Translate

Saturday, August 11, 2012

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யாருக்கேனும் செல்வதைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனுடைய கழுத்தில் சுற்றிக் கொண்டு தன்னுடைய இரண்டு விஷப் பற்களால் அவனுடைய தாடையைக் கொத்திக் கொண்டே, 'நானே உன்னுடைய செல்வம்" 'நானே உன்னுடைய புதையல்" என்று கூறும்." 
இதைக் கூறிவிட்டு, 'அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் உலோபித்தனம் செய்கிறவர்கள் அது தமக்கு நல்லதென எண்ணவே வேண்டாம். அவ்வாறன்று! அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபித்தனத்தால் சேர்த்துவைத்த (பொருள்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்." என்ற (திருக்குர்ஆன் 03:180) வசனத்தை ஓதினார்கள். 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும் ஸக்காத் வழங்குவதாகவும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்துக் கொண்டேன்.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் மரணித்து அபூ பக்ர்(ரலி) (ஆட்சிக்கு) வந்ததும் அரபிகளில் சிலர் (ஸகாத்தை மறுத்தன் மூலம்) இறைமறுப்பாளர்களாகிவிட்டனர். (அவர்களுடன் போர் தொடுக்க அபூ பக்ர்(ரலி) தயாரானார் (உமர்(ரலி), 'லா இலாஹ இல்லல்லாஹ்" கூறியவர் தம் உயிரையும் உடைமையையும் என்னிடமிருந்து காத்துக் கொண்டார் தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர அவரின் விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கும்போது, நீங்கள் எவ்வாறு இந்த மக்களுடன் போரிட முடியும்?' என்று கேட்டார். அபூ பக்ர்(ரலி), உமரை நோக்கி, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக, தொழுகையையும் ஸகாத்தையும் பிரித்துப் பார்ப்போருடன் நிச்சயமாக நான் போரிடுவேன். ஸகாத் செல்வத்திற்குரிய கடமையாகும்; அல்லாஹ்வின் மீது ஆணையாக! நபி(ஸல்) அவர்களிடம் வழங்கி வந்த ஓர் ஒட்டகக் குட்டியை இவர்கள் வழங்க மறுத்தால் கூட அதை மறுத்தற்காக நான் இவர்களுடன் போரிடுவேன்" என்றார். இது பற்றி உமர்(ரலி), 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ரின் இதயத்தை (தீர்க்கமான தெளிவைப் பெரும் விதத்தில்) அல்லாஹ் விசாலாமாக்கியிருந்தாலேயே இவ்வாறு கூறினார். அவர் கூறியதே சரியானது என நான் விளங்கிக் கொண்டேன்" என்றார். 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

அப்துல்கைஸ் கூட்டத்தினர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் ரபீஆக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கும் உங்களுக்குமிடையே இஸ்லாத்தை ஏற்காத முளர் கூட்டத்தினர் வசிக்கிறார்கள். எனவே, யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதங்களிலன்றி (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியாது. எனவே, எங்களுச்குச் சில கட்டளைகளைக் கூறுங்கள். நாங்களும் அதைப் பின்பற்றி எங்களுக்குப் பின்னால் தங்கிவிட்டவர்களுக்கும் அறிவிப்போம்' என்றார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உங்களுக்கு நான் நான்கு காரியங்களை ஏவுகிறேன்; நான்கு காரியங்களைத் தடை செய்கிறேன். அவை: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லையென்று உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நாட்டுதல், ஸகாத் வழங்குதல், போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பங்கை வழங்குதல்' என்று விரலால் எண்ணிச் சொன்னார்கள். மேலும், 'மது வைத்திருந்த மண் சாடிகள், சுரைக் குடுக்கைகள், பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரித்த மரப்பீப்பாய்கள், தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகிய நான்கை உங்களுக்கு நான் தடை செய்கிறேன்' என்று கூறினார்கள். (பின்னர் இத்தடை நீக்கப்பட்டது) 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்" என்றார்கள். அதற்கவர், 'என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்' என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், 'சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்" என்றார்கள். 

அபூ அய்யூப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து. 'என்னைச் சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்' எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) 'இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?' என்றனர். நபி(ஸல்) அவர்கள் 'இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!" (என்று கூறிவிட்டு அவரிடம்.) 'நீர் அல்லாஹ்வை வணங்கவேண்டும்: அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது: தொழுகையை நிலை நாட்ட வேண்டும்: ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்" என்று கூறினார்கள். 

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் முஆத்தை யமனுக்கு (ஆளுநராக) அனுப்பினார்கள். அப்போது அவரிடம், 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை; நான் இறைத்தூதர் என்ற உறுதிமொழியின் பால் அவர்களை அழைப்பீராக! இதற்கு அவர்கள் கட்டுப்பட்டால் தினமும் ஐவேளைத் தொழுகையை இறைவன் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக! இதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களில் செல்வந்தர்களிடம் பெற்று, ஏழைகளுக்கு வழங்குவதாக அவர்களின் செல்வத்தில் இறைவன் ஸகாத்தைக் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவிப்பீராக!" என்று கூறினார்கள். 

அனஸ்(ரலி) அறிவித்தார்.

சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி(ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள். 
மற்றோர் அறிவிப்பில் அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபி(ஸல்) அவர்கள் தாமாகவோ, நான் கேட்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப் படுகிறாயா?' எனக் கேட்டார்கள். நான் ஆம் என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின்புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். 
(பிறகு அவர்களை நோக்கி) 'அர்பிதாவன் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்" என்று கூறினார்கள். நான் பார்த்துச் சலித்தபோது 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ!" என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்னம் பின்னும் எதையேனும் தொழவில்லை. பிறகு பெண்கள் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் பிலால்(ரலி) இருந்தார். தர்மம் செய்வதன் அவசியம் குறித்து அவர்களுக்கு நபி(ஸல்) விளக்கினார்கள். பெண்கள் (தங்கள் பொருட்களைப்) போடலானார்கள். சில பெண்கள் தங்கள் கழுத்து மாலையையும் வளையல்களையும் போடலானார்கள்.

கராம்பின் மருத்துவக் குணங்கள்.


* கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
* நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
* சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
* கிராம்பு எண்ணெய் மூன்று துளியுடன் தேன் மற்றும் வெள்ளைப் பூண்டுச் சாறு சேர்த்து படுக்கைக்குப் போகும் முன்பு சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படும் சுவாசக் குழல் அழற்சி சரியாகும்.
* முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
* கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
* 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
* தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண்ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
* கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
* கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
* சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

இரவு நேர பணிகள் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.


இன்றைய உலகில் பெரும்பாலும் இரவு நேரப் பணிகள் தான் அமைகின்றன. மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பும் இளைய தலைமுறையினர். அதிகாலையிலோ, அல்லது மறுநாள் காலை 8 மணிக்கோ வீடு திரும்புகின்றனர். பின்னர் பகலில் தூக்கம். இரவில் விழிப்பு என மாறி மாறி வேலை செய்யவேண்டியிருக்கிறது.
சரியான தூக்கமின்மை, நேரத்திற்கு சாப்பிடாமல் இரவுப் பொழுதுகளில் பர்கர், பீட்ஸா என சாப்பிடுவதனால் உடலில் கொழுப்புச்சத்து அதிகமாகி நோய்களின் கூடாரமாகி விடுகிறது. இதனால் 20 வயதிலேயே மாரடைப்பு, நீரிழிவு, உடல்பருமன், ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.
இது தொடர்பாக சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் சரியாக தூங்காமல் இரவில் கண்விழித்து வேலை பார்ப்பவர்களில் 23 சதவிகிதம் பேர் மாரடைப்பினால் பாதிக்கப்படுகின்றனர்.
5 சதவிகிதம் பேருக்கு பக்கவாதம் வர வாய்ப்புள்ளது. 41 சதவிகிதம் பேருக்கு ரத்த அழுத்தம், நரம்பு தொடர்பான நோய்கள் வரக்கூடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள். 2 மில்லியன் நபர்களிடம் பல்வேறு கட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.
இப்போதைய இயந்திர வாழ்வில், சமச்சீரான உணவுகளை தவிர்த்து விட்டு, துரித உணவு, உடல் பயிற்சியின்மை காரணத்தால் சிறுவயதிலேயே இதய பாதிப்பு ஏற்படுகிறது. இவை 2 மட்டுமே முக்கிய காரணம் என்று சொல்ல முடியாது.
சரியான தூக்கமின்மை, ஓய்வு இல்லாமல் உழைப்பது, மனஉளைச்சல், நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணங்களாலும் மாரடைப்பு ஏற்படும் என்று எச்சரிக்கின்றனர் பிரபல இதயநோய் நிபுணர்கள்.
இப்போதுள்ள ஐ.டி மற்றும் பி.பீ.ஓ நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களின் பணி நேரம் இரவில் என்பதால் தூங்காமல் முழித்து இருக்க டீ, காபி, சிகரெட் மற்றும் துரித உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இது உடலில் கொழுப்பு சத்து அதிகரித்து உடலில் தேங்குகிறது. இதனால் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
எனவே, குழந்தை பருவத்தில் இருந்தே அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கொடுக்காமல் புரதம், விட்டமின் மற்றும் தாது உப்புக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிட கொடுக்க வேண்டும்.
உணவில் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் அரிசி சாதத்தை குறைத்து கோதுமை சார்ந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
குறிப்பாக நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான அளவு தூக்கம், மன அழுத்தம் இல்லாத நிம்மதியான செயல்பாடு போன்றவைகளே உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
குழந்தைகள் ஓடியாடி விளையாட்ட வேண்டும். . நாள்தோறும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு குறைந்து தசைகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராகும். அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், மாடி ஏற படிகளை பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

உங்கள் குழந்தைகளை பாதிக்கும் முக்கிய 6 நோய்கள்!


பொதுவாகவே குழந்தைகள் நோய்க் கிருமிகளுக்கு சுலபமாக் பாதிப்படைவர்கள் ஆதலால் அபாயகரமான நோய்களில் இருந்து அவர்களை பாதுகாக்க முறையான தடுப்பு ஊசிகளை போடுவது அவசியம், குழந்தைகளி பாதிக்கும் பல்வேறு நோய்களில் இளம்பிள்ளை வாதம், அம்மை, தொண்டை அடைப்பான், காச நோய், குத்து இருமல், டெட்டனஸ், ஆகியவை முக்கியமானவை.
1.அம்மை நோய்- வைட்டமின் சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்கும், நீண்ட நாள் வயிற்றுப் போக்கால் அவதியுறும் குழந்தைகளுக்கும் இந்த நோய் உண்டாகௌம்போது ஆபத்து ஏற்படுகிறது, இதனால் நிமோனியா, கண்பார்வையில் குறை பாடு உள்ளிட்ட பாதிப்புகள் எற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.
அம்மை நோயின் அறிகுறிகள்- மூன்று நாட்களுக்கு ஜலதோஷம், இருமல், காய்ச்சல் இதோடு கண்கள் சிவத்தல், கண்கள் கூசுதல், கண்களில் அதிகம் நீர் வருதல் ஆகியவை இருக்கும், சில குழந்தைகளுக்கு நெற்றி மற்றும் காதுகளின் பின்புறம் தடிப்புகள் ஏற்படும். பிறகு 3அல்லது 4 நாட்கள் கழித்து கண்களில் கோழை உண்டாகௌம், முகம் மற்றும் உடலில் தடிப்புகள் ஏற்படும், பிறகு ஒருவாரம் கழித்து தடிப்புகள் மறையும், தழும்புகள் இருந்த இடத்தில் தோல் உரியத் தொடங்கும்.
2.தொண்டை அடைத்தல்- இதுவும் மிக அபாயகரமானதாகும், இதனால் மூச்சு முட்டி உயிருக்கு கூட ஆபத்து ஏற்படலாம். இன்னோய்க் கிருமிகள் ஏற்படும் நச்சு காரணமாக இதயமும் நரம்பு மண்டலமும் பாதிப்படையலாம்.
இதன் அறிகுறிகளாக சிலவற்றை குறிப்பிடலாம். முதலில் குழந்தைகள் மிகுந்த சோர்வுடனும் வாட்டமுடனும் இருக்கும், சாப்பாடு விளையாட்டு ஆகியவை இருக்காது, கழுத்து வீக்கம் இருக்கும், மேலும் குழந்தைகள் பலவீனமடையும், கிருமிகள் சுவாசப் பகுதிக்குத் தாவும்போது சுவாசம் தடை படும் அபாயம் உண்டு, இதனால் உடனே மருத்துவரை அணுகவேண்டியது அவசியம்.
3.வறட்டு அல்லது குத்து இருமல்- தொடர் இருமலால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது, தொடர்ந்து இருமல் இருப்பதால் சில சமயங்களில் வாந்தி எடுக்கலாம், ஊட்டச் சத்து குறையும், முதலில் சளி பிடிக்கும், பிறகு இருமல் வலுக்கும் இதற்கு தற்போது மருந்துகள் ஏராளம் வந்து விட்டதால் இதன் ஆபத்தை மருத்துவ உலகம் ஏறத்தாழ களைந்து விட்டது என்றே கூறலாம்.
4.இளம்பிள்ளை வாதம் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளை இது பாதிக்கும், இதனால் குழந்தைகள் முடமாகும் வாய்ப்புகள் ஏற்படலாம்.
முதல் 3 நாட்களுக்கு காய்ச்சலும் பிறகு காய்ச்சல் குறைந்து தலை வலிக்க தொடங்கும், கழுத்தை திருப்புவதில் சிரமமும், தசைகளில் வலியும் இருக்கும், நோய் கவனிக்கப் படாமல் தீவிரமடைந்தால் 7 நாட்களில் கால் அல்லது தோள் செயலிழக்கலாம், இதற்கெல்லாம் தற்போது தடுப்பு ஊசி மருந்துகள் வந்து விட்டன, ஆகவே குறித்த காலத்தில் தடுப்பு ஊசிகளை போடுவதன் மூலம் இந்த நோயை அறவே தவிர்க்கலாம்.
5.டெட்டனஸ்- பிறந்த குழந்தைகளை இந்த நோய் தாக்கினால் உயிரழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது, தொப்புள் கொடியை சுத்தம் செய்யப்படாத கத்தியால் அறுப்பதன் மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. திறந்த புண்கள் மூலமாக இப்புண்கள் பெரியவர்களையும் பாதிப்பதால், கருவுற்ற பெண்கள் இதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகிறது.
பிறந்து 5 முதல் 7 நாட்கள் கழித்து குழந்தை வாயைத் திறக்காது, பால் குடிப்பதை நிறுத்தி விடும், வலிப்பு ஏற்படும் இதனால் இறப்பு ஏற்படலாம். வளர்ந்தவர்களுக்கு வாய், மற்றும் கை கால்கள் விறைத்து ஒரு கட்டத்தில் உடம்பே விறைத்து விடும் அபாயம் உள்ளது, இதற்கும் தகுந்த மருந்துகள் தற்போது கிடைக்கின்றன.
6.காச நோய்- இந்த நோய் தற்போது முன்பிருந்த அளவிற்கு உயிரிழப்பை ஏற்படுத்தும் நோயாக இல்லாவிட்டாலும், தற்போதும் சுகாதாரக் குறைவால் இன்னமும் சில பகுதி மக்களிடையே இது அச்சுறுத்தும் ஒரு நோயாக இருந்து வருவது உண்மைதான். இந்த நோய் குழந்தைகளை தாக்கும் போது குழந்தைகள் மிகவும் சோர்வாக இருக்கும், விளையாட்டில் நாட்டம் இருக்காது, உடல் எடை குறையும், காய்ச்சல் தலைவலி, நாற்றமுடன் கூடிய சளி வரும் இருமல் போன்றவைகள் இதன் அறிகுறிகள். இருப்பினும் முறையான சோதனைகளையும் தடுப்பு முறைகளையும் கையாண்டால் குழந்தைகளை காப்பாற்ற முடியும்.

Friday, August 10, 2012

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

"ஸம்ஆ" என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ கைப்பற்றிக் கொள்!" என்று உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, 'இவன் என் சகோதரரின் மகன்! என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்!' எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் மகன் அப்து(ரலி), 'இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்!' எனக் கூறினார். இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ஸஅத்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) 'இவன் என் சகோதரன்! என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்! எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,"ஸம்ஆவின் மகன் அப்தே! இவன் உமக்குரியவனே! எனக் கூறினார்கள். பின்னர் '(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் கிகளுமான ஸவ்தா(ரலி) அவர்களிடம் 'ஸவ்தாவே! நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள்!" என்றார்கள். ('அவர் ஸம்ஆவின் மகன்தான்! என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அவர் அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை மரணிக்கும்வரை சந்திக்கவில்லை. 

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அறிவித்தார்.

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னையும் ஸஅத் இப்னு ரபீஉ(ரலி) அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅத்(ரலி) 'நான் அன்ஸாரிகளில் அதிகச் செல்வமுடையவன்; எனவே, என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகிறேன். என்னுடைய இரண்டு மனைவியரில் நீர் யாரை விரும்புகிறீர் என்று பாரும்! அவரை உமக்காக விவாகரத்துச் செய்கிறேன். அவரின் இத்தா முடிந்ததும் அவரை உமக்கு மணம் முடித்துத் தருகிறேன்!" என்று கூறினார். அப்போது நான், 'இது எனக்குத் தேவையில்லை! வியாபாரம் நடைபெறுகிற கடைவீதி ஏதும் (இங்கு) இருக்கிறதா?' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா என்னும் கடை வீதி இருக்கிறது!' எனக் கேட்டேன். அவர், 'கைனுகா எனும் கடை வீதி இருக்கிறது!" என்றார். நான் அங்கே சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் (மஞ்சள்) கறையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். நபி(ஸல்) அவர்கள், 'நீ மண முடித்துவிட்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்!" என்றேன். 'யாரை?' என்றார்கள். 'ஓர் அன்ஸாரிப் பெண்ணை!" என்றேன். 'யாரை?' என்றார்கள். 'எவ்வளவு மஹ்ர் கொடுத்தாய்?' என்று கேட்டார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்!" என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பாயாக!" என்றார்கள். 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!" 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!" 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

அபூ ஹுரைராவின் ஹதீஸ் அளவிற்கு முஹாஜிர்களும் அன்ஸாரிகளும் ஏன் அறிவிப்பதில்லை? அபூ ஹுரைரா மட்டும் அதிகமாக நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிவிக்கிறாரே!" என்று நீங்கள் கூறுகிறீர்கள். முஹாஜிர்களைச் சேர்ந்த என்னுடைய சகோதரர்கள் கடைவீதிகளில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். நான் 'என் வயிறு நிரம்பினால் போதும்' என்று நபி(ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். அவர்கள் (நபி(ஸல்) அவர்களிடம்) செல்லாதபோதும் நான் செல்வேன். (நபிமொழிகளை) அவர்கள் மறந்து விடும்போது நான் மனனம் செய்து கொள்வேன்! என்னுடைய அன்ஸாரிச் சகோதரர்கள் தங்கள் செல்வங்களின் (பராமரிப்புப்) பணியில் ஈடுபட்டிருந்தனர்; நான் பள்ளிவாசலின் திண்ணையில் இருந்த ஏழைகளில் ஓர் ஏழையாக இருந்தேன். அவர்கள் மறந்துவிடும் வேளையில் நபி(ஸல்) அவர்களின் போதனைகளை) நான் மனனம் செய்து கொள்வேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள், 'நான், என்னுடைய இந்த வாக்கைச் சொல்லி முடிக்கும்வரை தன்னுடைய ஆடையை விரித்து வைத்திருந்து. பிறகு அதைத் தன்பக்கம் (நெஞ்சோடு) சேர்த்து (அணைத்து)க் கொள்கிறவர் நான் சொல்பவற்றை மனனம் செய்யாதிருக்கமாட்டார்!' எனக் கூறினார்கள். நான் என் மீது கிடந்த ஒரு போர்வையை விரித்து, நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாக்கை முடித்ததும் அதை என் நெஞ்சோடு சேர்த்து (அணைத்துக்) கொண்டேன்; (அதன்பின்னர் நபி(ஸல்) அவர்களின் அந்த வாக்கில் எதனையும் நான் மறக்கவில்லை!" 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமலானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். ஸுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள். அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி தந்தார்கள். அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா(ரலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் கேள்விப்பட்ட ஸைனப்(ரலி) மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபொழுது நான்கு கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!" என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி(ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாப் இருந்தார்கள். 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

ரமலானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பது பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் நான் அனுமதி கேட்டேன். எனக்கு அனுமதி வழங்கினார்கள்.ஹப்ஸா(ரலி)தமக்காகவும் அனுமதி கேட்குமாறு கேட்டார். அவ்வாறு செய்தேன். இதைக்கண்ட ஸைனப்(ரலி) ஒரு கூடாரம் கட்ட உத்தரவிட்டார். அவ்வாறு கட்டப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். அப்போது பல கூடாரங்களைக் கண்டு 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அதற்கு நபித்தோழர்கள், 'ஆயிஷா(ரலி), ஹப்ஸா(ரலி), ஸைனப்(ரலி) ஆகியோரின் கூடாரங்கள்' என்றனர். நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நன்மையைத்தான் இவர்கள் நாடுகிறார்களா? நான் இஃதிகாஃப் இருக்கப் போவதில்லை" என்று கூறிவிட்டுத் திரும்பிவிட்டார்கள். நோன்பு முடிந்ததும் ஷவ்வால் மாதத்தில் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். 

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன. 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

    "நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!" 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!" 

உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.

லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!" எனக் கூறினார்கள்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!" 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
"இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்

"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! 'லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!" 
என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(லைலத்துல் கத்ரை) தேடுங்கள்!" 
என ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், 'நான் இந்தப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!' எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை. நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

                                                                                               "ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" 
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!" என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன். 

இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!" என்று கூறினார்கள். 

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!"