Translate

Monday, July 16, 2012

சளிக்கட்டு குறைய

கீழ்கண்ட மூலிகைகளை முறைப்படி எலுமிச்சை பழச்சாறு, பசும்பால் கலந்து உலர்த்தி நன்றாக இடித்து சலித்து சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் சளிக்க்ட்டு குறையும்.

மிளகு

அதிமதுரம்

திப்பிலி


அறிகுறிகள்:

சளிக்கட்டு.
தேவையான பொருள்கள்:

மிளகு = 80 கிராம்
அதிமதுரம் = 10 கிராம்
திப்பிலி = 10 கிராம்
சுக்கு = 20 கிராம்
எலுமிச்சை பழச்சாறு.
பசும்பால்.
நெய்.
செய்முறை:

குறிப்பிட்டுள்ள அளவுக்கு கூடுதலாக மிளகை எடுத்து தோலை நீக்கி கொள்ளவும். ஒரு மண் பாத்திரத்தில் போடவும். அதனுடன் 5 கிராம் ஓமத்தை போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து ஓமத்தை மட்டும் புடைத்து நீக்கி விடவும்.
அதிமதுரத்தை நனறாக தட்டி ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 100 மி.லி பசும்பாலை ஊற்றி பால் சுண்டும் அளவுக்கு எரித்து அதிமதுரத்தை நிழலில் உலர்த்தி கொள்ளவும்.
சுக்கை தோல் நீக்கி குறிப்பிட்டுள்ள அளவு எடுத்து கொள்ளவும்.
திப்பிலியை மண் பாத்திரத்தில் போட்டு 50 மி.லி எலுமிச்சை பழச்சாற்றை ஊற்றி சாறு சுண்டும் அளவுக்கு எரித்து சுண்டியதும். 50 மி.லி நெய்யை ஊற்றி திப்பிலியை வறுத்து எடுத்து நெய்யை நீக்கி கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து இடித்து சலித்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:

இந்த சூரணத்தை காலை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் 1 தேக்கரண்டி அளவு சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடிக்கவும்.
மாலை 6 மணி அளவில் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வரவும். இவ்வாறு 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சளிக்கட்டு குறையும்.
குறிப்பு:

இந்த சூரணம் முடியும் வரை தயிர், இளநீர், பழஞ்சோறு, குளிர்ந்த பானங்கள், இறைச்சி உணவுகள், ஆகியவற்றை தவிர்க்கவும்.

No comments:

Post a Comment