Translate

Saturday, July 14, 2012

அருமையான இறால் கபாப்

Prawn Kebab Recipe அசைவ உணவுகளில் மட்டன், சிக்கனை விட கடல் உணவிற்கு சத்துக்கள் அதிகம். அதிலும் இறால் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும். இந்த இறாலை குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி கபாப் செய்து கொடுத்து அவர்களை அசத்தலாமா!!!
தேவையான பொருட்கள் :
இறால் - 10
இஞ்சிபூண்டு விழுது - 3 டீஸ்பூன்
தயிர் - 2 கப்
கிரீம் - 2 கப்
கிராம்பு - 2
எலுமிச்சைபழச்சாறு - 3 டீஸ்பூன்
கடலை மாவு - 3 டீஸ்பூன்
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து, நன்கு நீரை வடித்துக் கொள்ளவும்.
ஒரு பௌலில் தயிர் மற்றும் கிரீம் சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் கிராம்பை பொடி செய்து வைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அந்த பேஸ்டுடன் கிராம்பு பொடி, கடலை மாவு, இஞ்சிபூண்டு விழுது மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது அந்த கழுவிய இறால் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதனை மூடி வைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். அந்த இறாலானது 2 மணிநேரம் ஊற வேண்டும்.
ஊறியதும் அதனை ஃபிரிட்ஜில் இருந்து எடுத்து விட வேண்டும். பின் 30 நிமிடம் வெளியே வைக்க வேண்டும்.
பிறகு தந்தூர் ஓவனை (tandoor oven) சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் அந்த இறாலைப் வேக வைக்கவும். இறாலானது பொன்னிறமாக ஆனதும் அதன் மேல் வெண்ணெயை தடவி 10 நிமிடம் வேக வைக்கவும். பின் அதனை எடுத்து அதன் மேல் எலுமிச்சைபழச்சாறு விட்டு பரிமாறவும்.
இப்போது சுவையான இறால் கபாப் ரெடி!!! இதனை மிளகாய் சாஸ் உடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment