் உள்ள கால்சியத்தைக் கிரகித்து எலும்புக்கு அளிக்கவல்லது வைட்டமின் டி3. இதனால்தான், 'பச்சிளம் குழந்தைகள் மீது காலை வெயில்பட வேண்டும்’ என்று நம் பாட்டிமார்கள் வலியுறுத்துவார்கள். இதனால், எலும்புகளை வலு இழக்கச் செய்யும் ரிக்கட்ஸ் பாதிப்பில் இருந்தும் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.
கழிவுப் பொருட்கள் வெளியேறும்: உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவதில் சூரியக் குளியல் சிறந்த முறை. சூரியக் குளியலின்போது பத்து நிமிடங்களிலேயே நன்றாக வியர்க்க ஆரம்பிக்கும். இதனால் தோலின் வழியாக உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும்.
காலை வெயில், மாலை வெயில் இரண்டுமே உடலுக்கு ஏற்றதுதான். அதனால், தாராளமாக வெயிலோடு விளையாடுங்கள்!
சூரிய நமஸ்காரம்!
பண்டைய காலம் தொட்டே நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வரும் யோகப் பயிற்சி முறைகளில் ஒன்று சூரிய நமஸ்காரம். இதில் கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல் என அனைத்து உள் உறுப்புகளும் மசாஜ் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரம் செய்தால், மலச்சிக்கல் தொந்தரவு அண்டாது. மேலும் வயிற்று உறுப்புகளில் ரத்தம் தேங்குவதும் தவிர்க்கப்படுகிறது. உடல் அசைவும் மூச்சு ஓட்டமும் இணக்கமாக நடைபெறும். நுரையீரலுக்குக் காற்றோட்டமும் தாராளமாகக் கிடைக்கிறது. உடலில் உள்ள எல்லா மூட்டுகளுக்கும் அசைவுகள் கிடைப்பதால் அவை வலுவடையும். மூளை மற்றும் வயிற்றில் உள்ள சுரப்பிகளையும் இது தூண்டும். கழுத்தை முன் பின்னாக வளைப்பதால் தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பிகளுக்கும் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கும். சருமமும் புத்துணர்வு பெறும்.

மாங்காய் பனீர் புலவு [ஆடிப் பெருக்கு

                                                   பச்சரிசி – 1 கப் (அல்லது பிரியாணி அரிசி)
பால் – 500 மிலி
மாங்காய்த் துருவல் – 1 கப் (துருவியது)
தேங்காய்த் துருவல் – 1/2 கப்
பெரிய வெங்காயம் – 1 (விரும்பினால்)
குடமிளகாய் – 1
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – சிறு துண்டு
காய்ந்த மிளகாய் – 2
இலவங்கப் பட்டை – 1 (விரும்பினால்)
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
நிலக்கடலை – 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 1 சிட்டிகை
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 ஈர்க்கு
கொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

செய்முறை:
பாலைக் காய்ச்சி, பொங்கிவரும்போது எலுமிச்சைச் சாறு அல்லது வினிகர் சில துளிகள் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்கவைத்து பால் திரிந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
திரிந்த பாலை பனீர் வடிகட்டி அல்லது ஒரு துணியில் போட்டு கையால் ஒட்ட பிழிந்து வடிகட்டி உதிர்த்துக் கொள்ளவும். பிரிந்த நீரையும் எடுத்துவைக்கவும். (உடனடியாக பனீரை உபயோகிக்க இந்த முறை. முறையாக பனீர் செய்யு)
அரிசியைக் கழுவி, பனீர் வடித்த நீர் 2 கப் சேர்த்து உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
இஞ்சி, வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
பச்சை மிளகாய், குடமிளகாயை மெலிதான நீளதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, நிலக்கடலை, இலவங்கப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் என்ற வரிசையில் தாளிக்கவும்.
தொடர்ந்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், குடமிளகாய், மாங்காய்த் துருவல், தேங்காய்த் தூருவல் என்ற வரிசையில் ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, இறுதியில் பனீரும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கவும். (உப்பு, மஞ்சளை கலவையிலேயே சேர்த்துவிடுவது, சாதத்தில் அவை சீராகப் பரவ உதவும்.)
உதிராக வடித்து வைத்துள்ள சாதத்தை உடைக்காமல் மென்மையாக நன்கு கலந்து, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பரிமாறவும்.

முருங்கைகீரை கஞ்சி

                                                                                            இரும்பு சத்து நிறைந்த முருங்கைகீரை + புரத சத்து நிறைந்த பச்சைப் பயிரை + வாயுவை நீக்கும் சுக்கை கொண்டு மிகவும் வித்தியாசமான முருங்கைகீரை கஞ்சி செய்வது எப்படி என்று தான் இப்போது பார்க்க இருக்கிறோம்.


தேவையான பொருட்கள் :

பச்சரிசி நொய் - 1 கப்
பச்சைப் பயிறு (முழுப் பயிறு) - 1 கப்
முருங்கைக்கீரை - தேவையான அளவு
சுக்கு - 1 துண்டு
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
பச்சைப் பயிரை அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் ஊறவைக்கவும்.
கழுவி சுத்தம் செய்யப்பட்ட அரிசியை எட்டுக் கப் தண்ணீரில் நன்கு வேகவையுங்கள்.
இதனுடன் ஊறவைத்த பச்சை பயிரையும் சேர்த்து வேகவையுங்கள்.
சுக்கை நன்கு அரைத்து / பொடியாக்கி எடுத்துக் கொள்ளுங்கள்.
அரிசி நன்கு வெந்தப்பின் முருங்கைகீரை + உப்பு + சுக்கை சேருங்கள்.
பச்சைப் பயிறு நன்கு வெடித்து மலரும் வரை வேகவிடுங்கள் + அரிசியும் நன்கு வெந்துள்ளதா என்று பார்த்து பின்பு இறக்குங்கள்.

குறிப்பு :-
பச்சரிசி பயன் படுத்தாதவர்கள் புழுங்கலரிசி பயன்படுத்துகள். வாரத்திற்கு ஒரு நாள் இதனை செய்து சாப்பிடலாம்.

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணங்கள்.

கரிசலாங்கண்ணி இலை மஞ்சள் காமாலை நோய்க்கு கண்கண்ட மருந்தாக செயல்பட்டு வரும் அதே வேளையில் அது பிற உடல் உபாதைகளையும் போக்கக்கூடியது என்பது பலரும் அறியாததே. கபம், சோபை, ஆமதோஷம் ஆகியவற்றைக் தணிக்கிறது. சருமநோய், இருதயநோய், விஷம் ஆகியவற்றைப் முறிப்பதில் கரிசலாங்கண்ணிபயன்படுகிறது. ஐந்து அல்லது 10 கரிசாலை இலைக் கொழுந்துடன் 5 அல்லது 7 மிளகைச் சேர்த்து மோர்விட்டு அரைத்து மாத்திரை யாக்கியேனும், வெல்லம் சேர்த்து மாத்திரை செய்தேனும் காலையில் கொடுக்கலாம்.

ஒரு தேக்கரண்டி அளவு அல்லது ஒரு அவுன்ஸ் கரிசாலை இலைச்சாற்றுடன் இரண்டு அல்லது நான்கு அவுன்ஸ் பாலுடன் சிறிதளவு சர்க்கரை கலந்தேனும், அல்லது 4 அவுன்ஸ் மோர் கலந்து அதனுடன் சிறிது உப்புச் சேர்த்தும் காலையில் தினந்தோறும் கொடுக்கலாம்.

கரிசாலை இலையுடன் புதிய இஞ்சி, மிளகு, உப்பு, பிற ஆகாரத்தை ருசிக்கச் செய்யும் பொருள்களுடன் சட்டினி அரைத்துத் தரலாம். நல்ல செரிமானம் இல்லாத நோய்களில், மோருடன் சேர்த்துச் செய்யப்பட்ட கரிசாலை மாத்திரையை தேர்ந்தெடுக்கவும்.
தலைமயிரைக் கருக்க வைக்கவும், தலை மூழ்கிய பிறகு மூளைக்கு குளிர்ச்சியாயிருக்கவும் நாடு முழுவதும் கரிசலாங்கண்ணித் தைலம் புகழுடன் பயன்பட்டு வருகிற

நெயில் பாலிஷ் ரிமூவரை வீட்டிலேயே செய்யலாம்!

பெண்கள் தங்கள் கைகளை அழகாக்க போடும் நெயில் பாலிஷை அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பார்கள். இதற்கு கடையில் விற்கும் நெயில் பாலிஷ் ரிமூவரை வாங்கி அதை அகற்றுவார்கள். நெயில் பாலிஷ் ரிமூவர் காலியாகிவிட்டால் நம் வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்தே நெயில் பாலிஷை அகற்றலாம்.
நெயில் பாலிஷ் ரிமூவர் செய்ய சில டிப்ஸ்…
நெயில் பாலிஷை வைத்தே நெயில் பாலிஷை எடுக்கலாம். அதாவது ஏற்கனவே இருக்கிற நெயில் பாலிஷ் மேல ஒரு கோட்டிங் நெயில் பாலிஷ் போட்டு, உடனே பஞ்சால் துடைத்தால் அது போய்விடும்.
வினிகரில் பஞ்சை நனைத்து நகத்தில் துடைத்தால் நெயில் பாலிஷ் போய்விடும். மேலும் வினிகருடன் சிறிது எலுமிச்சை சாறு விட்டு, பஞ்சை அதில் நனைத்து நகத்தில் சிறிது நேரம் துடைத்தால் நெயில் பாலிஷ் அகன்றுவிடும்.

ஆல்கஹாலை வைத்து துடைப்பது இன்னொரு வகை. சிறிதளவு பஞ்சை எடுத்து ஆல்கஹாலில் நனைத்து நெயில் பாலிஷ் பூச்சு மீது சற்று நேரம் துடைக்க வேண்டும். இதனால் நகத்தில் இருக்கும் நெயில் பாலிஷ் முற்றிலும் எளிதாக போய்விடும்.
எலுமிச்சை ஒரு இயற்கையான நெயில் பாலிஷ் ரிமூவர். ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து நகத்தில் தேய்த்தால் நெயில் பாலிஷ் போய்விடும். இல்லையென்றால் சற்று சூடான சோப்புத் தண்ணீரில் கையை 3- 6 நிமிடம் ஊற வைத்து, பின் எலுமிச்சைத் துண்டால் துடைத்தால் நெயில் பாலிஷ் போய்விடும்.

கர்ப்பமா இருக்கீங்களா? பீட்ரூட் சாப்பிடுங்க கர்ப்பிணிகள் பீட்ரூட் சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை ஏற்படுவது

தடுக்கப்படுவதோடு ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள்தெரிவித்துள்ளனர். பீர்ரூட் தற்போது அனைத்து தரப்பினரும் விரும்பி உண்ணும் உணவாகிவிட்டது. இதற்கு காரணம் அதில் உள்ள எண்ணற்ற சத்துக்களே. பீட்ரூட்டில் கரோட்டினாய்டு அதிகம் காணப்படுகிறது. இதில் நார்ச்சத்துக்கள், போலிக் அமிலம், வைட்டமின் சி, இரும்பு, பொட்டாசியம், மாங்கனீஸ், துத்தநாகம், தாமிரம் மற்றும் மக்னீசியம் போன்றவை காணப்படுகின்றன. இனிப்பான இந்த காய்கறியில் குறைந்த கலோரிகளே உள்ளன.

இதயத்திற்கு ஏற்றது .
இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைத்து நல்ல கொழுப்பினை அதிகரிக்கிறது. இதனால் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படுகிறது. இதன்மூலம் உயர்ரத்த அழுத்தம், பக்கவாதம், இதயநோய் போன்ற நோய்கள் ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் ஆஸ்துமா நோய் ஏற்படுவதில் இருந்து தடுக்கப்படுகிறது.

ஆரோக்கியமான குழந்தை
பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும், குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.

உற்சாகத்தை அதிகரிக்கும் .
இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம். இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்

வயதைக் குறைக்கும் சக்தி வாய்ந்த மாதுளை

ஹேர் கலரிங், கன்னா பின்னா டிரஸ்ஸிங், வாக்கிங் என பெரிசுகள் எல்லாம் இளமையாகும் ரவுசு தாங்க முடியலை. வயதைக் குறைத்துக் காட்டுவதில் இவர்கள் படும் பாடு பலரையும் டென்சன் கரைய சிரிக்க வைக்கிறது. இது கிண்டலடிக்கும் விஷயம் மட்டும் இல்லை. யோசிக்க வைக்கும் விஷயமும் கூட. வெளிப்புற அழகுக்காக மெனக்கெடுவதுடன் கண்டிப்பாக உடல் நலத்தை, தோலின் மினுமினுப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம்.

மழலைச் செல்லம் முதல் தாத்தா பாட்டி வரை அனைவரது தோற்றத்தையும் மினு மினுக்க வைக்கும் மகத்துவம் மாதுளையில் உள்ளது என அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
மாதுளையில் உள்ள மருத்துவ குணங்கள்: நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்துக்கள் மாதுளையில் நிறைய உள்ளது. அழையா விருந்தாளியாய் வந்து உடலைக் கொல்லும் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி கூட மாதுளையில் உள்ளது.பிறந்த குழந்தைகளின் மூளையில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் வேலையையும் இது செய்கிறது.

மூன்று மாதத்தில் இருந்தே குழந்தைகளுக்கு மாதுளை ஜூஸ் கொடுக்கலாம். வைட்டமின் ஏ, ஈ, சி, போலிக் ஆசிட், நார்ச்சத்து, பி வைட்டமின் ஆகிய சத்து கள் மாது ளையில் உள்ளன. வைட்டமின் ஏ, ஈ ஆகியவை தோலின் மினுமினுப்பை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.
இதுவே வயதானால் தோலில் உருவாகும் சுருக்கத்தை தடுக்கும் வேலையைச் செய்கிறது.பெண்களை அதிகளவில் தாக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதைத் தடுக்கும் தன்மையும் மாதுளைக்கு உண்டு. இதில் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறையவே உள்ளன.
குழந்தைகளுக்கு ஏற்படும் பல்சார்ந்த பிரச்னைக்கும் இதில் தீர்வு உள்ளது. மாதுளை ஜூஸ் குடிப்பதால் குழந்தைகளின் வயிற்றில் வளரும் பூச்சிகளை வெளியேற்றும். தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதன் மூலம் 40 வயதுக்கு மேல் உடலில் சுருக்கம் உண்டாவதைத் தவிர்க்கலாம். கேன்சரைத் தடுப்பதுடன் ரத் தத்தை சுத்திகரிக்கும் வேலை யையும் செய்கிறது. ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பினையும் கரைக்கிறது.
பெண்களுக்கு வயதானால் ஏற்படும் எலும்புத் தேய் மானம் உள்ளிட்ட ஆத்தரைட்டிஸ் பிரச்னைகளையும் குறைக்கிறது மாதுளை. இதில் போலிக் ஆசிட் உள்ளதால் கர்ப்பிணிப் பெண்கள் தினமும் மாதுளை ஜூஸ் குடிக்கலாம். இதனால் ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படுவதைத் தவிர்த்து கருவுக்கும் வலிமை சேர்க்கிறது. அபார்சனைத் தடுக்கிறது. மாதுளை சாப்பிடுவதால் இதில் உள்ள போலிக் ஆசிட் உணவில் இருந்து கிடைக்கும் இரும்புச் சத்தினை உட்கிரகித்துக் கொள்ளவும் உதவுகிறது.


Sunday, July 22, 2012

ஸ்வீட் பச்சடி

பீட்ரூட் - 1 சிறு துண்டு, 
நன்கு பழுத்த சிவந்த தக்காளி - 5, 
சர்க்கரை - அரை கப், 
பொடியாக நறுக்கிய அன்னாசி (விருப்பப்பட்டால்) - 2 டேபிள்ஸ்பூன், 
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்.
தக்காளியை சிறுதுண்டுகளாக நறுக்கவும். பீட்ரூட்டை தோல் நீக்கி, சிறியதாக வெட்டி, தக்காளியுடன் சேர்த்து குக்கரில் 2 விசில் வைக்கவும். ஆறியதும் அதை மிக்சியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய கலவையை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்துக் கிளறவும். நெய் சேர்க்கவும். கலவை நன்கு சேர்ந்து, பளபளவென, குழம்பு பதத்துக்கு வரும் வரை கொதிக்க விட்டு இறக்கவும். பிறகு எசென்ஸ் மற்றும் அன்னாசித் துண்டுகள் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராதாம்!

பொதுவாக கறிவேப்பிலை உணவில் வாசனையை தர பயன்படுகிறது என்று தான் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் என்னவோ சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டுவிடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். ஏனென்றால் கறிவேப்பிலை சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், அஸ்பார்டிக் அமிலம், அயாமைன், புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் மற்றும் வைட்டமின் ஏ, பி, சி, கல்சியம் போன்றவைகளும் உள்ளன. இதனால் இதில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதோடு, நல்ல மணத்தையும் தருகிறது.

இத்தகைய குணங்கள் நிறைந்த கறிவேப்பிலை குறித்து ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலைக்கு புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உள்ளது என்று கண்டறிந்துள்ளனர். மேலும் இது ஒரு சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்றும் கூறுகின்றனர். கருவேப்பிலை சாப்பிடுவதால் இதய நோய் வராது, மேலும் ஞாபக சக்தியும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கறிவேப்பிலையையும், கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் நன்மை உண்டா? என்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் மருத்துவ குழுவினர் ஆராய்ந்தனர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்றும், பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுக்கிறது என்றும் கண்டுபிடித்துள்ளனர். மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால் தான் டி.என்.ஏ. பாதித்து செல்களிலுள்ள புரோட்டின் அழிந்து, அதன் விளைவாக புற்றுநோய், வாதநோய்கள் வருகின்றன என்றும் கண்டறிந்துள்ளனர்.

இது தவிர நீரிழிவு நோயாளிகள் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவு பாதியாக குறையும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்

குங்குமப்பூ புலாவ்

பாசுமதி அரிசி - 2 கப், 
தண்ணீர் - 4 கப், 
குங்குமப்பூ - முக்கால் டீஸ்பூன், 
பால் - 2 டேபிள்ஸ்பூன், 
நறுக்கிய வெங்காயம் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
பட்டை, கிராம்பு - தலா 2,
எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கேற்ப.
அரிசியைக் களைந்து, போதுமான தண்ணீர் விட்டு, அரை மணி நேரம் ஊற வைத்து வடிக்கவும். குங்குமப் பூவை வெதுவெதுப்பான பாலில் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் அல்லது நெய் விட்டு, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

ஊற வைத்த அரிசி சேர்த்து, குங்குமப்பூவும் சேர்த்து, தண்ணீர்விட்டுக் கொதிக்கவிடவும். கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து, மூடி வைத்து, அரிசி நன்கு வேகும் வரை வைத்திருந்து எடுத்துப் பரிமாறவும்.

அவல் ஆரஞ்சுப்பழ ஐஸ் கிரீம்

                                                                                              கெட்டி ஆவல் & 100 கிராம்
ஆரஞ்சு பழச்சாறு & 100 கிராம்
எலுமிச்சம் பழச்சாறு & 1 தேக்கரண்டி
மில்க் மெய்ட் (அல்லது)
சுண்டக் காய்ச்சிய பால் & 1 லிட்டர்
கிரீம் & 1 கோப்பை
சர்க்கரை & 50 கிராம்
ஜி.எம்.எஸ் & 1 தேக்கரண்டி
ஜெலடீன் & 1 தேக்கரண்டி
ஐஸ் கிரீம் ஸ்டெபிலைசர் & தேக்கரண்டி
டூட்டி ஃப்ரூட்டி & 50 கிராம்
அவலை வெறும் வாணலியில் வறுத்து, ஆறியதும், நீரில் கழுவி, இரண்டு நிமிடம் ஊறவிட்டு கையால் நன்கு பிசறி வைக்கவும் (தண்ணீரை வடித்துவிட்டு).
பால் எடுத்துக் கொண்டால் அதை சுண்டக்காய்ச்சி ஆற வைத்து சர்க்கரையைப் போட்டு நன்கு கலந்து வைக்கவும்.

மில்க் மெய்ட் எடுத்துக் கொண்டால் சர்க்கரை சேர்க்காமல் காய்ச்சி ஆறவிட்டு எடுத்துக் கொள்ளவும்
ஜி.எம்.எஸ்.ஐ கால் கோப்பை வெதுவெதுப்பான பாலில் நன்றாகக் கரையவிட வேண்டும். பின் ஜெலடீனை அரைக்கோப்பை கொதிக்கும் நீரில் போட்டு நன்கு கரைய விட வேண்டும்.

ஒரு தேக்கரண்டி சர்க்கரையில் ஐஸ் கிரீம் ஸ்டெபிலைஸரைக் கலந்து வைக்கவும். தயார் செய்திருக்கும் சர்க்கரை கலந்த பால் அல்லது மில்க் மெய்ட்டில் ஜி.எம்.எஸ்.ஐஸ் கிரீம் ஸ்டெபிலைசர், ஜெலடின், கிரீம், ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, ட்டி ஃப்ரூட்டி மற்றும் அவல் இவற்றை நன்கு கலந்து, ஐஸ் கிரீம் கப்புகளில் விட்டு, ஃப்ரீஸரில் வைக்கவும் தேவைப்படும்போது பரிமாறலாம்.

பேரீச்சம்பழத்தின் மருத்துவக் குணங்கள்

பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம். பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை. அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

இது மிகவும் சத்துள்ள பழமாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம். இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும். ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.

சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம். இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.

கண்பார்வை தெளிவடைய:
வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு:
பொதுவாக பெண்களுக்கு அதிக கல்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும். இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

ஆண்களுக்கு:
ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.

சளி இருமலுக்கு:
பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:
அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

ஞாபக மறதியினால் பிரச்சனையா..?தினம் 3 டம்ளர் காபி குடிங்க

எழுந்தவுடன் சிலருக்கு காபி குடித்தால் தான் நிம்மதியாக இருக்கும். மேலும் ஒரு கப் காபி குடித்தால்தான் சுறுசுறுப்பாக இருக்க முடியும் என்று அதற்கு காரணம் கூறுவார்கள். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 65 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தினசரி மூன்று கப் காபி குடிப்பதால் அவர்களுக்கு அல்சீமர் எனப்படும் ஞாபக மறதி நோய் ஏற்படுவது தள்ளிப் போகிறதாம்.
யதானவர்களை அதிகம் பாதிக்கும் அல்சீமர் நோய் குறித்து தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வுக்குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தம்பா மற்றும் மியாமி நகரங்களைச் சேர்ந்த 65 வயது முதல் 88 வயதிற்கு மேற்பட்ட 124 மூத்த குடிமக்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு தினசரி 3 கப் காபி குடிக்கக் கொடுக்கப்பட்டது. இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரை படிப்படியாக அவர்களை கண்காணித்தனர். பின்னர் அவர்களை ஆய்வு செய்ததில் அவர்களுக்கு டிமென்சியா நோய் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருந்தது. மேலும் அல்சீமர் நோய் பாதிப்புகள் ஏற்படும் அறிகுறிகளும் தென்படவில்லை.
இதற்குக் காரணம் காபியில் உள்ள காபின் எனப்படும் பொருள்தான் என்று கண்டறிந்துள்ளனர். திடீர் ஞாபகமறதி நோயாளிகள், தங்களை அல்சீமரில் இருந்து தற்காத்துக்கொள்ள தினசரி 3 கப் காபி குடிப்பதில் தவறேதும் இல்லைதானே.

அதிக லாபம் தரும் கொத்தமல்லி சாகுபடி

குறுகிய காலத்தில் விவசாயிகள் அதிக வருமானம் பெற ஏற்ற பயிராக கொத்தமல்லி உள்ளது.
கொத்தமல்லி மசாலா வகைப் பயிர்களில் முக்கியமானது. கொத்தமல்லி இலைகள் மற்றும் விதைகள், வாசனைப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகள் 8 ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
உலக அளவில் கொத்தமல்லி பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 2009-10-ம் ஆண்டில் கொத்தமல்லி (தனியா) 3.6 லட்சம் ஹெக்டேரில் பயிரிட்டு 2.37 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் கடலூர், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், திருப்பூர், திருச்சி மாவட்டங்களில் கொத்தமல்லி அதிகம் பயிரிடப்படுகிறது. தமிழகத்தில் 2008-09-ம் ஆண்டில் 14.4 ஆயிரம் ஹெக்டேரில் பயிரிட்டு 4.80 ஆயிரம் டன் கொத்தமல்லி (தனியா) உற்பத்தி செய்யப்பட்டது. கொத்தமல்லி சாகுபடி மொத்தப் பரப்பில் 93 சதம் மானாவாரியாகப் பயிரிடப்படுகிறது.
பருவம்

ஆண்டு முழுவதும் அனைத்து பருவ காலங்களிலும் கொத்தமல்லியை கீரைக்காகச் சாகுபடி செய்யலாம் என்றாலும், தமிழகத்தில் குளிர் காலம் மற்றும் கோடைக்காலம் என்ற இரு பருவங்களில் கொத்தமல்லி பெரும்பாலும் கீரைக்காகப் பயிரிடப்படுகிறது.
குளிர்கால சாகுபடி டிசம்பரில் தொடங்குகிறது. மாசி, பங்குனியில் கோடை சாகுபடி செய்யப்படுகிறது. கரிசல் மண் நிலங்களில் கொத்தமல்லி பாசனப் பயிராகச் சாகுபடி செய்யப்படுகிறது. பல்லடம் பகுதியில் விவசாயிகள் கொத்தமல்லியில் அதிக மகசூல் எடுக்கின்றனர். இங்கு உற்பத்தியாகும் கொத்தமல்லி பெருமளவில் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது.
விதைத்த 30 நாளில் அறுவடைக்கு வருவதால், குறுகிய காலப் பணப்பயிராக உள்ளது. இதை ஏக்கர் கணக்கில் ஒரே முறையாகப் பயிரிடாமல், 20 சென்டுகளாகப் பிரித்து 15 நாட்களுக்கு ஒரு முறை விதைத்தால், வருடம் முழுவதும் அறுவடை செய்யலாம். 400 கிராம் எடை கொண்ட ஒரு கட்டு கொத்தமல்லி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகிறது. கொத்தமல்லியை பயிரிட்டு குறுகிய காலத்தில் விவசாயிகள் லாபம் பெறலாம்.
சாகுபடி முறைகள்:

நிலத்தை கட்டிகள் இல்லாமல் நன்றாக உழுது சமன்படுத்திய பின்னர் பாத்திகள் அமைக்க வேண்டும். பாத்திகளின் பாரின் மீது வரிசையாக நேர் கோட்டில் விதைகளைப் போட்டு, மண் போட்டு மூடிவிட வேண்டும். பாரின் மேல் நீர் பாய்ச்சி வந்தால் விதைத்த 10-12 நாட்களில் முளைவிடும். நீர் பாய்ச்சிய 10-12 நாட்களில் களைக் கொல்லி (ஆக்சிகோல்ட்) அடிக்க வேண்டும். கோடை பட்ட சாகுபடியில் களைக் கொல்லிகள் தேவையில்லை.
முளைத்த 20-ம் நாள் 17:17:17 உரம் ஏக்கருக்கு 150 கிலோ இடவேண்டும். இலைவழி உரமாக 19:19:19-ஐ 30-வது நாளில் தெளிக்க வேண்டும். விதைத்த 8 நாட்களில் பழுது இல்லாமல் முளைத்து விட்டால், அறுவடையின் போது அனைத்து இலைகளும் ஒரே சீராகவும், அழகிய இலைகளாகவும் இருக்கும். பயிர் பாதுகாப்பிற்கு பூச்சிக் கொல்லி மருந்துகள் எச்சரிக்கையுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
முறையாகப் பயிரிட்டால், ஒரு ஏக்கரில் மகசூல் 6 ஆயிரம் கிலோ கொத்தமல்லி தழை கிடைக்கும். ஒரு கிலோ விலை ரூ.10 வீதம் கணக்கிட்டால் மொத்த வருவாய் ரூ.60 ஆயிரம். சாகுபடிச் செலவு ரூ.11,600 போக லாபம் ரூ.48,400 ஆகும். ஆண்டு முழுவதும் பயிரிட்டால் வருடத்திற்கு ஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் வரை கொத்தமல்லி கீரை அறுவடை செய்யலாம். ஹெக்டேருக்கு ரூ. 2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.
கொத்தமல்லி கீரை 50 நாள்களில் அறுவடைக்கு வரும். நாட்கள் அதிகமானால் எடை அதிகரிக்கும். எடை அதிகரிக்கும்போது விலை குறைந்துவிடும். ஆனால் 50 முதல் 55 நாள்களில் அறுவடை செய்தால் இலை நன்றாக இருக்கும். நல்ல விலை கிடைக்கும். சில்லறையாக விற்பனை செய்தால் கூடுதல் விலை கிடைக்கும்.
கொத்தமல்லி விதை (தனியா) உற்பத்தி, கொத்தமல்லித் தழையை விட கூடுதல் வருவாய் தரும் என்று வேளாண் அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். மார்ச் 2012-ல் (அறுவடையின் போது) கொத்தமல்லி குவிண்டாலுக்கு ரூ.3,100 முதல் ரூ.3,300 வரை விலை நிலவும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் விலை முன் அறிவிப்பு செய்துள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் தர்ப்பூசணி

குறைவான செலவில் அதிகமான லாபத்தை சம்பாதிக்க தர்ப்பூசணி பயிரிட விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை சார்பில் அழைப்பு விடப்பட்டு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டத்தில் மாதர்பாக்கம், போந்தவாக்கம், அமரம்பேடு, செதில்பாக்கம், மாநெல்லூர், நேமள்ளூர், பாதிரிவேடு, தேர்வாய் உள்ளிட்ட பல பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிட விவசாயிகள் ஆர்வத்தோடு உள்ளனர்.
அப்படி தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு தோட்டக்கலை துறை மூலம் விதைகளை மானிய முறையில் தந்து தோட்டக்கலைத் துறையின் ஆலோசனைப்படி குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்க வழிகளை தெரிவிக்கின்றனர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் தர்ப்பூசணி பயிரிட ஆகும் முதலீடு ரூ. 12 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் மட்டுமே. நிலத்தை உழுது பண்படுத்திய பின்பு 6-8 அடி அகல இடைவெளியில் கால்வாய் வெட்டிய பின் 3 அடி இடைவெளி விட்டு குழிகள் தோண்ட வேண்டும்.
இந்த குழியில் மக்கிய தொழு உரம், ரசாயன உரங்களை இட்டு நன்கு கலக்கிய பின்பு ஒரு குழிக்கு 3-4 விதைகளை இட்டு குழிகளை மூடி விட வேண்டும்.
விதை தூவிய 5-வது நாள் விதை முளைத்தல் நிகழும். இதைத் தொடர்ந்து வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. 15-ம் நாளுக்கு பிறகு நிலத்தில் முளைத்துள்ள களைகளை அகற்ற வேண்டும். இந்நிலையில் பூச்சிமருந்து தெளித்து பயிர்களை காக்க வேண்டியது அவசியமாகும்.
30-35-ம் நாளில் செடியில் பூப்பூக்க தொடங்கி அதை தொடர்ந்து காய் காய்த்து பெரிதாக தொடங்கும். பயிரிடப்பட்ட 65-75 நாள்களில் தர்ப்பூசணி நன்கு வளர்ந்து விற்பனைக்கு தயாராக இருக்கும்.
இப்படி இரண்டு மாத கால பராமரிப்பில் தர்ப்பூசணி சாகுபடி செய்யும் போது அதிகபட்ச லாபத்தை விவசாயிகள் அடைந்து பயனடையலாம் என்கின்றனர் தோட்டக்கலைத் துறையினர்.
ஒரு ஏக்கர் நிலத்தில் நல்ல பராமரிப்புக்கு தக்கவாறு 10 டன் தர்ப்பூசணி வரை விளைச்சலாக வாய்ப்புண்டு. தற்சமயம் ஒரு டன் தர்ப்பூசணி ரூ. 7 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை விலை போகிற நிலையில் குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலத்தில் விளையும் 10 டன் தர்ப்பூசணியை விற்பதன் மூலம் ரூ.70 ஆயிரம் வரை விற்கலாம்.
செலவுகள் போக குறைந்தபட்சம் ரூ.50 ஆயிரம் லாபத்தை 2 மாதங்களில் விவசாயிகள் பெற்று லாபம் பெற வாய்ப்பு உள்ளதால் தர்ப்பூசணி ஒரு லாபகரமான விவசாயப் பயிர் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு நல்ல தரமான விதைகளை 50 சதவீதம் மானியத்துடன் தோட்டக்கலைத் துறை தருகிறது.
அதே போல தோட்டக்கலைத் துறையோடு சேர்ந்து தேசிய வேளாண் நிறுவனமும் தர்ப்பூசணி பயிரிடும் விவசாயிகளுக்கு கருவிகள், பாஸ்வோபாக்டீரியா, சூடாமோனாஸ் போன்ற உயிரி உரங்களை பெற்று தருகின்றனர்.
கூலியாள்கள் கிடைக்க சிரமமாய் இருக்கும் இது போன்ற நாள்களில் குறைந்த ஆட்களைக் கொண்டு தோட்டப் பயிரான தர்ப்பூசணி பயிரிடுவது எளிதாக உள்ளதாலும் அதில் நிறைய லாபம் கிடைப்பதாலும் விவசாயிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
                                                                                                                   33:4. எந்த மனிதனுடைய அகத்திலும் அல்லாஹ் இரண்டு இருதயங்களை உண்டாக்கவில்லை

மாம்பழம் சாப்பிட்டால்

உடல் எடை குறையும் 
மெல்போர்ன்: குறிப்பிட்ட சில வகை மாம்பழங்களை தோலுடன் சாப்பிட்டால், உடல் எடை குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோடைகாலம் வரும் போது மாம்பழ சீசனும் தொடங்கி விடும். மாம்பழச் சுவையில் மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் உடம்புக்கு சூடு என்று எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால், குறிப்பிட்ட சில வகையான மாம்பழங்களை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பல்வேறு வகையான மாம்பழங்களில் உள்ள சத்து பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், மல்கோவா உள்பட சில ரகங்களின் தோலில் உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் சத்துகள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். எனவே, இந்த வகை மாம்பழங்களை உடல் பருமனானவர்கள் தோலுடன் சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி மைக் கிட்லே தெரிவித்தார். அதே சமயம், வேறு சில மாம்பழங்களில் உடல் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் பொருட்கள் உள்ளதாகவும், அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ‘இது ஆரம்ப கட்ட ஆராய்ச்சிதான். அடுத்தடுத்து ஆராய்ச்சிகள் நடைபெற்றால், உடல் பருமனை குறைக்க உதவும் மாம்பழங்களை பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்’ என்றும் மைக் கிட்லே கூறினார்.

சொக்லேட் சாப்பிட்டால் இதய நோயை தடுக்கலாம்.


குழந்தைகளுக்கு சொக்லேட் என்றால் கொள்ளைப்பிரியம். அதே சொக்லேட்டை இனி பெரியவர்களும் விருப்பமுடன் சாப்பிடலாம். சொக்லேட் சாப்பிடுவது இதய நோய் வருவதை தடுப்பதுடன், மாரடைப்பு, பக்கவாதம் தாக்குவதையும் தவிர்க்கிறதாம். ஆனால் இந்த சொக்லேட்டில் 60 சதவீதம் கொக்கோ அடங்கி இருக்க வேண்டும்.
உலக அளவில் மனித உயிரிழப்பில் இதய நோய்தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில் தான் அவுஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் விஞ்ஞானிகள் இது தொடர்பான ஒரு ஆராய்ச்சியை நடத்தி வந்தனர்.
சொக்லேட்டில் அடங்கியுள்ள கொக்கோவிற்குத் தான் இதய நோயைத் தடுக்கிற ஆற்றல் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே குழந்தைகளைப் போன்று பெரியவர்களும் சொக்லேட் சாப்பிடலாம். இதய நோயை தடுத்திடலாம்.

சர்க்கரை நோயால் காது செவிடாகும் வாய்ப்பு உள்ளது

சர்க்கரை நோயால் ஏற்படும் பக்கவிளைவுகளைக் கண்டுபிடிப்பதில் தற்போது காதுகளின் கேட்கும் திறனையும் பரிசோதனை செய்யும் அவசியம் ஏற்பட்டுள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் பாதங்கள், கண்கள், ஆகிய்வற்றின் ஆரோக்கியம் குறித்து அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால் சர்க்கரை நோய் காதுகளை செவிடாக்கலாம் என்பதே தற்போது புதிய கவலையாக முளைத்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள பல்வேறு ஆய்வுகளில் ஒன்றிரண்டை மேற்கோள்காட்டி மருத்துவர்கள் தற்போது சர்க்கரை நோயால் காதுகள் கேட்கும் சக்தியை இழக்கும் என்று கூறுகின்றனர்.

மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு காது செவிடாகும் வாய்ப்பு அந்த நோய் இல்லாதவர்களுக்கு ஏற்படுவதைக் காட்டிலும் இரு மடங்கு அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்கள் காதுகளின் உள்ளுக்குள் சத்தங்கள் ஏற்பட்டாலோ அல்லது ரீங்காரம் போன்று 'உய்ங்' என்று சத்தம் வந்தாலோ உடனே காது சிறப்பு மருத்துவரைப் பார்ப்பது நல்லது. டிவியை சத்தமாக வைத்துக் கேட்பது என்பது மிகவும் பரவலாக இருந்து வரும் பழக்கமாகும். இவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்குமெனில் இவர்கள் காதுகளையும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இரண்டு காதுகளிலும் சம அளவு கேட்கும் திறன் இழப்பு ஏற்பட்டால் அது வயதான கோளாறு என்று கூறலாம். ஆனால் நிறைய இளம் வயதினர்களில் ஒரு காது சற்று மந்தமடைவது தற்போது அதிகம் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அப்படியிருக்குமெனில் அதற்கு பல காரணங்களில் சர்க்கரை நோயும் ஒன்று என்கின்றனர் மருத்துவர்கள்.

காதுகளில் அழுக்கு சேருவது என்பது சர்க்கரை நோயின் ஒரு அறிகுறியாகும். ஏனெனில் காதுகளில் அழுக்கைப் போக்கும் கெராடின் என்ற ஒன்று சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு குறைவாக இருக்கும் அல்லது இல்லாமலே கூட போய்விடும். கெராடின் குறைபாட்டினால் காதுகளில் அழுக்கு விரைவில் சேர்ந்து காது செவிடாகும் வாய்ப்பு ஏற்படுகிறது.

ஆகவே சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனி கண் பாதிப்பு, இருதயம், கால்கள், பாதங்களுடன் காதுகளையும் பரிசோதனைக்குட் படுத்துவது சிறந்தது என்கிறது மருத்துவ வட்டாரம்.