Translate

Wednesday, July 18, 2012

பெங்காலி கோகனட் பர்பி அல்லது லட்டு

தேங்காய்த் துருவல் - 2 கப், 
பாகுவெல்லம் - ஒன்றரை கப், 
நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து (அரை கப்) அடுப்பில் வைத்து கரைந்ததும், வடிகட்டவும். பின் மீண்டும் வைத்து ஒரு கம்பிப்பாகு பதம் வரும்வரை மிதமான தீயில் கிளறவும். இத்துடன், தேங்காய்த் துருவலை மிக்ஸியில் ஒரு சுத்து சுத்தி பாகுடன் சேர்த்து (தேங்காய்த் துருவலை அழுத்தாமல் அளக்கவும்.) கிளறவும். சுருண்டு வரும்போது இறக்கிவிட வேண்டும்.

கை தாங்கும் சூடு இருக்கும்போது கையில் நெய்யைத் தொட்டு சிறு உருண்டைகளாக உருட்டவும். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி வில்லைகள் போடுங்கள்.

குறிப்பு: இது கொல்கத்தாவாசிகளின் வீட்டில் அடிக்கடி செய்யும் ஸ்வீட் பிரசாதமாகும். இதில் வெல்லம் சேர்த்திருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். இரும்புச் சத்தும் உள்ளது.

No comments:

Post a Comment