Translate

Friday, July 12, 2013

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.

"கருப்புக் கயிற்றிலிருந்து வெள்ளைக் கயிறு உங்களுக்குத் தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்!" என்ற (திருக்குர்ஆன் 02:187) இறைவசனம் அருளப்பட்டது! அப்போது அவ்வசனத்தில் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் இருக்கவில்லை! அப்போதெல்லாம் மக்கள் நோன்பு நோற்க நினைத்தால் ஒரு காலில் வெள்ளைக் கயிற்றையும் கட்டிக் கொள்வார்கள். அவ்விரண்டும் கண்ணுக்குத் தெரியும்வரை உண்டு கொண்டே இருப்பார்கள்! பிறகுதான் 'மினல் ஃபஜ்ரி (அதிகாலை எனும்)' என்னும் வாசகம் (அவ்வசனத்துடன்) இறங்கியது. 'இரவையும் பகலையுமே அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகிறான்" என்று அப்போதுதான் மக்கள் விளங்கினர்!" 
(பார்க்க: 590ல் உள்ள02:187ம் எண் இறைவசனத்தின் மொழியாக்கம்) 

No comments:

Post a Comment