Translate

Wednesday, July 18, 2012

வெல்லக் கொழுக்கட்டை


பச்சரிசி - 2 கப்,
வெல்லத்தூள் - முக்கால் கப்,
கருப்பு அல்லது வெள்ளை காராமணி (தட்டைப் பயறு) - கால் கப்,
பல், பல்லாக நறுக்கிய தேங்காய் - கால் கப்,
ஏலக்காய் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - 1 சிட்டிகை,
நெய் - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் தேவையான அளவு.
அரிசியை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து நிழலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். காராமணியை வறுத்து, ஊற வைத்து, வேக வைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் மாவை நிதானமான தீயில் நன்கு சிவக்க வறுத்துக் கொள்ளவும். வேறு ஒரு கடாயில் 5 கப் தண்ணீர் விட்டு, வெல்லத்தைப் போட்டுக் கரையவிட்டு, வடிகட்டி, பிறகு அந்தக் கரைசலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.

கொதித்து வரும் போது, மாவை சிறிது, சிறிதாகத் தூவி, கட்டிகள் இல்லாமல் கிளறவும். அதில் ஏலக்காய் தூள், நெய், காராமணி, உப்பு, தேங்காய் சேர்த்துக் கிளறவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக ஆறியதும், கட்டிகள் இல்லாமல் பிசைந்து, நீள வடிவத்தில் சிறுசிறு கொழுக்கட்டைகளாகப் பிடித்து, ஆவியில் வேக வைக்கவும். தொட்டுக் கொள்ள வெண்ணெயுடன் பரிமாறவும்.

No comments:

Post a Comment