Translate

Sunday, July 22, 2012

மாம்பழம் சாப்பிட்டால்

உடல் எடை குறையும் 
மெல்போர்ன்: குறிப்பிட்ட சில வகை மாம்பழங்களை தோலுடன் சாப்பிட்டால், உடல் எடை குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆஸ்திரேலியா பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது. கோடைகாலம் வரும் போது மாம்பழ சீசனும் தொடங்கி விடும். மாம்பழச் சுவையில் மயங்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். மாம்பழம் அதிகமாக சாப்பிட்டால் உடம்புக்கு சூடு என்று எல்லோரும் பயப்படுவார்கள். ஆனால், குறிப்பிட்ட சில வகையான மாம்பழங்களை சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாண்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பல்வேறு வகையான மாம்பழங்களில் உள்ள சத்து பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். அதில், மல்கோவா உள்பட சில ரகங்களின் தோலில் உடல் கொழுப்பை கட்டுப்படுத்தும் சத்துகள் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். எனவே, இந்த வகை மாம்பழங்களை உடல் பருமனானவர்கள் தோலுடன் சாப்பிட்டு வந்தால், அவர்களின் உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளது என்று விஞ்ஞானி மைக் கிட்லே தெரிவித்தார். அதே சமயம், வேறு சில மாம்பழங்களில் உடல் கொழுப்பை அதிகரிக்கச் செய்யும் பொருட்கள் உள்ளதாகவும், அவை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ‘இது ஆரம்ப கட்ட ஆராய்ச்சிதான். அடுத்தடுத்து ஆராய்ச்சிகள் நடைபெற்றால், உடல் பருமனை குறைக்க உதவும் மாம்பழங்களை பற்றிய முழு விவரங்கள் தெரிய வரும்’ என்றும் மைக் கிட்லே கூறினார்.

No comments:

Post a Comment