Translate

Friday, March 15, 2013

முஹர்ரம் மாதம் வணக்கங்கள்!நன்மைகளை அதிகம் பெற்று மறுஉலக வாழ்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடத்திலே அதிகம் இருக்கிறது. இந்த பேராவ­னால் மார்க்கத்தில் இல்லாத காரியங்களை நன்மை தரக்கூடியவைகள் என்று எண்ணிக்கொண்டு தங்களது முயற்சிகளை பாழகாக்கிக்கொள்கிறார்கள். இந்நிலைக்கு முதற்காரணமாக மார்க்கத்தை கற்ற அறிஞர்களைத் தான் குறிப்பிட வேண்டும். இஸ்லாம் எவற்றையெல்லாம் நன்மையான காரியங்கள் என்றும் புனிதமானவை என்றும் சொல்­த்தந்திருக்கிறதோ அவற்றை அனைத்தையும் மக்களுக்கு இவர்கள் எடுத்துச் சொல்­யிருந்தால் ஏராளமான பித்அத்கள் என்றைக்கோ ஒழிந்திருக்கும்.
மார்க்கத்தை தூய வடிவில் அறிந்து கொள்ள விரும்பும் சகோதரர்கள் இதுபோன்ற பொய்கள் பரப்பப்படும் போது அது பற்றி அறிந்தவர்களிடம் கேட்கிறார்கள். எந்தெந்த விஷயத்தைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் சிறப்பித்துக் கூறியுள்ளார்களோ அதை மாத்திரம் மக்களுக்கு விளக்கிவிட்டால் அது தொடர்பாக யாராவது கட்டுக்கதைகளை புனையும் போது மக்கள் விழித்துக்கொள்வார்கள். அவைகள் மார்க்கத்திற்கு எதிரானவை என்பதை இதன் மூலமே அறிந்துகொள்ளலாம். முஹர்ரம் மாதத்தைப் பற்றி குர்ஆன் ஹதீஸ் கூறும் விளக்கங்களை நாம் தெரிந்துகொண்டால் அதன் பெயரில் பரப்படும் பொய்யான தகவல்களை நாம் எளிதில் தரங்கண்டுவிடலாம்.
புனித மிக்க மாதம்
திருமறைக்குர்ஆன்ஆனும் நபிமொழியும் முஹர்ரம் மாதத்தை புனித மாதம் என்று கூறி அம்மாதத்தில் போர் புரிவதை தடைசெய்கிறது. அதிகம் தவறுகளை செய்யும் மனிதர்களுக்கு இம்மாதத்தில் அது போன்ற தவறுகளை செய்யாதீர்கள் என்று கூறி அவர்கள் திருந்துவதற்கு உபதேசம் செய்கிறது.
வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்.
அல்குர்ஆன் (9 : 36)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியவையாகும். (மற்றொன்று) ஜ‎ýமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.
அறிவிப்பவர் : அபூபக்கர் (ர­)
நூல் : புகாரி (3197)
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். ”அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் (மற்றவர்களைத்) தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு (மஸ்ஜிதுல் ஹராமுக்கு) உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதை விடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது” எனக் கூறுவீராக!
அல்குர்ஆன் (2 : 217)
நோன்பு நோற்க சிறந்த மாதம்
நஃபிலான நோன்புகளை எந்த மாதத்தில் வேண்டுமானாலும் நோற்காலம். ஆனால் முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்றால் அதற்கு தனிச்சிறப்பு உண்டு. ரமலானிற்குப் பிறகு இம்மாதத்தில் நோன்பு வைப்பது சிறந்துது என்று நபி (ஸல்) அவர்கள் இம்மாதத்தின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த மாதத்திற்கு அல்லாஹ்வின் மாதம் என்று புகழ்ந்தும் கூறியுள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ரமலானிற்கு பிறகுள்ள நோன்புகளில் சிறந்தது அல்லாஹ்வின் மாதமாகிய முஹர்ரம் மாதத்தில் வைக்கும் நோன்பாகும். கடமையானத் தொழுகைகளுக்குப் பிறகுள்ள தொழுகைகளில் சிறந்தது இரவுத் தொழுகையாகும்.
அறிவிப்பவர் : அபூஹ‏þரைரா (ர­)
நூல் : முஸ்­ம் (2157)
ஆஷ‎ýரா என்னும் நாளையும் (ரமலான் என்ற) இம்மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பித்துத் தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­) அவர்கள்
நூல் : புகாரி (2006)
ஆஷுரா நோன்பு லி முஹர்ரம் 9,10
முஹர்ரம் மாதத்தில் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு வைப்பது பற்றியும் நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். இதற்கு ஆஷ‎ýரா என்று பெயர் சொல்லப்படும். ரமலான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு இந்நாள் தான் நோன்புக்குரிய நாளாக இருந்தது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்ட உடன் இதில் நோன்பு வைப்பது விரும்பத்தகுந்த காரியமாகிவிட்டது. இந்த நாளில் தான் குறைஷிகள் கஅபாவிற்கு திரையை மாற்றிவந்தார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷுரா தினத்தன்று நோன்பு நோற்று அதில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையிட்ட போது மக்கள் அல்லாஹ்வின் தூதரே அது யூதர்கள் மற்றும் கிறித்துவர்கள் மகத்துவப்படுத்தும் நாள் என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வரக்கூடிய வருடத்தில் அல்லாஹ் நாடினால் ஒன்பதாவது நாளன்றும் நாம் நோன்பு நோற்போம் என்று சொன்னார்கள். ஆனால் அடுத்த வருடம் வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்
நூல் : முஸ்­ம் (2088)
நபி (ஸல்) அவர்கள் முஹர்ரம் மாதம் 9,10 ஆம் நாட்களில் நோன்பு நோற்க விருப்பம் தெரிவித்திருப்பதால் நாம் முஹர்ரம் 9,10 நாட்களில் நோன்பு நோற்கவேண்டும்.
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷ‎ýரா (முஹர்ரம் 10ம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவிற்கு புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பை கடமையாக்கிய போது யார் (ஆஷ‎ýதைவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அதை அவர் நோற்றுக்கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர­)
நூல் : புகாரி (1592)
பிர்அவ்ன் கொல்லப்பட்ட மாதம்
இந்த நாளிற்கு இவ்வளவு சிறப்பு கிடைக்கக் காரணம் கொடுங்கோல் அரசன் ஃபிர்அவ்ன் நீரில் மூழ்கடிக்கப்பட்டு மூஸா (அலை) மற்றும் அவர்களுடைய கூட்டாத்தார்கள் காப்பாற்றப்பட்ட நாளகாக இருப்பதினாலாகும்.
நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். இது என்ன நாள்? என்று கேட்டார்கள். யூதர்கள் இது நல்ல நாள். இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள். இதற்காக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் உங்களை விட மூஸாவுக்கு அதிக உரிமைபடைத்தவன் நான் என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர­)
நூல் : புகாரி (2004)
முன்வருடத்தின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன
இந்நாளில் நோன்பு நோற்றால் இந்நாளிற்கு முன்பு ஒரு வருடத்தில் நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரமாக இந்த நோன்பை அல்லாஹ் ஏற்படுத்துகிறான். வருடாவருடம் வருகின்ற இந்த நோன்பை விடாமல் தொடர்ந்து நாம் கடைபிடித்து வந்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன.
ஆஷ‎ýரா தினத்தில் நோன்பு வைத்தால் அதற்கு முன்னால் உள்ள வருடத்தின் பாவத்தை அல்லாஹ் மன்னித்துவிடுவான் என்று நான் நினைக்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ர­)
நூல் : முஸ்­ம் (2151)

No comments:

Post a Comment