Translate

Friday, July 20, 2012

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது. 
"அவர்கள் களா செய்யுமாறு கட்டளையிடப்பட்டார்களா?' என்று ஹிஷாம்(ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் 'களா செய்வது அவசியமில்லாமல் போகுமா?' என்று கேட்டார். ('களா செய்வது அவசியமாகும்!' என்பது இதன் பொருள்.) 
"அவர்கள் களா செய்தார்களா? இல்லையா என்பது எனக்குத் தெரியாது!" என்று ஹிஷாம்(ரஹ்) கூறினார்கள் என மஃமர் கூறுகிறார். 

No comments:

Post a Comment