Translate

Wednesday, October 23, 2013

கப்ரின் மேல் பள்ளிவாசல் கட்டலாமா


கப்ருக்கு மேல் பள்ளிவாசல் கட்டுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 437حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَاتَلَ اللَّهُ الْيَهُودَ اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ رواه البخاري அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : "அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! தம் இறைத் தூதர்களின் மண்ணறைகளை அவர்கள் வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள்'' என அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள். புகாரி (437) 427 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ هِشَامٍ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّ أُمَّ حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمْ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ فَأُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ رواه البخاري ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : உம்மு ஹபீபா அவர்களும், உம்மு சலமா அவர்களும் (அபிசீனிய ஹிஜ்ரத்தின் போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப் படங்கள் கொண்ட ஒரு கிறிஸ்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "(அவர்கள் எத்தகையவர்கள் என்றால்) அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்து விடும் போது அவரது சமாதியின் மீது வணக்கத் தலம் ஒன்றைக் கட்டி அதில் (அவருடைய) அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள்'' என்று கூறினார்கள்.             புகாரி (427) கப்ரு உள்ள இடத்தில் தொழுவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 432 حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ أَخْبَرَنِي نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلَاتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا رواه البخاري நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களது தொழுகைகளில்ல் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை (தொழுகை நிறைவேற்றப்படாத) கப்ரு (சவக்குழி)களாக ஆக்கி விடாதீர்கள். புகாரி (432) கப்ருகளுக்கு மேல் பள்ளிமட்டுமல்ல பொதுவாக எந்த ஒரு கட்டிடத்தையும் கட்டுவது கூடாது. 1610 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ رواه مسلم ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும் அதன் மீது உட்காருவதையும் அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். முஸ்லிம் (1765) கப்ரின் மீது பள்ளிவாசல் கட்டும் நிலை ஏற்பட்டால் அதற்கு முக்கியமான நினந்தனை உள்ளது. அந்த இடத்தை ஆழமாகத் தோண்டி அதில் எலும்புகள் ஏதும் இருந்தால் அவற்றை வேறு இடத்தில் புதைக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் கட்டப்பட்ட மஸ்ஜிது நபவீ பள்ளிவாசல்  முன்னர் அந்த இணை வைப்பாளர்களின் மண்ணறையாக இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த மண்ணறைகளைத் தோண்டி அதை அப்புறப்படுத்திவிட்டு பிறகே அதன் மேல் பள்ளிவாசலைக் கட்டினார்கள். 1868 حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ عَنْ أَبِي التَّيَّاحِ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَدِمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَأَمَرَ بِبِنَاءِ الْمَسْجِدِ فَقَالَ يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي فَقَالُوا لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ فَأَمَرَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ ثُمَّ بِالْخِرَبِ فَسُوِّيَتْ وَبِالنَّخْلِ فَقُطِعَ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ رواه البخاري அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது பள்ளிவாசல் கட்டுமாறு கட்டளையிட்டார்கள்; "பனூ நஜ்ஜார் குலத்தினரே! (உங்கள் இடத்தை) என்னிடம் விலை கூறுங்கள்!'' என்று கேட்டார்கள். பனூ நஜ்ஜார் குலத்தினர் "இதற்குரிய விலையை அல்லாஹ்விடமே நாங்கள் எதிர்பார்க்கிறோம்!'' என்றனர். (அவ்விடத்திலிருந்த) இணை வைப்பவர்களின் சவக்குழிகளைத் தோண்டுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்; அவ்வாறே அவை தோண்டப்பட்டன. அவர்களின் கட்டளைப்படியே பாழடைந்த இடங்கள் சீர் செய்யப்பட்டன; பேரீச்ச மரங்கள் வெட்டப்பட்டன; (வெட்டப்பட்ட) பேரீச்ச மரங்களை பள்ளிவாசலின் கிப்லா திசையில் வரிசையாக (நபித்தோழர்கள்) நட்டனர். புகாரி (1868 எலும்புகளை அப்புறப்படுத்தாமல் கப்ரில் பள்ளிவாசல் கட்டுவது கூடாது. கப்ர்கள் மீது பள்ளிவாசலைக் கட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளதால் அவ்வாறு கட்டப்பட்ட கட்டிடங்கள் பள்ளிவாசலின் அந்தஸ்தைப் பெறாது. அங்கு சென்று தொழுவதும் கூடாது.

No comments:

Post a Comment