Translate

Wednesday, March 20, 2013

விதியை நம்புதல்


கேள்வி: உங்கள் மார்க்கப்பற்று படி அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால் நல்ல மனிதர் செய்யும் செயலும், இறைவனால் செய்யப்படுவதே தீய மனிதன் செய்யும் செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. மறுமையில் அம்மனிதர்களுக்கு சுவர்க்கமும் நரகமும் கொடுக்கப்படுகிறது என்றால் நரகம் செல்லும் மனிதனின் செயல் இறைவனின் உத்தரவுப்படியே அம்மனிதனால் செய்யப்படுகிறது. அவனால் செய்யப்படவில்லை. அப்படி இருக்கும்போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்? விளக்கம் தரவும்.



விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம் அப்போது வேறு விதமான கேள்விகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனும் அவனவன் முடிவின்படி தான் செயல்படுகிறான் இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் கடவுள் என்பவன் பலவீனனாக கையாளலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும். நடந்தது நடந்து கொண்டிருப்பது இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன் என்பது கடவுளின் பண்பாகும். அந்தப்பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது. நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்டால் தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை. எனக்கு எப்படி நாளை நடப்பது தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது. நாளை நான் சென்னை செல்வது இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீரவேண்டும் என்ற முடிவு அதனுள் அடங்குகிறது. நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது. அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது. இரண்டு நம்பிக்கைளிலுமே சில சங்கடங்கள் உள்ளன. இதனால்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே என்று கூறியுள்ளார்கள் இஸ்லாத்தின் எந்தக் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப் பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது. அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.
அறிவுப் பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட அந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம். விதியையும் நம்பவேண்டும் மனிதர்கள் நல்லறங்களில் ஈடுபடவேண்டும் அவரவர் செயலுக்கு அவரவர் பொறுப்பு என்பதையும் நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனிதகுலத்துக்குக்; கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும். ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம். விதியை நம்புகின்றவன் நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா? எனக் கூறி மறுநாளே சகஜநிலைக்கு வந்து விடுவான்.
அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம் இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மனநோயாளியாவான் அந்த அளவுக்குப் போகாவிட்டாலும் சகஜ நிலைக்கு வருவது அதிகம் தாமதமாகும். மனிதன் துன்பங்களைச் சந்திக்கும்போது ஆடிப்போய் விடாமல் தடுக்கும் கேடயமே விதி என்னும் நம்பிக்கை. விதியை நம்பி முடங்கிக்கிட என்று மற்ற சில சமயங்கள் கூறுவது போல் இஸ்லாம் கூறவில்லை மனிதனின் நடவடிக்கைக்கு எந்தத் தடங்கலும் ஏற்படுத்தாத வகையில் தான் இஸ்லாம் விதியை நம்பச் சொல்கிறது. அந்த நிமிடம் வரை என்ன நடந்து விட்டதோ அது தான் நமது விதி என்பது நமக்குத் தெரியும் அடுத்தநிமிடம் நடப்பது நமக்குத் தெரியாததால் எதிர்கால விதி நமக்குத் தெரியாது.
எது நடந்து முடிந்து விட்டதோ விதி இன்னதென்று தெரிந்து விட்டதோ விதியை நம்பி ஆறுதல் படு! எது நடக்கவில்லையோ அதில் நீயாக திட்டமிட்டுச் செயல்படு என்று இஸ்லாம் கூறுகிறது. இதனால் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கு எந்தத் தடையும் ஏற்படாது. தொழுவது, நோன்பு நோற்பது போன்ற வணக்கங்களை விதியின் அடிப்படையில் நாம் செய்கிறோம் என்று காரணம் கூறி தங்கள் செயலை நியாயப்படுத்துவோர் உளப்பூர்வமாக அவ்வாறு நியாயப்படுத்த முடியாது. ஒருவருக்கு எவ்வளவு செல்வம் கிடைக்கவேண்டும் என்ற விதி இருக்கிறதோ அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி ஒருவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கமாட்டார். மாறாக செல்வத்தைத் தேடி அலைவார் இந்த அக்கறையை வணக்க வழிபாட்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.
எனவே விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களுக்கு அறிந்து கொள்ளமுடியாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி விதியை நம்புவது தான் நல்லது.

வலிமார்கள் நமக்கு வக்கீல்களா?


அவ்லியாக்கள் பெயரால் நடைபெறும் அநாச்சாரங்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர்ந்து ஒதுக்கித் தள்ளிய உத்தமர்களிலும் கூடச் சிலர், தர்காக்களுக்குச் செல்வதையும், வலிமார்கள் மூலம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதையும், நியாயம் என்று நினைக்கின்றனர்.
தமது தேவைகளை அவ்லியாக்கள் மூலம் கேட்பதற்குச் சில உதாரணங்களை ஆதாரங்களாக அள்ளி வீசுவார்கள்.முதலமைச்சரை நாம் நேரடியாகச் சந்திக்க முடியுமா? நமது தொகுதி சட்டமன்ற உறுப்பினரை முதலில் சந்திக்க வேண்டும். அவர் நம்மை அழைத்துச் சென்று முதலமைச்சரிடம் அறிமுகப் படுத்தி வைப்பார். அதன் பிறகுதான் முதலமைச்சரிடம் நமது தேவையைக் கேட்க முடியும். இதே உதாரணம், முதலமைச்சருக்குப் பதிலாக மன்னர், பிரதமர், கலெக்டர், என்று இடத்துக்குத் தக்கபடி மாறுவது உண்டு.
நீதி மன்றத்தில் நீதிபதியிடம் நாமே சென்று வாதாட முடியுமா? நமக்காக வாதாட திறமையுள்ள ஒரு வக்கீல் தேவையல்லவா? இது போல் தான் வலிமார்கள் நமக்கு வக்கீல்களைப் போன்றவர்கள்.இப்படி இன்னும் இதுபோன்ற ஏராளமான உதாரணங்களைச் சொல்வார்கள். மேலோட்டமாகப் பார்க்கும் போது இவை அனைத்தும் நியாயமாகத் தான் தோன்றும்.
முதலமைச்சரையோ, பிரதமரையோ, நாம் நேரடியாகச் சந்திக்க முடியாது என்பதும், இடையில் சபாரிசுக்கு ஒருவர் அவசியம் என்பதும் உண்மை தான். ஏனென்றால் முதலமைச்சருக்கோ பிரதமருக்கோ நாம் யார் என்பது தெரியாது. எனவே நமக்கு அறிமுகமான ஒருவர் நம்மை அறிமுகப் படுத்தி வைப்பது முக்கியம். ஆனால் அல்லாஹ், அப்படிப்பட்ட பலகீனம் உடையவன் அல்லவே! நாம் யார் என்பதும், நமது செயல்கள் எப்படிப் பட்டவை என்பதும் நம்மைப் படைத்து பாதுகாத்து வரும் அல்லாஹ்வுக்குத் தெரியாதா? (நவூது பில்லாஹ்)நாம் செய்கின்ற செயல்களை மட்டுமல்ல, நமது உள்ளத்தில் உதிக்கும் எண்ணங்களைக் கூட அவன் அறிபவன் ஆயிற்றே!
மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம்.அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாகவே இருக்கின்றோம். (அல் குர்ஆன் 50: 16) என்று திருமறை குர்ஆன் பறை சாற்றுகிறது.
நீதி மன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகின்ற போது ‘நடந்தது என்ன’ என்பது பற்றி நீதிபதிக்கு எதுவும் தெரியாது. வக்கீல்களின் வாதத்தின் அடிப்படையில்தான் நீதிபதி தீர்ப்பு வழங்குவார்.செய்த குற்றத்தை மறைத்து – குற்றவாளிகளை தப்பிக்க வைக்கவும் வக்கீல்களால் முடியும். செய்யாத குற்றத்தைச் செய்ததாகப் போலி ஆதாரங்களுடன் நிரூபிக்கவும் வக்கீல்களால் முடியும். அப்படியானால் நாம் செய்து விட்ட தவறான செயல்களுக்காகவும் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் இறைவனிடம் வாதாடுவார்களா? வக்கீல்கள் என்று இவர்கள் கருதும் அவ்லியாக்களின் வாதத்தைக் கேட்டுத்தான் அல்லாஹ் தீர்ப்பு வழங்குவானா? அல்லாஹ்வுக்கு எதுவும் தெரியாதா? (நவூது பில்லாஹ்) உதாரணங்களைச் சொல்லும் கேடு கெட்டவர்களின் உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் இருக்கின்றதா? அல்லாஹ்வின் தனித்தன்மைக்கே இந்த உதாரணங்கள் களங்கத்தை எற்படுத்து கின்றனவே இதையெல்லாம் கொஞ்சமும் சிந்திக்க மாட்டார்களா?
அவனுக்கு நிகராக யாருமே இல்லை (அல் குர்ஆன் 112; :5) என்று குர்ஆன் கூறுகின்றது.
ஒவ்வாருவரும் தமக்கு விருப்பமான அவ்லியாக்கள் தமக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதோ குர்ஆன் கூறகிறது.
சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.(74 :48) எவர்கள் பரிந்து பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தார்களோ அவர்களையே அங்கு காண முடியாது…..எவர்களை நீங்கள் உங்களுடைய கூட்டாளிகள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ உங்களுக்குப் பரிந்துப் பேசுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் உங்களுடன் இருப்பதை நாம் காணவில்லை. உங்களுக்கிடையே இருந்த தொடர்பும் அறுந்து விட்டது.உங்களுடைய நம்பிக்கைகள் எல்லாம் தவறிவிட்டன.(என்று கூறுவான்.) அல் குர்ஆன் (6:94)


அறப்போரும்

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். 
நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?' என்று கேட்டேன். அவர்கள், 'தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது" என்று கூறினார்கள். 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன் அவர்கள், 'பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது" என்று பதிலளித்தார்கள். நான், 'பிறகு எது (சிறந்தது?)" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'இறைவழியில் அறப்போரிடுவதாகும்" என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாகி விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள். 
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள், '(மக்காவின்) வெற்றிக்குப் பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத்(இறைவழியில் தாயகம் துறந்து செல்வது) என்பது கிடையாது. ஆனால், அறப்போரிடுவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும் உண்டு. போருக்குப் புறப்படும்படி நீங்கள் அழைக்கப்பட்டால் உடனே போருக்குச் செல்லுங்கள்" என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அறிவித்தார். 
நான் (நபி(ஸல்) அவர்களிடம்), 'இறைத்தூதர் அவர்களே! அறப்போர் புரிவதை சிறந்த நற்செயலாக நாங்கள் கருதுகிறோம். எனவே, (பெண்களாகிய) நாங்களும் அறப்போர் புரியலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், '(பெண்களான) உங்களுக்குச் சிறந்த அறப்போர், பாவச் செயல் கலவாத ஹஜ் தான்" என்று பதிலளித்தார்கள். 
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'ஜிஹாத் என்னும் (இறைவழியில் புரியும்) அறப்போருக்குச் சமமான ஒரு நற்செயலை எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அப்படி எதையும் நான் காணவில்லை" என்று கூறிவிட்டு, 'அறப்போர் வீரன் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றுவிட்டால் (அவனுக்கு) இணையான நற்செயல் புரிந்திட வேண்டி) நீ உன் வணக்கத் தலத்திற்குச் சென்று இடைவிடாமல் தொழுது கொண்டும் தொடர்ந்து நோன்பு நோற்றுக் கொண்டும் இருக்க உன்னால் முடியுமா?' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், 'அது யாரால் முடியும்?' என்று பதிலளித்தார். 
"அறப்போர் வீரனின் குதிரை, அதைக்கட்டி வைத்துள்ள மேய்ச்சல் கயிற்றுக்கிடையே (கால்களை உதைத்துக் கொண்டு) சில குதிகள் குதித்துச் சென்றால் அதுவும் அவனுக்கு நற்பலனாக எழுதப்படும்" என்று அபூ ஹுரைரா(ரலி) கூறினார். 
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். 
"இறைத்தூதர் அவர்களே! மக்களில் சிறந்தவர் யார்?' என்று கேட்கப்பட்டது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'இறைவழியில் தன் உயிராலும் தன் பொருளாலும் போராடுபவரே (மக்களில் சிறந்தவர்)" என்று பதிலளித்தார்கள். மக்கள், 'பிறகு யார்?' என்று கேட்டார்கள். 'மலைக் கணவாய்களில் ஒன்றில் வசித்துக் கொண்டு, அல்லாஹ்வை அஞ்சிய வண்ணம் தன்னால் மக்களுக்குத் தீங்கு நேராமல் தவிர்த்து வருபவரே சிறந்தவர்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இறைவழியில் போராடுபவரின் நிலையானது, உண்மையாகப் போராடுபவர் யார் என்பது (அவரின் எண்ணத்தைப் பொருத்து) அல்லாஹ்வுக்கே தெரியும் - (அல்லாஹ்வைத்) தொழுதும், (அவனுக்காக) நோன்பு நோற்றும் வருபவரின் நிலையைப் போன்றதாகும். அல்லாஹ், தன் பாதையில் போராடுபவரின் உயிர்த் தியாகத்தை ஏற்று, அவரை சொர்க்கத்தில் நுழைய வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான் அல்லது நன்மையுடனோ, போர்ச் செல்வத்துடனோ அவரைத் திரும்ப வைக்க உத்தரவாதம் அளித்துள்ளான். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
"அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி, ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிட்டது; அவர் இறைவழியில் அறப்போர் புரிந்தாலும் சரி; அல்லது அவர் பறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி" என்று கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நாங்கள் மக்களுக்க இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், 'சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ்? தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும் பூமிக்கும் இடையிலுள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால், ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள்; ஏனெனில், அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்" என்று கூறினார்கள். (அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்(ரஹ்) கூறினார்: 
மேலும், 'அதற்கு மேலே கருணையாள(னான இறைவ)னின் அர்ஷு - சிம்மாசனம் இருக்கிறது. இன்னும், அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன். 
மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலைஹ்(ரஹ்), தம் தந்தையிடமிருந்து, 'அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது" என்று (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என சந்தேகத்தொனியின்றி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இன்றிரவு இரண்டு பேரைக் (கனவில்) கண்டேன்; அவர்கள் இருவரும் என்னிடம் வந்து, என்னை ஒரு மரத்தின் மீதேற்றி அழகான, சிறந்த ஒரு வீட்டினுள் புகச் செய்தார்கள். அதை விட அழகான ஒரு வீட்டை நான் பார்த்ததேயில்லை; (அவர்களில் ஒருவர்), 'இந்த வீடு இறைவழியில் உயிர்த் தியாகம் புரிந்தவர்களின் வீடாகும்" என்றார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இறைவழியில் காலை நேரத்தில் சிறிது நேரம் அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்ததாகும். 
இதை அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
சொர்க்கத்தில் ஒரு வில்லுக்குச் சமமான (ஒரு முழம்) அளவு (இடம் கிடைப்பது) சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். மேலும், இறைவழியில் ஒரு காலை நேரத்தில் சிறிது நேரம் போர் புரியச் செல்வது அல்லது ஒரு மாலை நேரத்தில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது சூரியன் எதன் மீது உதித்து மறைகிறதோ அந்த உலகத்தை விடச் சிறந்ததாகும். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த (நல்ல) அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்; இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை (மறுமையில்) அவர் காண்கிறார். எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை (இறைவழியில் போரிட்டுக்) கொல்லப்படுவதை அவர் விரும்புவார். 
இதை அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். 
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னைவிட்டுப் பின்தங்கி விடுவதால் இறை நம்பிக்கையாளர் சிலரின் உள்ளங்களில் வருத்தம் உண்டாகாது என்றிருக்குமாயின் மேலும், அவர்களை ஏற்றிச் செல்ல வாகனங்களும் என்னிடம் இருந்திருக்குமாயின் இறைவழியில் போரிடச் செல்லும் எந்தச் சிறுபடையையும்விட்டு நான் பின்தங்கியிருந்திருக்க மாட்டேன். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நான் இறைவழியில் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு, பிறகு உயிராக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்படவேண்டும் என்றே விரும்புகிறேன். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார். 
நபி(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது (மூத்தா போர்க் களத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளை இங்கிருந்து கொண்டே நேரில் காண்பது போல் கூறலானார்கள்:) 'ஸைத் இப்னு ஹாரிஸா கொடியைக் கையிலெடுத்து (இஸ்லாமியச் சேனைக்குத் தலைமை தாங்கி)க கொண்டுள்ளார். இப்போது அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, ஜஅஃபர் அதை(த் தம் கையில்) எடுத்து (தலைமை தாங்கியபடி போரிட்டு)க் கொண்டுள்ளார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, அதை அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (தம் கையில்) எடுத்து (தலைமை தாங்கியபடி போரிட்டுக் கொண்டு)ள்ளார்; இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, காலித் இப்னு வலீத் (தளபதியாக) நியமிக்கப்படாமலேயே அதைக் கையிலெடுத்துள்ளார். அவருக்கு வெற்றியளிக்கப்பட்டுவிட்டது. (வீர மரணத்தினால் அவர்கள் பெற்ற பெரும் பேற்றினை நாம் அறிந்த பிறகும்) அவர்கள் நம்முடன் இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்காது..." 
...அறிவிப்பாளர் அய்யூப்(ரஹ்), 'அல்லது, 'அவர்கள் நம்முடன் இருப்பது அவர்களுக்கே மகிழ்ச்சியளிக்காது' என்றும் அறிவிக்கப்பட்டிருக்கலாம்" என்று கூறுகிறார். 
இதைக் கூறியபோது நபி(ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. 
உம்மு ஹராம் பின்த்து மில்ஹான்(ரலி) அறிவித்தார். 
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் எனக்கு அருகில் உறங்கினார்கள். பிறகு புன்னகைத்துக் கொண்டே கண்விழித்தார்கள். நான், 'ஏன் சிரிக்கிறீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'என் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் இந்தப் பசுங்கடலில் கட்டில்களில் (சாய்ந்து) அமர்ந்திருக்கும் அரசர்களைப் போல் (கப்பல்களில் ஏறிப்) பயணம் செய்து கொண்டிருப்பதாக எனக்கு (கனவில்) எடுத்துக் காட்டப்பட்டது" என்று கூறினார்கள். நான், 'அவர்களில் ஒருத்தியாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று சொன்னேன். (அவ்வாறே) அவர்கள் எனக்காகப் பிரார்த்தித்தார்கள். பிறகு, இரண்டாம் முறையாக உறங்கினார்கள். முன்பு செய்தது போன்றே செய்தார்கள். முன்பு கேட்டது போன்றே நானும் கேட்டேன். முன்பு பதில் சொன்னது போன்றே அவர்களும் பதில் சொன்னார்கள். நான், 'அவர்களில் ஒருத்தியாக என்னை ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்" என்று கூறினேன். அவர்கள், 'முதன் முதலாகச் செல்பவர்களில் நீங்களும் ஒருவர் தாம்" என்று கூறினார்கள். 
(உம்மு ஹராம்(ரலி) அவர்களின் சகோதரி மகன் அனஸ் இப்னு மாலிக்(ரலி) தெரிவிக்கிறார்கள்:) 
அவ்வாறே, தளபதி முஆவியா(ரலி) அவர்களுடன் முஸ்லிம்கள் (சைப்ரஸ் தீவில் அறப்போர் புரிய) கடலில் பயணம் செய்த முதல் படையினரில் ஓர் அறப்போர் வீரராக, தம் கணவர் உபாதா இப்னு ஸாமித்(ரலி) அவர்களுடன் உம்மு ஹராம்(ரலி) புறப்பட்டுப் போனார்கள். தம் படையெடுப்பிலிருந்து அவர்கள் திரும்பி வந்தபோது ஷாம் நாட்டு திசைநோக்கிச் சென்றார்கள். உம்மு ஹராம்(ரலி) ஏறிக் கொள்வதற்காக அவர்களுக்கருகே வாகனம் ஒன்று கொண்டு வரப்பட்டது. (அவர்கள் அதில் ஏறிக் கொள்ள) அது அவர்களைக் கீழே தள்ளிவிட்டது; அதனால் அவர்கள் இறந்துவிட்டார்கள்.
அனஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர் (கொண்ட வேத அறிஞர்களான அன்சாரி)களை பனூ ஆமிர் குலத்தாரிடம் (இஸ்லாத்தை எடுத்துரைப்பதற்காக) அனுப்பினார்கள். அவர்கள் (அங்கு) சென்றபோது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), 'உங்களுக்கு முன்னால் நான் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைத்திட (அவர்கள் என்னை அனுமதித்து) எனக்குப் பாதுகாப்பளித்தால் நான் எடுத்துரைக்கிறேன்; இல்லையென்றால் நீங்கள் என் (பின்னால் என்) அருகிலேயே இருங்கள்" என்று கூறிவிட்டு சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள்; அவரை எதுவும் செய்யவில்லை. நபி(ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தபோது தங்களில் ஒருவரைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய் மாமனை (ஈட்டியால்) குத்தி அவரைக் கொன்றுவிட்டான். (உயிர் பிரியும் வேளையில்) அவர், 'அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்றுவிட்டேன்" என்று கூறினார். பிறகு, அவரின் எஞ்சிய தோழர்களின் மீதும் பாய்ந்து அவர்களையும் கொன்றுவிட்டார்கள்; மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர. 
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம்(ரஹ்), 'கால் ஊனமுற்ற அந்த மனிதருடன் மற்றொருவரும் (தப்பித்துக் கொண்டார்)' என்று (அறிவிக்கப்பட்டதாக) கருதுகிறேன்" என்று கூறுகிறார்.
ஜிப்ரீல்(அலை) அவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு, 'நீங்கள் அனுப்பிய போதகர்கள் தங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டனர். அவர்களைக் குறித்து அவன் திருப்தியடைந்தான். அவர்களும் (தான் பெற்ற நற்பலனைக் குறித்து திருப்தி) கொள்ளும்படிச் செய்தான்' என்று அறிவித்தார்கள். நாங்கள் (அப்போது அருளப்பட்ட), ' 'நாங்கள் எங்கள் இறைவனைச் சென்றடைந்து விட்டோம். எங்களைக் குறித்து அவன் திருப்தியடைந்துவிட்டான். அவனைக் குறித்து நாங்கள் திருப்தியடைந்தோம். தன்(வெகு மதியி)னைக் குறித்து எங்களைத் திருப்தியடையும்படி அவன் செய்தான்' என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்" என்னும் இறை வசனத்தை ஓதிக் கொண்டிருந்தோம். அது பின்னாளில் (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த (பனூ சுலைம் குலத்தாரைச் சேர்ந்த) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான், பனூ உஸைய்யா ஆகிய கிளையினருக்குக் கேடு நேர, நாற்பது நாள்கள் காலை (தொழுகை) நேரங்களில் பிரார்த்தனை செய்தார்கள். 
4:95.ஈமான் கொண்டவர்களில் (நோய், பலஹீனம், முதுமை, பார்வையிழத்தல் போன்ற) எந்தக் காரணமுமின்றி (வீட்டில்) உட்கார்ந்திருப்பவர்களும், தங்களுடைய சொத்துக்களையும், தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக)அல்லாஹ்வின் பாதையில் போர் புரிபவர்களும் சமமாகமாட்டர்கள் தங்களுடைய பொருட்களையும் தங்களுடைய உயிர்களையும் (அர்ப்பணித்தவர்களாக) அறப்போர் செய்வோரை, உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் அல்லாஹ் மேன்மையாக்கி வைத்துள்ளான்;. எனினும், ஒவ்வொருவருக்கும் (அவர்களுடைய உறுதிப்பாட்டுக்குத் தக்கபடி) நன்மையை அல்லாஹ் வாக்களித்துள்ளான்;. ஆனால் அறப்போர் செய்வோருக்கோ, (போருக்குச் செல்லாது) உட்கார்ந்திருப்போரைவிட அல்லாஹ் மகத்தான நற்கூலியால் மேன்மையாக்கியுள்ளான்.
9:20.எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.

கப்ஸா.. [அரபி சாப்பாடு]




தேவையானவைகள்

பாஸ்மதி அரிசி 4 கப்
ஃபிரஸ் கோழி 2
குங்குமப்பூ தேவையான அளவு
பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை. கிராம்பு.
முந்திரி திராட்சை
காயவைத்த எழும்பிச்சை[இங்கு ரெடிமேடாக கிடைக்கும்]
உப்பு
நெய் கொஞ்சம்
முதலில் ஒருகோழியை நான்கு பீஸாக்கி நன்றாக சுத்தம் செய்து,அதை ஒரு பத்திரத்தில் [சிறிது வேண்டுமெனில்ஆயில்விட்டு]. பட்டை. ஏலம். லவங்கம். பிரிஞ்சியிலை.காய்ந்த எழும்பிச்சை போட்டு  அதில் தேவையான தண்ணீர் விட்டு அதில் கோழியும் உப்பும்போட்டு வேகவைக்கவும்.
வேகும்போது அசடுபோல் மேல்வரும் அதை ஒரு கரண்டியால் எடுத்துவிடவும். [அது வேஸ்ட் கொழுப்பு]
கோழி வெந்தததும் அதைஎடுத்து குங்குமப்பூ போட்டு இதேபோல் வைத்துக்கொள்ளவும்
ஒரு அகன்ற பாத்திரத்தில் சிறுநெய்விட்டு சூடானதும் அதில் கோழிவேகவைத்த தண்ணீர் இருக்குமல்லவா அதை அரிசி கணக்கின்படி அளந்து ஊற்றவும்
அந்த தண்ணீரில் கழுவிய அரிசியை போடவும். அதில் சிறு குங்குமப்பூவோ அல்லது கலரோ சேர்க்கலாம்.
                                        
அடுப்பை சிம்மில் வைத்து மூடிவைக்கவும்.
சிறுதுநேரம் கழித்து திறந்து சோறு உடைந்துவிடாதவாறு கிளறிவிட்டு.
அதன்மேல் கோழிகளை அலங்கரிக்கவும்.
அதன்மேல் முந்திரி திராட்சை வறுத்துக்கொட்டவும்.

இப்போது கமகமக்கும் கப்ஸா ரெடி. இது எவ்வித மசாலாக்களும் இல்லாத மிகுந்த சுவைதரக்கூடிய ஒரு அரபிசாப்பாட்டு. சாப்பிட சாப்பிட வாசமும் மணமும் இன்னும் கேட்டுக்கொண்டேயிருக்கும்.[இந்த சாப்பாட்டின் ருசியே கோழிவேகவைத்த தண்ணீரில் செய்வதுதான்]

இதற்கு சைடிஸ். தக்காளி. பச்சைமிளகாய். பொதினா. உப்புசேர்த்து கொரகொரப்பாக அரைத்து சட்னி செய்துக்கொள்ளவும்
கூடவே எழும்பிச்சை வெள்ளரி கேரட். முள்ளங்கி இலை.
வெள்ளை வெங்காயம்   இவைகளை பச்சை சாலட் செய்து
கடித்துக்கொள்ளவும் [அச்சோ நாக்கையல்ல பச்சை சாலடை]

இதை நாங்க சவுதி சென்றிருந்தபோது [உம்ரா செய்ய] அங்கே சாப்பிட்டோம். ஏனோ தெரியவில்லை ப்ரியமென்றால் ப்ரியம் அப்படியொரு ப்ரியம் இச்சாப்பாட்டின்மேல். அதேபோல் மச்சானும் அடிக்கடி செய்து தருவார்கள்.[நாங்க செய்யும் முறை இப்படிதான்]

 இது ஜெய்லானி அண்ணாவுக்காக சென்ற வெள்ளியன்று செய்யச்சொல்லி. இரு குடும்பங்கள் சாப்பிட்டோம். அண்ணாத்தே உங்க புண்ணியத்தில் ஒரே வாரத்தில் இருமுறை இச்சாப்பட்டு கிடைத்தமைக்கு மிக்க நன்றிங்கண்ணா!

இது ரைஸ்குக்கரில் எனக்குமட்டும் செய்தது அதுவும் புழுங்கல் அரிசியில் எப்புடி

                                  
இதுக்கு சைடிஸ்
வெரும் வெள்ளரியும் தயிரும் மல்லியும் உப்பும்
காராமணி மிச்சரும் மிக்ஸிங் கூட வே பேரிச்சமழமும்
எப்படி...
இப்படி அடிக்கடி ஏதாவது புது டிஸ்ஸா கேளுங்க அந்த சாக்கில் நாம் வெளுத்து வாங்கிருவோம்...

டம்ளிங் [அரபி உணவு]



டம்ளிங் [அரபி உணவு]

கோதுமை மாவு 2 கப்
ஈஸ்ட் சின்ன ஸ்பூன் அளவு
உப்பு
தண்ணீர் 1 கப்
ஆயில் பொரித்தெடுக்க
அஷீ Dத் பேரிச்சம்பழச்சாறு 
அல்லது தேன் 



கோதுமை மாவுடன் தண்ணீர் ஈஸ்ட் உப்பு சேர்த்து நன்றாக அடித்து பிசையவும் சற்று இளகளாக அதௌ அடித்துபிசையும்போதே பொங்கியதுபோல் வரும் 15 நிமிடம் பிசைந்து வைக்கவும்.
கடாயில் ஆயில் சூடானதும் கைகளிலேயே சிறிய வெங்காயம் அளவுக்கு
எடுத்து எடுத்து போடவும் மிதமான தீயில் வைக்கவும் அடுப்பை.
குளோப்ஜாமூன் போலவே சற்று உப்பியதாக வரும் அதை எடுத்து
தேவையான அளவு பைவுல்களில் வைத்து 


அஸீதையோ. தேனையோ 
அதன் மேல் ஊற்றி சாப்பிட்டால் அப்பப்பா அதன் டேஸ்ட் இருக்கே அது சாப்பிட்டால்தான் தெரியும் மிருதுவாய் சாப்பிட ருசியாய் இருக்கும்.


அரபிகளின் இனிப்பு பதார்த்தங்களில் இதுவும் ஒரு மெயின் டிஸ். இங்கே ஃபெஸ்டிவேல் மற்றும் விசேச நாட்களில் அவர்கள் இதை சுட்டும் தரும்போதே இரண்டு மூன்று பிளேட் வாங்கி அப்படியே சாப்பிடுவோமுல்ல. சிறிய பிளேட் 5 திர்கம்தான்.

நல்ல மனைவி அமைய..



[அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா? ]
''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)

கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)]
''பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்''
(ஸஹீஹுல் புஹாரி: 5186)

இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்.

1. கணவன் வீட்டில் நுழையும் போது சலாம் கூறுதல்.
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ''நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை(முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 93)

மேற்படி நபிமொழி யிலிருந்து கணவன் மனைவி விரும்பும் பாசமும் நேசமும் உருவாவதற்கு அடிக்கடி சலாம் கூறிக்கொள்வது சிறந்த வழியாகும். குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் தம்பதிகள் இவ் அடிப்படை சுன்னாவை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இல்லறம் இனிக்க வாழலாம்.

2. வாயில் துர்வாடை வீசா வண்ணம் பல்துலக்குவதன் மூலம் சுகந்தத்தைப் பேணுதல்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்துலக்குவார்கள்'' (நூல்: முஸ்லிம் 424) கணவனின் வருகையை எதிர்பார்த்திருந்த மனைவி அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வேளை, கணவனின் வாயில் இருந்து வரும் துர்வாடை அவளை முகம் சுளிக்கச் செய்கின்றது. ஆகையால் பல்துலக்கி வாயை சுத்தம் செய்வதானது இல்லறத்தை செழிப்பாக்கும்.

3. மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)

நல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது வழக்கொழிந்து செல்கின்றது.

5. மனைவியின் உதவிகளை வரவேற்றல், நன்றி செலுத்ததல்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வக்கு நன்றி செலுத்தமாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்-7313) உங்களின் மனைவியரின் உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டும்போது மென்மேலும் உங்கள் மனைவியின் பாசமும், பரிவும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

6. வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.

காலத்தின் தேவை அதிகரித்துவர இல்லத்து பணிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முன்னொரு காலத்தில் தமது அன்றாட வேலைகளுக் கப்பால் பலமணி நேரம் ஓய்வெடுத்து திக்ர், குர்ஆன், திலாவத் மற்றும் ஸலவாத் ஓதுதல் போன்ற உபரியான வணக்கங்களில் எமது பெண்கள் ஈடுபட்டுவந்துள்ளனர்.

ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் ''பிஸி, மற்றும் நேரம் இல்லை'' போன்ற குரல்களே ஒலிக்கின்றன. ஒரு இல்லத்தரசியைப் பொறுத்தவரை திருமணம் முடித்தது முதல் பேரப்பிள்ளை காணும்வரை அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்றாள்.
வீட்டுச்சுத்தம், துணிதுவைத்தல், பிள்ளைப் பராமரிப்பு, சமைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதற்குள் கணவனுக்காக செய்கின்ற பணிகளும் ஏராளம். ஆனால் கணவன்மார்களில் பலர் அற்பவிடயங்களுக்கெல்லாம் மனைவி மீது சீற்றம் கொள்கின்றனர். எமது முன்மாதிரி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ஆயிஷா அவர்கள் தரும்
விவரணம் இதோ :

''பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இல்லத்துப் பணியின் பங்குபற்றி வினவப்பட்டபோது,

நபியவர்கள் தமது துணியைத் தைப்பவராகவும் காலணியை சீர்செய்பவர்களாகவும் ஏனைய ஆண்கள் தமது வீடுகளில் செய்வதையெல்லாம் தாங்களும் செய்பவர்களாக இருந்தார்கள்.'' (நூல்: அஹ்மத்- 24346, இப்னுஹிப்பான்-5155)

7. எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பதைத் தவிர்த்தல்.
''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு
குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: முஸ்லிம்-2915.

இன்று சில ஆண்கள் தான் சந்திக்கும் அனைத்துப் பெண்களிடமும் உள்ள எல்லாப் பண்புகளும் தன் மனைவியிடமும் ஒன்று சேர அமைந்திருக்க வேண்டுமென ஒப்பீட்டாய்வு செய்கின்றனர். அவள் மேற்கொள்ளும் பல பெறுமதியான பணிகளைக் கூட கண்டுகொள்வதில்லை.
''நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன''
. (அல்குர்ஆன் 30:21)

அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா?

01. அல்லாஹ் தனக்கென பங்கு வைத்ததைப் பொருந்திக் கொள்ளல்.
கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு
அதிகரிக்கும்.

02. மனைவியின் பாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளல்.

மகிழ்ச்சிமிக்க திருமண வாழ்க்கை உட்பட அனைத்து அம்சங்களுக்கும் பாசமே முக்கிய காரணியென்ற வகையில், இஸ்லாம் அனுமதித்த வழிகளில் மனைவியின் அன்பை அதிகரிக்க,
கணவன் முயற்சியெடுத்தல் வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுதல், உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லல், அன்பளிப்புகள் கொடுத்தல், சுற்றுலாக்கள் செல்லுதல் போன்ற
இன்னோரன்ன அம்சங்கள் மூலமே இருவருக்கிடையிலான பாசமும் பரிவும், நேசமும் நெருக்கமும் அதிகரிக்கின்றது.

03. கருத்து முரண்பாடு ஏற்படும் போது உருவாகும் பிரச்சினைகளைப் பொருட் படுத்தாதிருத்தல்.
எந்த வினாடியிலும், எந்தக் காரணியாலும் கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள இடம் வீடு. கருத்துக்கள் முரண்படுவதென்பது ஓர் இயற்கையான அம்சம். எல்லா நோய்க்கும் மருந்துண்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு என்பார்கள். ஆகையால், கணவன், மனைவியரிடையே இவ்வாறான கருத்து முரண்பாடு ஏற்படும்; போது, இஸ்லாம் கூறும் பொறுமை, ஆறுதலான உரையாடல், அமைதி விவாதம் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து, சந்தோசம் நிலைக்கின்றது. இதுபற்றி எமது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

''பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில், பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தேவிடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.''  (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி 5186)

04. இல்லற இரகசியங்களைப் பாதுகாத்தல்.
''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)

கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)

05. மனைவி மீது அடக்குமுறைகளைக் கையாளாது நிர்வகித்தல்,
''சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அழ்ழாஹ்வின் பாதுகாவல்மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.''  (அல்குர்ஆன் 4:34)

மேற்படி கணவன் மனைவியை நிர்வகிப்பவன் என்பதனால் அடக்கியாள்பவன், பெருமைக்குரியவன் என ஊரார் புகழ வேண்டுமென்பது பொருளாகாது.மாறாக கனிவுதரும் வார்த்தைகளால் தன் துணைவியைக் கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.

மனைவியை புரிந்து கொண்டாலே மகிழ்வான இல்லறம்!




திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.

திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

''நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்'' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ يَحِلُّ لَكُمْ أَن تَرِثُواْ النِّسَاء كَرْهًا وَلاَ تَعْضُلُوهُنَّ لِتَذْهَبُواْ بِبَعْضِ مَا آتَيْتُمُوهُنَّ إِلاَّ أَن يَأْتِينَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ وَعَاشِرُوهُنَّ بِالْمَعْرُوفِ
فَإِن كَرِهْتُمُوهُنَّ فَعَسَى أَن تَكْرَهُواْ شَيْئًا وَيَجْعَلَ اللّهُ فِيهِ خَيْرًا كَثِيراً
''நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களைக் கட்டாயப்படுத்தி அவர்களுக்கு வாரிசாக ஆவது உங்களுக்கு ஹலால் (அனுமதி) இல்லை.
அவர்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலில் ஈடுபட்டால் தவிர அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை எடுத்துக் கொள்வதற்காக அவர்களைத் தடுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்! அவர்களுடன் நல்ல முறையில் இல்லறம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால் நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடக் கூடும்'' 
 (அல்குர்ஆன் 4:19)

இவ்வசனத்தின் இறுதியில் மனைவியருடன் அழகிய முறையில் இல்லறம் நடத்துமாறு அல்லாஹ் வலியுறுத்துகிறான். இது எல்லோரும் வலியுறுத்துகின்ற சாதாரண விஷயம் தானே என்று நினைத்துவிடக் கூடாது. ஏனெனில் இனிய இல்லறம் நடத்துமாறு வெறும் அறிவுரை மட்டும் இங்கே இடம் பெறவில்லை. மாறாக இனிய இல்லறத்துக்கு எது முக்கியமான தடையாக இருக்கிறதோ அந்தத் தடையையும் நமக்கு இனம் காட்டி அந்தத் தடையைத் தகர்த்தெறியும் வழிமுறையையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இல்லற வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டவர்களை ஆய்வு செய்தால் அக்கரைப் பச்சை மனப்பான்மை தான் பெரும்பாலும் காரணமாக இப்பதை அறிய முடியும்.

திருமணம் ஆன புதிதில் மனைவியின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும், அசைவும் கணவனுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். ஒரு குறிப்பிட்டக் காலத்தில் சலிப்புத்தட்ட ஆரம்பிக்கும். தூரத்தில் இருப்பதை இங்கிருந்து பார்த்தால் பச்சையாகக் காட்சியளிக்கும். அருகே சென்று பார்த்தால் ஏற்கனவே இருந்த இடம் பச்சையாகத் தோன்றும். பெரும்பாலான ஆண்களின் மனநிலை இப்படித்தான் அமைந்திருக்கிறது.

ஒரு காரணமும் இன்றி மனைவியை வெறுப்பார்கள். அவளது ஒவ்வொரு செயலிலும் குற்றம் கண்டு பிடிப்பார்கள்.திருமணம் நடந்து முடிந்த ஆரம்ப கட்டத்தில் அவள் மீது இருந்த மோகம் அவளது பெரிய குறைகளைக் கூட மறைத்தது என்றால் இப்போது ஏற்பட்ட சலிப்பு அவளது எல்லா நிறைகளையும் மறைத்துவிடும்.

இந்த மனப்பான்மையை மனிதன் குறிப்பாக ஆண்கள் - மாற்றிக் கொண்டால் மட்டுமே அவர்களது இல்லறம் சிறக்கும் என்று படைத்த இறைவனுக்குத் தெரியாதா என்ன?

அதைத் தான் இவ்வசனத்தின் இறுதியில் சொல்லித் தருகிறான். 'நீங்கள் எதையேனும் வெறுப்பீர்கள். ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்' என்று அல்லாஹ் குறிப்பிட்டதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நமக்கு மனைவியைப் பிடிக்காமல் போய் விடலாம். நமக்குப் பிடிக்காமல் போய்விட்டதாக எடுத்த எல்லா முடிவுகளும் சரியானதாக இருக்காது. பல நேரங்களில் சரியான காரியங்களே நமக்குப் பிடிக்காமல் போய் விடும். கெட்ட விஷயங்கள் பிடித்துப் போய்விடும்.

எனவே பிடிக்கவில்லை என்ற காரணத்தைப் பெரிதாக்கி இனிய இல்லறத்தைப் பாழாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று காரணம் கூறி அவளை வெறுப்பதை விட்டு உங்களுக்குப் பிடித்த அம்சங்கள் அவளிடம் ஏராளமாக இருப்பதைக் கண்டு திருப்தியடையுங்கள் என்று அல்லாஹ் அறிவுரை கூறுகிறான்.

''இறை நம்பிக்கையுள்ள ஆண், இறை நம்பிக்கையுள்ள தனது மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணம் அவனுக்குப் பிடிக்காவிட்டால் அவளிடம் இவன் விரும்புகின்ற வேறு நல்ல குணம் இருப்பதைக் காண்பான் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

மனைவியைப் பிடிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டு இந்தக் காரணத்துக்காக இன்னொருத்தியை மணந்தால் அவளிடமும் பிடிக்காதவையும் சேர்ந்தே தான் இருக்கும். எந்த ஆண் மகனுக்கும் நூறு சதவிகிதம் பிடித்த பெண் அமைந்ததில்லை. அமையப் போவதும் இல்லை.

பல நல்ல குணங்களும் சில கெட்ட குணங்களும் கொண்டவளாகத் தான் எந்தப் பெண்ணும் இருப்பாள். அதைச் சரி செய்யப் போகிறேன் என்று போனால் அது நடக்கவே நடக்காது என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்குக் கற்றுத் தருகின்றார்கள்.

''பெண்கள் வளைந்த விலா எலும்புகளைப் போன்றவர்கள். அதை நிமிர்த்தலாம் என்று முயற்சித்தால் அதை நீ உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளிடம் இன்பம் அடைந்து கொள்! என்பது நபிமொழி.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

நமது முதலாளி, நமது நண்பன், நமது ஆசிரியர் இப்படிப்பட்ட குணம் உடையவர் என்று ஏற்கனவே நாம் தெரிந்து வைத்திருக்கும் போது - அவர் அப்படித்தான் இருப்பார் என்பதை முன்பே புரிந்திருக்கும் போது அதற்கேற்ப நாம் நடந்து கொள்வோமே தவிர அவரை மாற்ற முயலமாட்டோம்.

இதுபோல் தான், பெண்களுக்கு என்று தனிப்பட்ட போக்குகள் உள்ளன. ஆண்களின் நிலையிலிருந்து பார்த்தால் அந்தப் போக்குகள் ஆத்திரத்தை ஏற்படுத்தும் விதமாகத்தான் இருக்கும். எதற்கெடுத்தாலும் அழுவது, முகத்தை உர்ரென வைத்துக் கொள்வது, எவ்வளவுதான் வாரி வாரிக் கொடுத்தாலும் அதில் திருப்தி கொள்ளாமல் இருப்பது போன்ற தன்மைகள் இல்லாத பெண்களைப் பார்ப்பது அரிது.

இதுதான் பெண்களின் சுபாவம் என்பதை நாம் மனரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆண்களிடம் உள்ளது போன்ற குணத்தைப் பெண்களும் பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை.அது ஒருக்காலும் நடக்கப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். மேற்கண்ட நபிமொழி இதைத் தான் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறது.

இவ்வளவு அர்த்தங்களையும் உள்ளடக்கித் தான் உங்களுக்குப் பிடிக்காத எத்தனையோ விஷயங்களில் எவ்வளவோ நன்மைகளை அல்லாஹ் அமைத்திருக்கிறான் என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான்.
இனிய இல்லறத்தில் இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் பல உள்ளன. இப்போது புரிந்து கொள்ள வேண்டிய ஒரே விஷயம் இது தான்.

மனைவியர் விஷயத்தில் ஆண்கள் தமது மனப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.ஆண்கள் என்பதால் பெண்களிடம் காணப்படாத சில தன்மைகள் எப்படி தங்களிடம் உள்ளதோ அதுபோலவே பெண்களிடமும் அவர்களுக்கே உரித்தான சில தன்மைகள் இருக்கத் தான் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த மனமாற்றம் ஏற்பட்டு விட்டால் இல்லறம் இனிமையாக அமையும். ஆண் வர்க்கத்துக்கு அல்லாஹ் கூறும் அறிவுரையை அவர்கள் கடைப் பிடிக்கட்டும்!