Translate

Wednesday, July 18, 2012

இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அப்போது நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம், '(வாகனத்திலிருந்து) இறங்கி, (உண்பதற்கேற்ப) மாவை எனக்காகக் கரைப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கவர், 'இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!" என்றார். மீண்டும் நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!" என்றார்கள். அப்போதும் அம்மனிதர், 'இறைத்தூதர் அவர்களே! (இன்னும் முழுமையாக மறையவில்லையே,) சூரியன்!" என்றார். நபி(ஸல்) அவர்கள், 'இறங்கி எனக்காக மாவைக் கரைப்பீராக!" என்று மீண்டும் கூறினார்கள். அவர் இறங்கி மாவைக் கரைத்தார். அதை நபி(ஸல்) அவர்கள் அருந்திவிட்டுத் தம் கையால் (கிழக்கே) சுட்டிக் காட்டினார்கள் பிறகு, 'இங்கிருந்து (கிழக்கிலிருந்து) இரவு முன்னோக்கி வருவதை நீங்கள் கண்டால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்யலாம்! என்றார்கள்.

No comments:

Post a Comment