Translate

Saturday, July 28, 2012

குழந்தைகளுக்கு ஏற்படும் பற்சூத்தைகளைத் தடுக்க சில வழிகள் .

குழந்தைகளை நாளாந்தம் எழுந்தவுடனும் படுக்கப்போகும் முன்னரும் பற்சுத்தம் செய்தபோதும் அவர்களுக்குப் பற்சூத்தைகள் வருகின்றனவே என்றுதான் பல பெற்றோர்கள் சலித்துக்கொள்வார்கள்.

எனினும் இவற்றிற்கு xylitol (மதுசார இனிப்பாக்கி) என்ற கனிமம் அடங்கிய chewing gum இனை உணவு உட்கொண்டபின்னர் கொடுத்தால் அது பக்ரீரியாக்களைக் குறைத்து அமிலங்களை வாய்க்குள் சமநிலைப்படுத்தி அரிப்பைத் தடுக்கின்றது என்கின்றார் ஓர் பல்வைத்தியர். அத்துடன் நீங்கள் சாப்பிடும் அனைத்தும் இதன்மூலம் சப்பித்துப்பப்படுவதால் அகற்றப்பட்டுவிடும். இதனால் பற்சூத்தைகளும் குறைக்கப்படலாம் என்கின்றார் பல்வைத்தியரான திரு.ஸ்வான்.
எனினும் ஓசோன் என்ற 60-80 டொலர்வரையான பெறுமதியைக் கொண்ட சிகிச்சை முறையை பரவலாக வெளிநாடுகளில் செய்யப்படுகின்றதெனினும் அதனைச் சரியெனச் சொல்லமுடியாதென்றும் அச்சிகிச்சையின் பலன் கேள்விக்குறியானதேயென்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் இதனால் பற்சூத்தையின் ஆரம்ப கட்டத்தினைக் குறைத்துக் குறிப்பிடத்தக்களவு பலன் கிடைத்ததாகவும் இன்னொரு வைத்தியர் கூறினார். இந்த முறைமூலம் ஓசோன் வாயுவினைப் பல்லினூடாகப் பல மாதங்களுக்கொருமுறை செய்யும்போது பற்சூத்தையின் ஆரம்ப கட்டத்தினை இது குறைக்குமென்கின்றார். ஆனால் ஒரு துவாரம் வந்தபின்னர் இதனைப் பயன்படுத்துவதில் பயனில்லையென்றார் இன்னொரு பல் வைத்தியர்.
ஆரம்பகட்டத்திலேயே பற்களின் பாதிப்பைக் கண்டுபிடித்தால் தம்மால் எவ்வளவோ செய்யமுடியுமென்கின்றனர் வைத்தியர்கள்.
ஒரு குழந்தைக்குப் பற்சூத்தை வருவதற்கான காரணங்கள்.
1. நல்ல புளுரைட் அற்ற நீருள்ள பகுதியில் வாழ்வது
2. உணவுகளுக்கிடையே சீனித்தன்மையுள்ள உணவுகளையும் நீரில்லாத வேறு உறிஞ்சிக்குடிக்கும் திரவ உணவுகளை உண்பது.
3. நாளொன்று ஒருமுறையும் சுத்தப்படுத்தாமல் இருப்பது.
4. பெற்றோர் தமது பிள்ளைகளின் பற்களைச் சுத்தஞ்செய்யமுடியாத சுகாதார மற்றும் பழக்கவழக்கப் பிரச்சினைகளைக் கொண்டிருப்பது.
5. பெற்றோரில் அல்லது பராமரிப்பவரில் பற்சூத்தை காணப்படுவது (குழந்தைகளுக்கு இது வாய் பக்ரீரியாவால் பரவும்)
6. பல்லில் வெண்மை அல்லது மஞ்சள் நிறங்கள் காணப்படுதல்.
7. குழந்தையின் முன்புறப் பற்களில் தெரியக்கூடிய பாதிப்பு, துவாரம், வெட்டு அல்லது மிகவும் வெண்மையான பகுதி காணப்படுவது.
8. காலத்திற்கு முந்திய பிறப்பு. 1500 கிராமிற்கும் (3 இறாத்தல்) குறைவாகக் காணப்படுதல்.
இவ்வாறான விடயங்களைத் தவிர்த்துக் கவனமாயிருந்தால் உங்களது பிள்ளைகளையும் நீங்கள் பற்சூத்தைகளிலிருந்து காப்பாற்றலாம்.

No comments:

Post a Comment