Translate

Sunday, July 22, 2012

வெண்டைக்காயின் மருத்துவக் குணங்கள்


வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா. அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.
ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப் கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில் இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.
பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன் ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.
அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து, ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும் பயன்படுத்துகின்றனர்.
வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில் இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.
வெண்டையின் விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.
இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர் தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால், வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம். அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.
வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல் பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம் இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும். இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய் அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.

அரிப்பு ஏற்பட்டால் ஆராயுங்கள்


பெரும்பாலானவர்கள் `அரிப்பு’ என்பது ஒருவிதமான நோய் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அரிப்பு என்பது நோயல்ல என்னும் உண்மையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளில் தோன்றும் பலவகையான நோய்களின் வெளிப்பாடே அரிப்பு. உதாரணமாக, எந்த இடத்தில் உங்களுக்கு அரிப்பு ஏற்படுகிறதோ, அந்த இடத்தில் ஏதோ நோய் தோன்ற போகிறது எனத் தெரிந்து கொள்ளலாம். அதாவது நோய் வருவதற்கு முன்பே அதை அறிவிக்கும் ஒரு கருவிதான் அரிப்பு.
பெரும்பான்மையான பெண்களுக்கு மிகவும் சங்கடமான சூழ்நிலையை உருவாக்குவது பிறபுறுப்பில் ஏற்படும் அரிப்பு. சில பெண்களுக்கு அளவுக்கு அதிகமாக வெள்ளைபடும். அது பிறபுறுப்பில் உள்ள உதட்டு பகுதியில் படிவதால், அந்த வெள்ளையிலுள்ள நுண்ணுயிரிகள் உதடுகளைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்துகின்றன. சில வகையான பூஞ்சைக் காளான்கள் அதிகமாக பெருகி வளரும்போது தாங்க முடியாத அரிப்பை உண்டாக்குகின்றன.
கருவுற்ற காலங்களில் கர்பபை வாசல், பிறப்புறுபு போன்ற வற்றில் அளவுக்கு அதிகமான சுரப்பிகள் சுரக்கின்றன. இவை புறபகுதியில் ஏற்படும்போது அரிப்பு ஏற்படுகிறது. வயதாகும்போது பெண்களின் பிறபுறுப்பில் சிதைவு மாற்றம் நிகழ்வதாலும் அரிப்பு உண்டாகும். மஞ்சள் காமாலை, ரத்தசோகை, வைட்டமின் சத்துக் குறைபாட்டினால் உடலின் பிற பகுதிகளில் மட்டுமின்றி, பிறபுறுப்பிலும் அரிப்பு ஏற்படுவதுண்டு.
குடாக இருக்கும் பெண்களின் வயிறு, தொண்டை போன்ற இடங்களில் உள்ள மடிப்புகளில் அழுக்குகள் தேங்குகின்றன. இவற்றில் நுண்ணுயிரிகள் உற்பத்தி அடைந்து அரிப்பு ஏற்படுகிறது. உடல் அழுத்தம் காரணமாக பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கசிவதாலும் பிறபுறுப்பில் அரிப்பு உண்டாகும். இவ்வாறு இருக்கும்போது சில பெண்கள் மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே பலவகையான மருந்துகள், களிம்புகளை வாங்கி பூசுகிறார்கள். இது தவறு. அரிப்பிற்கான காரணத்தை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மருத்துவரின் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொழுப்பை குறைக்கும் முட்டை இதயநோயைக் குணப்படுத்துகிறது.


முட்டை சைவமா? அசைவமா? என்றொரு கேள்வி நீண்ட நாட்களாக நம்மிடையே உண்டு. சிலர் அதை சைவம் என்றும், பலர் அதை அசைவம் என்றும் கூறுகின்றனர். அமெரிக்காவில் நடந்த ஒரு ஆய்வில் 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.
இந்த ஆய்வில் இவர்களுக்கு உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதயநோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொழுப்பு இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொழுப்பு அதிகரிக்கவில்லை.
அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. அதில் தான் இந்த உண்மைகள் வெளிவந்தன. முட்டையில் கொழுப்பு இருப்பது உண்மை. ஆனால் அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்துக்கு எந்த விதமான கெடுதலையும் செய்யாது என ஆய்வு தெரிவிக்கிறது.
சரிவிகித உணவு தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்க வேண்டாம். முட்டையில் தீய கொழுப்புடன் கூடிய நல்ல கொழுப்பு அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன.
எனவே தீய கொழுப்பு இரத்தத்தில் சேராது. இத்துடன் இதயத்துக்குப் பாதுகாப்பான போலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன என்கின்றனர் மருத்துவர்கள்.
1976-ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த மருத்துவ தாதிகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இந்த ஆய்வு 2 வருடம் நடந்தது.
1986-ம் ஆண்டு முதல் அமெரிக்க பல் வைத்தியர்கள், கண் வைத்தியர்கள், கால்நடை வைத்தியர்கள் தினமும் முட்டை சாப்பிட்டனர். இவர்களுக்கு கொழுப்பின் அளவு, 12 ஆண்டுகள் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.
80 ஆயிரம் மருத்துவர் தாதிகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவ குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவ குறிப்பேடுகள் தெரிவிக்கும் உறுதியான தகவல்கள்: தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்பதுதான்.
சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். இதில் வெண்ணெய், பன்றிக்கறி, பாம் ஆயில் போன்றவை சேர்த்துச் சாப்பிட்டால் கெடுதல் தான். நீரிழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். வைத்தியர்களின் அறிவுரைப்படி வாரம் ஒரு முட்டை சாப்பிடலாம்.

குழந்தையின் எடை அதிகமா இருக்கா? முதல்ல கவனிங்க

கர்ப்பம் தரிக்கும் போது மருத்துவர்கள் ஆலோசனை என்னவென்று கேட்டால், சரியான எடை இருக்க வேண்டும் என்பது தான். மேலும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க எளிதான உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும் என்றும் சொல்வார்கள். ஏனெனில் குழந்தை கருவில் இருக்கும் போது அதிக எடையோடு இருந்தால், பிறந்த பின்னும் குழந்தை குண்டாக இருக்கும். ஆகவே குழந்தையின் எடை அதிகமாக இல்லாமல் சரியான அளவு இருக்க குழந்தையை பிறந்ததிலிருந்தே சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு குழந்தை நல மருத்துவர் கூறும் பராமரிப்பு அறிவுரைகளை படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
1. குழந்தை கருவில் இருக்கும் போதே தினமும் உடல் எடையை தாயானவள் பரிசோதிக்க வேண்டும். ஒரு வேளை கருவில் இருக்கும் போது தாயின் எடை அதிகரித்தால், பிறந்த பின் குழந்தையும் அதிக எடையுடன் இருக்கும். ஆகவே அப்போது குழந்தையின் நலத்துக்காக தாய், உணவில் ஒரு சில டயட் அல்லது எளிய உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் குழந்தை அதிக எடையுடன் இல்லாமல் இருக்கும்.
2. குழந்தை அதிக எடையோடு இல்லாமல் இருக்க, குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். ஏனெனில் தாய்ப்பாலானது பாட்டில் பாலை விட ஆரோக்கியமானது. அவ்வாறு தாய்ப்பால் கொடுத்தால் குழந்தையின் எடை கண்டிப்பாக குறையும். மேலும் அவ்வாறு தாய்ப்பால் கொடுத்தால், குழந்தை பசிக்கு ஏற்றவாறு மட்டுமே குடிக்கும்.
3. சில சமயங்களில் பரம்பரை ஜீன்கள் காரணமாகவும் குழந்தைகள் அதிக எடையுடன் இருக்கும். அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் யாராவது அதிக எடையுடன் இருந்தாலும் குழந்தை குண்டாக இருக்கும். ஆகவே அப்போது குழந்தையை குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துச் சென்று, அவரது ஆலோசனையின் படி மருந்துகளை குழந்தைக்கு கொடுத்து, குழந்தையின் எடையை குறைக்கலாம்.
4. குழந்தை அழ ஆரம்பித்தால் சில தாய்மார்கள் உடனே பாலைக் கொடுப்பார்கள். முதலில் தாய்மார்கள் குழந்தை பசிக்கு மட்டும் அழாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு தெரியாமல் குழந்தைக்கு அழும் போதெல்லாம் பாலைக் கொடுத்தால், குழந்தைக்கு அதுவே பழக்கமாகிவிடும். ஆகவே அப்போது அவர்களை சமாதானப்படுத்த வேறு வழிகளை மேற்கொள்ள வேண்டும். குழந்தை அதிக எடையுடன் கொழுக் மொழுக் என்று இருந்தால் நன்றாகத் தான் இருக்கும், ஆனால் அது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
5. குழந்தையின் எடை அதிகமாக இருக்கும் போது குழந்தைக்கு சிறிது டயட் ஆனது தேவைப்படுகிறது. ஆகவே அப்போது குழந்தைக்கு மருத்துவரின் ஆலோசனையின் படி, ஜூஸ் மற்றும் சிறிது திட உணவுகளை கொடுக்கலாம். அதற்காக ஓவர் டயட் கூடாது. சில பெற்றோர்கள் குழந்தைக்கு கிரீம் பால் மற்றும் வெண்ணெயை கொடுப்பார்கள். அது எதிர்காலத்தில் அவர்களுக்கு மிகவும் சிரமத்தை தரும்.
ஆகவே மேற்கூறியவற்றையெல்லாம் மனதில் கொண்டு, குழந்தையின் உணவுப் பொருட்களை, அவர்களது எடையை சரியாக பராமரித்து வந்தால், ஆரோக்கியமாக இருப்பதோடு, குழந்தையும் ஃபிட்டாக அழகாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.