Translate

Sunday, July 15, 2012

காளான் பிரியாணி

தேவையான பொருட்கள்:
காளான் - 250 கிராம் கிராம்பு - 4
வெங்காயம் - 1 ஏலக்காய் - 3
தக்காளி - 1/4 பட்டை - 1
இஞ்சி - சிறிதளவு அன்னாசி மொக்கு - 3
பூண்டு - 4 பல் பிரியாணி இலை - 1
கொத்தமல்லி - சிறிதளவு புதினா - சிறிதளவு
பாஸ்மதி அரிசி - 2 கப்
செய்முறை:

வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காளானை தேவைக்கேற்ற அளவில் நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, அன்னாசி மொக்கு, இஞ்சி, பூண்டு, நன்கு நறுக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்றாக வதக்கிக் கொள்ளவும். வதக்கியதை நன்கு ஆறவிட்டு புதினா, கொத்தமல்லி சேர்த்து மிக்ஸ்சியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பின் குக்கர் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, அதில் ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். அதில் அரைத்த விழுதை சேர்த்து மீண்டும் வதக்கவும். நறுக்கிய காளானை அதில் சேர்க்கவும். காளான் நன்கு வதங்கியதும் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதி வந்தவுடன் அரிசியை போடவும். பின் குக்கர்-ஐ மூடி இரண்டு விசில் வரை விடவும். சுவையான காளான் பிரியாணி ரெடி.

No comments:

Post a Comment