Translate

Tuesday, March 19, 2013

கேள்வி பதில்5

தாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது?


bதாயின் காலடியில் சுவர்க்கம் இருப்பதாக இஸ்லாம் கூறுகிறது. அந்தத் தாயின் காலில் விழுவதை ஏன் இஸ்லாம் பாவம் என்று கூறுகிறது

இது இலக்கியச் சொல். தாய் நிற்கின்ற இடத்தை தோண்டிப் பார்த்தால் அங்கே சுவர்க்கம் இருக்குமா? தாயின் காலடியில் சுவர்க்கம் என்பது தாய்க்குக் கட்டுப்பட்டு, மரியாதை கொடுத்து கண்ணியப்படுத்த வேண்டும் என்பதாகும்.

மனிதர்கள் எல்லாம் சமம் என்பதால் யாரும் யாருடைய காலிலும் விழுவதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். பகுத்தறிவுள்ள நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். இந்த அறிவை யாருடைய காலிலும் வைத்துவிடக் கூடாது இந்த கிரீடத்தை; (அறிவை) கீழே இறக்கவும் கூடாது.
தன்னுடைய தாய் தந்தையின் காலில் விழுந்து மரியாதைச் செய்யும் பலர் அந்தத் தாய் தந்தையர்களுக்கு உணவளிக்க மறுப்பதையும், கொடுமைப் படுத்துவதையும், மரியாதைக்குறைவாக நடத்துவதையும் பார்க்கின்றோம். ஆகவே இதை வைத்துக் கொண்டு காலில் விழுவதை நியாயப்படுத்தக் கூடாது.

No comments:

Post a Comment