Translate

Wednesday, July 18, 2012

சக்கரை வியாதி

சக்கரைவியாதி(Diabetes) என்பது மனித உடலின் இரத்தத்தில் குழுக்கோஸின் (glucose, இனிப்பு, சீனி, வெல்லம் அல்லது சக்கரை) அளவு அதிகரித்துக் காணப்படும் குறைபாடாகும். உடலிலுள்ள அதிகரித்த குளுக்கோசினை சரிவர உபயோகிக்க முடியாத காரணமாக உண்டாகும் சக்கரை வியாதி அல்லது சலரோகம் எனும் வியாதி இரண்டு வகைகளில் மருத்துவரீதியாக உள்ளடக்கப்படும். இந்த இரு வகைகளையும் தீர்மானிப்பது இன்சுலின் (insulin) எனும் வேதியற்(hormone) சுரப்பு பதார்த்தமாகும்.
சாதாரணமாக ஆரோக்கியமான உடலில் இன்சுலின் என்பது மண்ணீரல் (pancreas) எனும் உறுப்பினால் சுரக்கப்படுவதுடன் இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவினையும் அதுவே சிறந்த முறையில் பராமரிக்கின்றது. இன்சிலினானது உடலிலுள்ள கலங்கள் சக்கரை மூலமான சக்தியினை பெறுவதற்கு மிகவும் அத்தியாவசியமாக அமைவதுடன் (சிறப்பான மனித உடல் இயக்கத்திற்கும் காரணியாவதுடன்) அவ்வாறு இல்லாத இன்சுலினின் அசாதாரண தொழிற்பாடு நோய்க்கும் முக்கிய காரணமாகின்றது.
சக்கரை வியாதிக்கு உட்பட்டு உலகில் பல கோடி மக்கள் வாழ்வதாகவும் அதில் பலரும் தமக்கு சக்கரை வியாதி இருப்பதனை காலம் தாழ்த்தியே அறிவது காரணமாக பாரிய உடல் உபாதைக்கு உள்ளாகின்றனர். கலம்கடந்த அல்லது கவனிக்கப்படாத சக்கரை வியாதிகாரணமாக இருதய வியாதி (மாரடைப்பு), சிறுநீரக கோளாறு, கண்பார்வை இழப்பு, இரத்த நரம்புகள் பழுதடைதல், கால் மற்றும் உறுப்புக்கள் செயலிழப்பதால் சத்திரசிகிச்சை மூலம் அகற்றவேண்டிய நிலை என்பன முக்கிய பாதிப்புகளாகும். மேலும் சக்கரை வியாதியானது பரம்பரை அலகு காரணமாகவும் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை காரணமாகவும் ஏற்படுகின்றது.
சக்கரை வியாதிக்கான அறிகுறியாக உடல்மெலிவடைதல், கடுமையான தாகம், இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், பிறப்பு உறுப்புக்களில் சொறிவு அல்லது அரிப்பு என்பன பொதுவான அறிகுறிகளாக உள்ளபோதிலும் சிலருக்கு மேலுள்ள அறிகுறி எதுவும் இருப்பதும் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. சக்கரை வியாதிக்கு தீர்வு தரும் சிகிச்சை இதுவரை இல்லை எனினும் மருந்து மாத்திரை, இன்சுலின் மாற்றீடு, உடற் பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை (உணவுப் பழக்கம்) மூலமா சக்கரை வியாதியினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்பது சற்று இனிப்பான விடையம். இருந்தபோதிலும் வருமுன் காத்தல் அல்லது விழிப்புணர்ச்சி என்பது சக்கரை வியாதி தொடர்பில் அவசியம் எனும் நோக்கில் மிகுதி விடயங்களையும் அறிதல் அவசியமாகும்.

சக்கரை வியாதி வகை 1 மனித உடலில் இன்சுலினினை உற்பத்திசெய்யும் மண்ணீரல் எனும் உறுப்பின் செயற்பாடு முற்றாக செயலிழக்கப்படுவது காரணமாக ஏற்படும் குறைபாடு இந்த வகையினால் (முதல் வகை சக்கரை வியாதி) குறிப்பிடப்படும். மேற்படி உறுப்பின் செயலிழப்பு காரணமாக இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிப்பதுடன் சிறுநீர் மூலமாகவும் வெளியேற்றப் படுகின்றது. பெரும்பாலும் 25 தொடக்கம் 40 வயதிற்குள் இவ்வியாதியின் தாக்கம் அதிகளவில் இருப்பதுடன் சிறு வயதினரும் கணிசமான அளவில் பாதிக்கப்படுகின்றனர். உலகின் மொத்த சக்கரை வியாதி தாக்கத்தினரின் 10% தொடக்கம் 15% மட்டுமே இத்தாக்கத்தில் இருப்பதும் தரவுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. மேலும் மண்ணீரலின் முழுமையான பாதிப்பிற்கான காரணம் இதுவரை அறியப்படாத போதிலும் சிலவகை வைரஸ் தாக்கம் காரணியாக இருக்கலாம் என நப்பப்படுகின்றது. இந்த வகை தாக்கத்தினர் செயற்கை இன்சுலின் செலுத்துகை (இன்சுலின் மாற்றீடு), உடற் பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் மூலமா சக்கரை வியாதியினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்.

(சக்கரை வியாதி வகை ஒன்றினை வீடியோ மூலமான விளக்கம் பார்வையிட கிளிக் செய்யவும்.)

சக்கரை வியாதி வகை 2 உடலுக்கு வேண்டிய போதிய இன்சுலின் சுரப்பு இல்லாத காரணத்தினால் அல்லது இன்சுலின் போதுமாக இருந்தும் அது கலங்களினால் சரிவர பாவிக்கமுடியாத தன்மை இரண்டாம் வகை சக்கரை வியாதி என அழைக்கப்படும். இந்த வகை சக்கரை வியாதி பாதிப்பு 40வயதிற்கு மேலான வயதினருக்கு உலகளாவியரீதியில் பாதித்துள்ளமை புள்ளிவிபரம் மூலம் அறியப்படுகின்றது. இருந்தும் இந்த வகைத்தாக்கத்திற்கு இளையவர்கள் விதிவிலக்கல்ல என்றபோதிலும் கறுப்பர் வெள்ளையர் வகையினர் பிரிவுகளில் கறுப்பு இனத்தினர் பெருமளவில் பாதிப்பாவதும் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளை இனத்தினர் 40 வயது மேலாகவும் கறுப்பினத்தவர் அல்லது ஆசிய நாட்டினை சேர்ந்தவர்கள் 25 வயதின் பின்னதாகவும் பெரும் எண்ணிக்கையிலும் பாதிப்புக்கு உட்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. மேலும் இந்த வகை சக்கரை வியாதியானது 85% தொடக்கம் 95% அளவில் மக்களை பீடித்துள்ளதையும் புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகின்றது. இந்த வகை தாக்கத்தினர் வாழ்நாளில் நாளாந்தம் அவசியமாக (கட்டாயமாக) செயற்கை இன்சுலின் செலுத்துகை (இன்சுலின் மாற்றீடு), உடற் பயிற்சி மற்றும் உணவுப் பழக்கம் என்பவற்றுடன் மேலதிக மருந்து மாத்திரை மூலமாகவும் (சக்கரை வியாதியினை) கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியுள்ளது.
(சக்கரை வியாதி வகை இரண்டின் வீடியோ மூலமான விளக்கம் பார்வையிட கிளிக் செய்யவும்.)

சக்கரை வியாதி முன் எச்சரிக்கைகள் (தடுப்பு முறைகள்)
சக்கரை வியாதியின் முனெச்சரிக்கை வழிகளாக உடலின் இரத்த அழுத்தம் , சக்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, பார்வை கோளாறு இவற்றுடன் பாதத்தினையும் (காலின் கீழ்பகுதி) கண்காணித்தல் அவசியமாகின்றது.
கடுமையான மனவியாதி பாதிப்பு உடையோரும் குளுக்கோமிய போன்ற கண்பார்வை கோளறு உள்ளோரும் வைத்திய ஆலோசனை பெறல் வேண்டும்.
நீங்கள் ஆசிய இனத்தவராகில் 25வயது மேலாகும் தருணத்தில் வைத்திய பரிசோதனை மூலம் சக்கரை வியாதி பற்றிய கண்காணிப்பு அவசியம்.
உங்களின் குடும்ப உறவுகளில் (தாய், தந்தையர், அவர் சந்ததி மற்றும் சகோதர சகோதரி) சக்கரை வியாதி இருப்பின் வைத்திய ஆலோசனை பெறல்.
அதிகரித்த உடல் எடை பற்றிய கவனம். இதிலும் உங்கள் இடுப்பின் அளவு ஆசியராக இருக்குமிடத்து ஆண் 35அங்குலம் ,பெண் 31.5 அங்குலம் மேலாகவும் ; வெள்ளையர் அல்லது கறுப்பராயின் 37அங்குலம் மேலாகவும் இருக்குமிடத்து எச்சரிக்கை அவசியமாகின்றது. (இது விடையமான கணிப்பீட்டினை கீழே உள்ள கருவிமூலம் சரி பார்க்கவும்.)

No comments:

Post a Comment