Translate

Wednesday, July 18, 2012

மறதி நோயை (அல்சீமர் நோய்) தடுக்கக்கூடிய காய்கறிகள்!

உடல் ஆரோக்கியத்திற்காக உட்கொள்ளப்படும் காய்கறிகள் மறதிநோய் எனப்படும் அல்சீமர் நோய் ஏற்படாமல் தடுக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள சத்தான கொழுப்புகளும், காய்கறிகளில் உள்ள தாவர எண்ணெய்களும்தான் அல்சீமரை தடுக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.
சிகாகோவில் உள்ள ஆய்வாளர்கள் 65 வயதிற்கு மேற்பட்ட 815 நபர்களிடம் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். அவர்களுக்கு உயர்தர சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பால் பொருட்களை கொடுத்து சோதனை செய்தனர். அதில் வியப்பூட்டும் மாற்றம் ஏற்பட்டது. 80 சதவிகிதம் வரை அல்சீமர் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. காய்கறிகளில் உள்ள நல்ல கொழுப்புகள் ரத்த நாளங்களில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கிவிடுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காய்கறி உணவுகள் இதயநோய் ஏற்படாமல் தடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள மேற்கொண்ட ஆய்வில் வைட்டமின் சி வைட்டமின் இ சத்து நிறைந்த உணவுகள் அல்சீமர் ஏற்படாமல் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைட்டமின்களில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ஸ் மூளை நரம்புகளுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படுவதாலேயே அல்சீமர் எனப்படும் மறதிநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட 980 நபர்களுக்கு வைட்டமின் சி, வைட்டமின் இ நிறைந்த காய்கறிகள், உணவுகளை உட்கொள்ள கொடுத்தனர் அதில் 242 பேர்களுக்கு அல்சீமர் நோய் பாதிப்பு படிப்படியாக குறைந்தது தெரியவந்தது. இந்த இரு ஆய்வு முடிவுகளும் நரம்பியல் தொடர்பான மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment