Translate

Monday, July 16, 2012

இருமல் குறைய

மிளகு, நன்னாரி வேர், சுக்கு மற்றும் ஓமம் ஆகியவற்றை முறைப்படி தனித்தனியாக உலர்த்தி இடித்து பிறகு ஒன்றாக கலந்து இடித்து சலித்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.


மிளகு

நன்னாரி வேர்

சுக்கு


அறிகுறிகள்:

இருமல்.
தேவையான பொருள்கள்:

மிளகு = 80 கிராம்
நன்னாரி வேர் = 20 கிராம்
சுக்கு = 40 கிராம்
ஓமம் = 20 கிராம்
நெய்.
பசும்பால்
செய்முறை:

மிளகை ஒரு மண் பாத்திரத்தில் போட்டு 25 மி.லி நெய் ஊற்றி வறுத்து எடுத்து கொள்ளவும்.
நன்னாரி வேரை ஒன்றிரண்டாக தட்டி மண் பாத்திரத்தில் போட்டு 250 மி.லி பசும்பாலை ஊற்றி 2 முறை பொங்கி வந்ததும் பாலை இறக்கி நன்னாரி வேரை மட்டும் எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து கொள்ளவும்.
சுக்கை குறிப்பிட்டுள்ள அளவுக்கு இரட்டிப்பாக எடுத்து கொண்டு தோலை நீக்கி கொள்ளவும்.
ஓமத்தை மண் சட்டியில் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக இடித்து சலித்து கண்ணாடி பாத்திரத்தில் போட்டு மூடி 3 மணி நேரம் வெயிலில் வைத்து எடுத்து சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
உபயோகிக்கும் முறை:

காலை உணவுக்கு 1 மணி நேரம் முன்னும் மாலை 6 மணி அளவிலும் 1 தேக்கரண்டி முறையே சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வர வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இருமல் குறையும்.
தவிர்க்க கூடியவை:

குளிர்ந்த பானங்கள், தயிர், இளநீர், கிழங்கு வகைகள், இறைச்சி ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.

No comments:

Post a Comment